Advertisement

ஒன்றுக்கு பத்து தோட்டாக்கள் அனுப்புவோம்: பாக்.,கிற்கு எச்சரிக்கை

ஸ்ரீநகர்:பாகிஸ்தானின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் 10 தோட்டாக்களை இந்திய ராணுவம்அனுப்பும் என ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் தெரிவித்துள்ளார்.ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியாவை சேர்ந்த 40 வயதான பெண்மணி உயிரிழந்தார்.
இது குறித்து ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியதாவது:
பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு அவர்கள் கடும் விளைவை சந்திப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தோட்டாவுக்கு பதிலாக இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை திருப்பி அனுப்பும்.பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (19)

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  பாகிஸ்தானையும் சீனாவையும் அடக்க வேண்டும் என்பது சரி... ஆனால் " மோடி தலைமையில் இந்தியா மிக விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கிறாரோ."... என்று சொல்லி சிரிப்பு மூட்டி விட்டீர்களே....

 • cvm -

  மலரின் மகள் கருத்து மிகவும் சரி. பெல்லட் குண்டுகள் உபயோகிக்க கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் ராணுவம் எப்படி செயல்படும். மேலும், மனித உரிமை இயக்கங்கள் வேறு. இது போன்ற இயக்கங்களை பற்றி கவலை படாமல் ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து பாருங்கள். மத்தியில் உள்ள பிஜேபி அரசு இதை உடனே செய்யவேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறிவைத்து செயல்படும் அரசியல் கட்சி இதுவரை இந்தியாவை நாசமாகியது போதும். நமது பிரதமர் துணிவான சில முடிவுகளை எடுத்து இந்திய நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வேற எதாவது பேசுங்க, உங்க பேச்சு சிரிப்பா இருக்குது, எல்லோரும் அட்டகத்தி வீரர்கள்னு தெரிஞ்சி போச்சி, காத்தோடு சண்டை போடும் நவீன கத்தி சண்டை வீரர்கள்,

 • Indira -

  நமது ராணுவம் திருப்பி அடிக்க தான் செய்கிறது. சொல்லி விட்டு அடிப்பதோ அடித்து விட்டு விளம்பரம் தேடுவதோ கிடையாது. மானம் கெட்ட பாகிஸ்தான் திருட்டுத்தனமாக உடலை அப்புறப் படுத்தும். பிஓ கே யில் புகுந்து அடித்ததையே இல்லை என்றவர்கள்.

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  இனி நாம் எவ்வளவு தாக்கினாலும், பாரதத்தை உலக நாடுகள் பாராட்டும். பாகிஸ்தானின் வன்முறை உலகம் முழுவதும் தெளிவாக உணரப்பட்டு இருக்கிறது. தைரியமாக சரித்திரம் படைப்போம். பாகிஸ்தானுக்கு வால்பிடிக்கும் அமைதி மார்க்க விரும்பிகள் தாராளமாக அவர்களின் தாய் மண்ணிற்கு செல்லலாம். போதுமடா இந்த மத சார்பற்ற சாவகாசம்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சூடு பட்ட பூனை... திரும்ப வராது... பூனை சரியாக சூடுபடவில்லை போல உள்ளது...

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  ஒரு தோட்டாவுக்கு பத்து தோட்டா அணுப்புவீங்களா. மத்திய அரசு ஒத்துக்கிட்டாங்களா அப்புறம் அந்த பத்து தோட்டாக்களும் வெறும் இடத்தில அனுப்பி வேஸ்ட் பண்ணிட போறீங்க

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  பேசி பிரயோஜனம் இல்லை. உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்க சார். போர் வந்தால் துப்பாக்கி தூக்கிண்டு நீங்க போகப்போறது இல்லை. உயிர் எவ்வளவு உயர்ந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஒன்றுக்கு நூறு என்ற அளவில் தோட்டாக்கள் மட்டுமல்ல - எல்லைச்சாவடிகளையும் அடித்து நொறுக்கவேண்டும்...

 • Raj - Chennai,இந்தியா

  இவங்கள கொண்டு மொதல்ல எல்லைல நிறுத்தணும் அப்பறம் தெரியும் என்னா பேச்சு இது

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  வாய்சவடாலில் இந்திய அரசியல்வாதிகளுக்கு இணை உலகத்தில் யாருமே இல்லை.

 • Anandan - chennai,இந்தியா

  பேச மட்டுமே தெரிந்த அரசு.

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  மோடி தலைமையில் இந்தியா மிக விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கிறாரோ. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சீனாவும் + பாகிஸ்தான்னும் சேர்ந்து பிரச்னையை கிளப்பி, முன்னேற்றத்த்தை படுக்க பார்க்கின்றன. இதை மக்கள் புரிந்துகொண்ட மோடி கரத்தை / மத்திய அரசை வலுப்படுத்த வேண்டும்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அரசியல் ... அரசியல்... அரசியல்.... நொந்து போச்சு... ரிட்டயர் ஆகிட்டேன் இன்னும் துப்பாக்கி பிடிக்க முடியும்... திடம் இருக்கு.. ஆனால் இந்த அரசியாதிகளின் பேச்சு.... பேசாம எதிரிகளை போட்டு தள்ளாமல் இவர்களை போட்டாலே போறும் .... நாடு முன்னேறும்..... வெட்டி பேச்சு ... இப்படி பேசி பேசியே எத்தனை நாள்தான் முட்டாள்கள் தலையில் புளியை அரைப்பீர் (நான் மக்களை சொன்னேன் ... வேறு யாரும் கோயிக்கவேண்டாம்)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இது போன்று வாய்சவடால்கள் பேசி மக்களை இனியும் ஏமாற்றமுடிகிறதே இவர்களால். எங்கே நமது பக்கம் ஒரு பெண்மணி இருந்திருக்கிறாள், அதற்கு பதிலாக பத்து பாகிஸ்தான் வீரர்களை கொன்று காட்டுங்கள் அப்போது உங்களை நம்பலாம். வெட்டியாக பேசி பொழுதை கழிக்கிறார்கள். ராணுவத்திற்கான கட்டுப் பாடுகளை அகற்றி ராணுவத்தை ராணுவமா செயல் பட அனுமதித்தால் போதும். அவர்கள் பார்த்து கொள்வார்கள். வீரம் என்பது வெட்டி பேச்சில் இல்லை. இவர்கள் எதோ விஜய் படத்திற்கு வசனம் எழுதுவது போல தெரிகிறது.

 • Ganesh -

  Super

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பேசாதீங்க,மொதல்ல அனுப்புங்க..இதெல்லாம் கமுக்கமா செஞ்சதுக்கு அப்புறம் தானே வெளீல தெரியும்..

 • sham - riyadh,சவுதி அரேபியா

  Ayyia summa vetti pechu pesiye kaalathai otta vaam.. seyalil kaatungal.. pakistanai tarai mattam aakum vallamai nam raanuvathkku undu...aana neega vidamaattrirgl.arasiyal seiyya summa ippadi peela viduvathu vekka kedu..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement