Advertisement

எகிப்தில் ரயில் விபத்து பலி 44 ஆக உயர்வு

கெய்ரோ, எகிப்தில், இரண்டு ரயில்கள், நேருக்கு நேர் மோதிய விபத்தில், 44 பேர் உயிரிழந்தனர்; 180 பேர் காயமடைந்தனர்.ஆப்பிரிக்க நாடான, எகிப்து தலைநகர், கெய்ரோவில் இருந்து சென்ற ரயில், மற்றொரு ரயிலுடன் நேற்று முன்தினம், நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், இரு ரயில்களின் பெட்டிகள் நொறுங்கி, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர். இந்த விபத்தில், 29 பேர் பலியாகினர். 180 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நேற்று, சிகிச்சை பலனளிக்காமல், 15 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை, 44 ஆக உயர்ந்தது.எகிப்தில், 10 ஆண்டுகளில் நடந்த, மிக மோசமான ரயில் விபத்து இது, என கூறப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement