Advertisement

காங்., கூட்டணியில் நிதிஷை தொடர்ந்து சரத் பவாரும் ஓட்டம்

புதுடில்லி:காங்., தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தை, தேசியவாத காங்., புறக்கணித்தது; இதனால், காங்., கூட்டணியில் இருந்து, நிதிஷை தொடர்ந்து, சரத் பவாரும் வெளியேற முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. நட்பு கட்சிகள் ஒவ்வொன் றாக வெளியேறி வருவதால், காங்., தலைவர் சோனியா, கடும் விரக்தி அடைந்துள்ள நிலை யில், மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள, துணைத் தலைவர் ராகுல் முயன்று வருகிறார்.
பார்லி., தேர்தல், 2019ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது.
காங்கிரசின் முயற்சியால், எதிர் கருத்துக்கள் உடைய, திரிணமுல் காங்., மற்றும் மார்க். கம்யூ., போன்ற கட்சிகள், ஓரணியில் வந்தன.

ஜனாதிபதி தேர்தல்ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்த லில், காங்., தலைவர் சோனியா தலைமை யில், ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, பொது வேட்பாளரை நிறுத்தின; எனி னும், அத்தேர்தலில், பா.ஜ., வென்றது. ஜனாதி பதி தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் கூட்டணி யில் இருந்து, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான, நிதிஷ் குமார், பா.ஜ., சார்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்ட, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்தார். இதை தொடர்ந்து, அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும், பா.ஜ.,வுடன் கைகோர்த்தார்.
இந்நிலையில், காங்., தலைமையிலான,
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் சம்பவம், மீண்டும் நடந்துள்ளது. எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகை யில், டில்லியில், நேற்று முன்தினம், சோனியா தலைமையில் கூட்டம் நடந்தது. காங்கிரசுடன், மார்க்.கம்யூ.,- இ.கம்யூ., - தி.மு.க., - திரிணமுல் காங்., - பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி உள்ளிட்ட, 16 கட்சிகள் பங்கேற்றன.பார்லி., குளிர்கால கூட்டத்தொடருக்கு முன், அனைத்து எதிர்க் கட்சிகளும் இணைந்து, நாடு முழுவதும், மக்கள் இயக்கம் நடத்த, கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.

புறக்கணிப்புஇதற்காக, அனைத்து கட்சிகள் அடங்கிய ஒருங் கிணைப்பு குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த, தேசியவாத காங்., இந்த கூட் டத்தை புறக்கணித்தது. அக்கட்சி தலைவர், சரத் பவார், சமீபகாலமாக, பா.ஜ., தலைவர் களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். எனவே, தேசியவாத காங்கிரசும், பா.ஜ., பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தோழமை கட்சிகள், அடுத்தடுத்து, பா.ஜ., பக் கம் சாய்வது, காங்., தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, மீத முள்ள தோழமை கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ., பக்கம் சாயாமல் தடுக்கும் நோக்கில், அவர்களை கண்காணிக்கும் வேலையை, துணைத் தலைவர் ராகுல் மேற்கொண்டு உள்ளார்.
தமிழகத்தில், அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்த போது, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பெரும் பான்மையை நிரூபிக்க, கூவத்துார் விடுதியில், எம்.எல்.ஏ.,க் கள் அடைத்து வைக்கப்பட்டிருந் தனர். அது போன்று, கூட்டணி கட்சி தலைவர் கள், ஆளும், பா.ஜ., பக்கம் சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கில், அவர்களை அரவணைத்து, வேண்டிய தேவைகளை நிறைவேற்ற
வேண்டிய சூழலில்,காங்.,துணை தலைவர் ராகுல் உள்ளதாக,அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஜ.த.,வுக்கு அமித் ஷா அழைப்புபீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலை வரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது, ஊழல் வழக்கு பதிவானதை அடுத்து, அக்கட்சியுடன் கூட்டணியை, முதல்வர் நிதிஷ் குமார் முறித் தார்.பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத் தார்; பீஹார் அமைச்சர வையில், தற்போது, பா.ஜ.,வும் இடம் பெற்றுள்ளது. நிதிஷ் குமார், சமீபத்தில், டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.இந்நிலையில், சமூக வலைதளமான, 'டுவிட் டரில்' அமித் ஷா கூறியதாவது:நிதிஷ் குமாரை சந்தித்து பேசி யது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்படி, அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சரத் யாதவ் நீக்கம்பீஹாரில், லாலு கட்சியுடனான உறவை முறித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த, நிதிஷ் குமாரின் முடிவுக்கு, ஐக்கிய ஜனதா தளத்திற்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர், சரத் யாதவ், அக்கட்சி, எம்.பி., அலி அன்வர் ஆகியோர் அதிருப்தியில் உள்ள னர். இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா குழு தலைவர் பதவியில் இருந்து, சரத் யாதவை நீக்கக்கோரி, அக்கட்சி, எம்.பி.,க்கள், நேற்று, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.
அந்த பதவிக்கு, புதிய தலைவராக, ஆர்.சி.பி. சிங்கை நியமிக்கும்படி, மனுவில் கூறியுள் ளனர். எனினும், கட்சி, எம்.பி.,யாக, சரத் யாதவ் தொடர்வார் என, ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (98)

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  குடும்பம் இத்தாலிக்கு ஓட வேண்டியது தான் பாக்கி. நேரு குடும்பம் அழிந்தால் தான் இந்தியா முன்னேற முடியும். காந்தி குடும்பம் வாழ்க பாரதம். வந்த மாதரம்

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  சூடா ஒரு ஐநூறு கட்டு பார்சல்...

 • Appu - Madurai,இந்தியா

  பிளாக் மெயில் மற்றும் அசிங்கமான அரசியல் சாக்கடை ஓட ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி..முதல் டாகட் ஐ டி ரைடு மிரட்டல், ஒத்துவந்தால் ரைடு மற்றும் குற்றங்களில் இருந்து நடப்பு ஆட்சியில் விலக்கு,,,ஆனால் காங்கிரசை விட்டு விலகி மெதுவாக பாஜக பக்கம் சாய்ந்துவிடவேண்டும்..நல்ல டீலிங்...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மூஞ்சியைப் பாருங்கள் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எந்த ஒரு வில்லங்கமும் ஏற்படக்கூடாது, இதுதான் இவர்களது கொள்கைகள், இவர்களை நம்பி இந்த நாடு இருக்கிறது, வந்தே மாதரம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கொலை அடித்த பல ஒலட்சம் கோடி பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு இடம் தேவை இதற்க்காகத்தான் இந்த தேசிய தலைவர்கள் காற்று உள்ள போதே தூற்றிக்கொள்கிறார்கள் ?

 • SaiBaba - Chennai,இந்தியா

  காங்கிரஸ்ஸிலிருந்து சோனியாவும் ராகுலும் இத்தாலியை நோக்கி ஓட்டம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  எதைப்பார்த்து பயந்தாரோ?

 • ravi -

  what ever good work has been done so far will be undone because of gst. people are being fleeced. wake up Mr. modi

 • Murugan - Mumbai

  கொள்ளைக்காரர்கள் உலகத்தையே வளைத்துப்போட்டாலும் என்ன பலன் திடீரென்று ஒருநாள் அவனும் அவன் கூட்டமும் ஒழிந்துபோகும் அவன் வளைத்துப்போட்ட சொத்துக்களை இன்னொரு சாதாரண மனிதன் அனுபவிப்பான்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  அரசியலில் இதெல்லாம் சகஜம் , பாஜக வோடு 25 ஆண்டு கூட்டணி கட்சியான சிவசேனா நாளை என்ன முடிவு எடுக்குமோ ? பாஜக அனுதாபிகள் எதற்கும் சரத்பவார் வருகை சந்தோசத்தோடு சிவசேனாவின் பிரிவு சோகத்திற்கும் தயாரா இருங்கள்.

 • rajan - kerala,இந்தியா

  மத்திய மாநில எதிர் கட்சிகளுக்கு எல்லாம் இப்போ ரைடு உதறலில் கிலி பிடிச்சு எங்கு போய் ஒளியலாம் என இடம் தேடுகிறான். கொஞ்ச நஞ்சமா ஆட்டையை போட்டானுக கோடிகளை அடிச்சு மாத்தி இப்போ அந்த கோடிகளை பாதுகாக்க எந்த கோடியில் போய் ஒளிந்து கொள்ளலாம் என ரூம் போட்டு ஆலோசிக்க ஆரம்பிச்சுட்டானுக. இங்கு தான் பிஜேபி இவனுகளுக்கு புகலிடம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இப்படியே போனால் இந்தியாவில உள்ள ஜெயிலில் இடம் பத்த வில்லை என்று வெளிநாட்டு ஜெயில்களை வாடகைக்கு எடுக்க வேண்டி வருமோ. முக்கால் வாசி அரசியல்வாதிகள் ஊழலில் திளைத்தவனுங்களாச்சே.

 • oliver - karimun,இந்தோனேசியா

  Bjp kaikuli pawar

 • makkal neethi - TVL,இந்தியா

  மகா கொள்ளை அடித்த்ததால் வாய் கோணலானது ..இப்பொழுது அதை சரி செய்ய் மீண்டும் கொள்ளைக்கூடம் தேடுகிறது இந்த பெரிய எலி

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அதற்கு சம்மதிப்பார்களா? மூணு கிலோ மூணு கோடி அவர்களுக்கு ஏற்புடைத்ததா? முன்னூறு கிலோ முன்னூறு கோடி என்றுதானே டிமாண்ட் செய்வார்கள். அதுவும் டாலரில் வேண்டும் அமெரிக்காவில் வேண்டும் என்றல்லவா கேட்பார்கள் என்று விவரம் அறியாதவர்கள் கூட கணிக்கிறார்களாமே? கூவத்தோர் பாணி அவர்களுக்கு நானோ போன்றது தான் அவர்கள் எதிரிபார்ப்பது மெகா ஜிகா டேரா. அடித்த கொள்ளையை பங்கு போட்டு தரவேண்டியது வருவதால், போகட்டும் வேண்டாம் என்று இருந்துவிடுவார்கள் அது தான் புத்தி சாலித்தனம் என்று பேச்சு வருகிறது.

 • kulandhaiKannan -

  BJP should stay clear of Pawar. He is the second most corrupt and opportunistic politician in the country. First one is inactive now.

 • Balaji - Khaithan,குவைத்

  எப்போதும் ஏதாவது பதவியில் இருந்துகொண்டு சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்றே அலைபவர் தான் இவர்..........

 • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

  காயந்த இலைகள் எப்படி மரங்களிலிருந்து உதிருமோ அப்படி இவர்களது சிந்தனைகளும் செயல்களும் மக்களை வழிநடத்த இனி தேவைப்பட மாட்டார்கள்.

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  Opportunist

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  நிதிஷ் பதவியையும் பாப்புலாரிட்டியையும் தக்கவைத்துக்கொள்ள பாஜகாவுடன் கூட்டுவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்... பவார் பல வழியிலும் சம்பாரித்த பணத்தை காத்துக்கொள்ள பாஜகவை தஞ்சம் அடைகிறார்... பாஜக இப்படி பவார், பன்னீர் என்று எல்லோருக்கும் கதவை திறந்து வைத்தால் அப்புறம் பொதுவாழ்வில் தூய்மை என்ற சித்தாந்தம் போய்விடும்...? பாஜக வோடு ஒப்பிடும்போது திமுகவே பரவாயில்லை...ஊழல் பன்னீரோடு கூட்டு வைப்பது ... போன்ற சீப் பாலிடிக்ஸ் செய்யவில்லை...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அட இது நல்ல செய்தி தானே. காங்கிரஸ் மஹாராஷ்டிராவில் தனிக்கட்சியாக வாய்ப்பு உருவாகிறது. இனி வரக்கூடிய காலத்தில் பாஜவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் காணாமல் போகப்போவது உறுதி.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  சரத் பவார் ஒரு பக்கா சந்தர்ப்பவாதி. மஹாராஷ்டிராவில் (சக்கரை)பணமூட்டை. சர்க்கரை இன்று இவ்வளவு விலை விற்பதற்கே இவரே முக்கிய காரணம். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமுற்றபோதும் இவர் மத்திய விவசாய மந்திரியாக இருந்து ஒன்றும் கிழிக்கவில்லை. எங்கே ரெய்டு முதலானவை வந்துவிடுமே என்று தற்போது BJP க்கு நெருக்கம் காட்டி வருகிறார்கள் .நமது முத்தமிழ் வித்தகர்,கர்நாடகாவில் தேவே கவுடா ,மகாராஷ்டிரத்தில் சரத் பவார்,பிஹாரில் லல்லு,உ.பி யில் முலாயம் சிங் இன்னும் சில பல அரசியல் வியாதிகள் நாட்டை விட்டு வெளியேற்றினால் இந்தியா உருப்படும்.வெளிநாட்டில் கடன் வாங்க வேண்டியதில்லை.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஏதேதோ அரசியல் கணக்குகளை போட்டு பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஒன்று தெரிகிறது. காங்கிரசும் கம்யூனிஸ்டும் நீதியுடன் இணைந்து குய்யோ முறையோ என்று கத்தி கொண்டே இருக்கட்டும். மற்றவர்களை எல்லாம் ஓரணியில் இணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரமாண்டமான வெற்றியை நோக்கி செல்வதாக தெரிகிறது தாமரை. உணர்ந்து கொண்டால் சரி. சுதாரித்து கொள்ளவேண்டும் காங்கிரஸ். அந்த ஊழல் குடும்பத்தை ஒதுக்கி விட்டு காங்கிரஸ் புதிய வேகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் சில தலைவர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பிராந்திய காங்கிரசை வளர்க்க வேண்டும். இந்த அன்னை அம்மா அண்ணன் குட்டி தலைவர், அக்கா பிரிக்கா என்று அவர்கள் பின்னால் செல்லாமல் தேவை பட்டால் அவர்களில் சிலரை திகாரில் வைத்து விட்டு காங்கிரஸ் பெரும் வளர்ச்சி கொள்ள காங்கிரஸ் முயல வேண்டும். காங்கிரசின் கொள்கைகள் சித்தாந்தங்கள் சிறந்தவை தான் அதை செயல்படுத்த தயாரில்லை அவர்கள் ஆகையால் தோல்வி முகம் நிரந்தரமாக தெரிகிறது. ஒதுங்காட்டும் அவர்கள், வளரட்டும் காங்கிரஸ் சரியா?

 • raja - Kanchipuram,இந்தியா

  கிடைப்பதை சுருட்ட மற்றும் சுருட்டியதை காப்பாற்ற முயல்வது உத்தமர்கள் ஆகிவிடாது

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  எல்லா சாக்கடையும் சப்ஜாடா கலக்கும் இடம் பாஜக.. ஆனா அது சுத்தம்.. எப்படி?

 • Munish - Bangalore ,இந்தியா

  காங்கிரஸ் கட்சியை பலபடுத்துவதை விட்டு அடுத்தவன் கால புடிக்க போறாங்க.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நிதிஷ் நேர்மையானவர். பவார் ஊழலின் மொத்த உருவம். பி ஜெ பி உஷாரா இருக்கணும்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஓட்டுவதில் அப்படி ஓர் ஆர்வம், இதனால் எல்லாம் காங்கிரஸ் ஒன்றும் பலவீனம் ஆகாது, பி.ஜெ.பி யை மக்கள் ஓட்டுவார்கள்,

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஒன்று சொல்கிறேன் (சக பாஜக ஆதரவாளர்கள் மன்னிக்கணும்), பாஜக இந்த முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்காவிட்டால் அதற்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும் ..... பதவியில் இல்லாத அரசியல்வாதிகள் நெருப்பில் நிற்பது போல உணர்வார்கள் .....

 • sam - Doha,கத்தார்

  முதலில் இந்த இரண்டு ஆட்களும் சந்தர்ப்ப வாதிகள். காலம் பதில் சொல்லும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அனைவரையும் அனுசரித்து போகும் தன்மை கிடையாது... இன்னும் சில நாள்களில் கையும் மறைந்து விடும்.,.. வெற்றிடமே எஞ்சி இருக்கும்...

 • Rags -

  அகமது படேல் தேர்வுக்காக நிகழ்ந்த போராட்டத்தில் ராகுல் குழூ காணவில்லை. முதலில் சோனியா இவர்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இப்போது சரத்பவார், சொம்புகளுக்கு புனிதர் ஆகிவிடுவார்........

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இதில் கூவத்தூர் எங்கிருந்து வந்தது ?

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  காங்கிரஸ் தனி மரம் ஆக்க படும்.

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  BJP too bad

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும் 2019 இல் தேறுவது கஷ்டம்....இந்தியா ஒலிக்கிறது என்று சீன் போட்டும் ஓரளவிற்கு நல்லாட்சி செய்த வாஜ்பாய் அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போன போது சாமானிய மக்களுக்கு எதிராக ஆட்சி புரிந்து வரும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது நடக்காது.....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கூட்டணிக்குள் குழப்பம்.. இவர்கள் நாட்டை ஆளப்போகிறார்களாம்... வெட்கம் கெட்டவர்கள்...

 • srisubram - Chrompet,இந்தியா

  பவார் ஒரு ஊழல் பேர்வழி , உடம்பு வேற சரியில்லை , கிழடு வேற . இந்த கிழட்டு , வியாதி பிடிச்ச , பணவெறி பிடிச்ச தருதலைகள் , காங்கிரஸ் பக்கம் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன . infact if pawar goes to bjp , congress has to celebrate it. coz , congress has last Maha , due to his daughter and her siblings arrogance in the Maha. பொது கிணற்றில் தண்ணீர் ஒரு குடம் இழுத்து (90 அடி ஆழமுள்ள கிணறு ) எடுத்து செல்ல 25 ரூபாய் தரவேண்டும் என்று வற்புறுத்தி பிடுங்கிக்கொண்டவர் , பவார் அவர்களின் மகள் ..பவார் போனால் காங்கிரஸ்க்கு நன்மை ..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவரை வெளியேற்றவெல்லாம் கஷ்டப்படவே வேண்டாம் ஆண்டுக்கணக்கில் பதவியின்றி இருப்பது இவருக்கு பொறுக்கவில்லை. போதாததற்கு மகளின் மீது ஊழல் புகார்கள் சிங்கப்பூர் குடிமகள் எனக் கூறிக்கொண்டு இங்கு பதவிக்கு அலைபவர் நுணலும் தன் வாயால் கெடும் இவர் வாய்திறந்தாலே கெடுதல்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்" என்பது போல் பாஜக என்ற முரட்டு அண்ணன் பயமுறுத்தும் பொழுது சரத் பவார் எம்மாத்திரம்? கருணாநிதியின் புகழை (கட்சியை, கூட்டணியை உடைப்பது) பாஜக தகர்த்து வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்று ஓவர் நைட்டில் அறிவித்தது மாதிரி "அனைத்து எதிர் கட்சி தலைவர்களும் சுதந்திர தினத்தில் இருந்து பாஜக வில் வலுக்கட்டாயமாக இணைக்கப்படுகிறார்கள்" என்று அறிவித்து விடலாம்.

 • murugu - paris,பிரான்ஸ்

  முன்னதாக யோகி ஆதித்யநாத் தின் எம்.பி., தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.இதற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்துவோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement