Advertisement

'ரேஷன் உணவு பொருட்களை விட்டுக்கொடு'; மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

ரேஷனில் வழங்கும் பொருட்களை, விருப்பத் தின் அடிப்படையில், அரசுக்கு விட்டு கொடுக்கு மாறு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
குறைந்த விலைதமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன.இவற்றுக்காக,தமிழக அரசு ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர். தற்போது, அவர்களின் கார்டுகள், 'முன்னுரிமை அல்லா தது' என்ற பிரிவில் வந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் பொருட்கள் வாங்கலாம்.ஏழை மக்கள் பயனடையும் வகையில், வசதியானவர் கள், சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு, வசதியானவர்களிடம், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

அதை ஏற்று, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட் டோர்,'காஸ் மானியம் வேண்டாம்' என, விட்டு கொடுக்கின்றனர்.அவர்களின் வங்கி கணக்கில், மானியத் தொகை செலுத்தப்படுவதில்லை. அதே போல், ரேஷன் பொருட்களை விட்டுக் கொடுப்பதற் கான நடவடிக்கையை, உணவுத் துறை துவக்கியுள் ளது; ஆனால், அது குறித்த விபரம் மக்களிடம் சென்றடைய வில்லை.

வாங்குவதில்லைஉணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்களின் வருமானத்தின் அடிப்படையில், அரிசி, சர்க்கரை கார்டுகள் வழங்கப்பட்டன. தற்போது, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாத' என, ரேஷன் கார்டு பிரிக்கப்பட்டா லும், ஏற்கனவே உள்ள கார்டுகளுக்கு ஏற்ப, பொருட்கள் தரப்படுகின்றன. வசதியானவர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவ தில்லை. வீட்டில் வேலை செய்பவர்களிடம் கார்டை கொடுத்து, பொருட்கள் வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர். அவர்கள், தங்கள் கார்டுக்கு வாங்கும் பொருட்களை வீட்டில் பயன்படுத்தி, உரிமையாள ரின் கார்டுக்கு வாங்கும் பொருட்களை, கடைகளில் அதிக விலைக்கு விற்கின்றனர்.

மிச்சமாகும் பொருட்களை, வாங்கியது போல் பதிவு செய்யும் ரேஷன் ஊழியர்கள், அவற்றை வெளிச் சந்தையில் விற்கின்றனர்.எனவே, ரேஷன் பொருட் கள், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, வேண்டாம் என விரும்புபவர்கள், பொது வினியோக திட்டஇணையதளம் அல்லது 'மொபைல் ஆப்' வாயி லாக, அந்த விபரத்தை பதிவு செய்யலாம்.

அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பொருட்கள் ரத்து செய்யப்பட்டு, கடைகளுக்கும் அவை அனுப்பப் படாது. இதனால், ரேஷன் கடை களில், தவறுகள் நடக்காது; அரசுக்கு செலவும் குறையும். இது
குறித்து, ரேஷன் கடைகளில்சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரத்து இல்லை என கூறிய அமைச்சர் ரேஷன் பொருட்கள் ரத்து தொடர்பான செய்தி, சமீபத் தில் வெளியான போது, சென்னை, தலைமை செயலகத்தில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்,சமீபத்தில் அளித்த பேட்டி:தமிழகம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைந்தாலும், அனைவருக்கும் ரேஷன் கடைகளில் வழக்கம் போல் பொருட்கள் வழங்கப்படும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.

ரேஷன் பொருட்கள் ரத்து என்பது வதந்தி. தற் போது உள்ள பொது வினியோக திட்ட முறை தொடரும்.மாநில அரசு,சொந்த நிதியில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ்,பருப்பு, பாமாயில் வழங்கி வருகிறது; இவை தொடர் ந்து வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறி இருந் தார்.தற்போது, 'விருப்பமுள்ளவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதை கைவிடுங்கள்' என, அரசு சார்பில், கோரிக்கை வைக்கப் படுகிறது.- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (23)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  நீங்க வாங்கும் 'கட்டிங்' 'கமிஷனை' விட்டுக்கொடுங்க முதலில் எங்கே, பங்கு வைக்கப் போதவில்லையென்று. 45 ஐ 60 ஆக்கலாமா என்று பார்க்கிறீர்கள் உங்களைத் திருத்திக்கொண்டு உபதேசம் பண்ண வாங்க

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  நாங்கள் காஸ் மானியம் வீட்டுக் கொடுக்கணும், ரேஷனை விட்டுக்கொடுக்கணும் ,முடிந்தால் ஊரையே உங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு காடு மலையென்று ஓடிவிடணும் நீங்க மட்டும் சம்பளம் ரெண்டு பங்கு, சலுகைகள் நாலு பங்குன்னு வாரி வழிக்கணும் நீங்கஎதை. விட்டுக்கொடுத்தீங்க இதுவரை மானம் மரியாதை எல்லாம் விட்டுக்கொடுத்து உங்கள் பதவி, ஊழல் பணத்தைக் காப்பாற்ற டில்லி போகிறீர்கள் அவ்வளவுதான்

 • Indhuindian - Chennai,இந்தியா

  Why go around the bush Link ration card with Aadhar - Pan and automatically eliminate those with income of say 5 lacs under PDS

 • சுகுமாரன் -

  எல்லாவற்றிலும் போலி இதனால் தகுதி உள்ள ஏழைகள் பாதிக்கப்படும் அவலம் இதை ஏன் உணரவில்லை? கத்துபவர்கள் எல்லாம் இந்த போலிகள்

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  எம்எல்ஏ க்கள் சமீபத்தில் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளமாகிய 50000 த்தை அரசுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்களும் விட்டுக் கொடுக்கிறோம்....நாங்க ரெடி நீங்க ரெடியா....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இது அவரவர் பொருளாதாரம் மற்றும் மனம் சார்ந்த விசயம் எனலாம். கட்டிங் கமிசன் ஊழல் போன்றவைகளை நிகழாதவாறு தடுத்து விட்டாலே, அரசுகளின் கஜானாவில் வறட்சி என்ற நிலையே வராதே?. இதை செயல்படுத்த, இப்போ யார் இருக்கா நம் இந்தியாவில்?.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  வசதியானவர்கள் ரேஷனில் பொருட்கள் வாங்குவதை விட்டுக்கொடுப்பதே முறை. வசதியில்லாதவர்களுக்கு அது கிடைக்கட்டுமே. ஆனால் வீடு மாறினால் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றுவதுதான் எளிது என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் அதைத்தான் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு போன்றவற்றில் முகவரி மாற்ற நம்புகிறார்களாம். அதற்கு அரசு மாற்று ஏற்பாடு அவசியம் செய்யவேண்டும்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  எவனும் முன் வரமாட்டான். ரத்து என்று முதலில் சொல்லிவிட்டு, பின்னர் எதிர்ப்பு கிளம்பியவுடன் அது வதந்தி என்று கூறுவது சிரிப்பை இருந்துச்சு. சரி செல்லூர் ராஜு மாதிரி இவரும் அப்படிதான் போலிருக்குன்னு விட்டுட்டோம் இப்போ ரூட் மாத்தி வேறமாதிரி கொண்டுபோறாரு

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  இன்று கேட்கிறார்கள், நாளை பிடுங்கிவிடுவார்கள், உபியில் ஆக்ஸிஜனை பிடுங்கியது போல. அது என்னங்கடா எப்பொழுதும் ஏழைகள் வயதிலேயே அடிக்கிறீங்க. ஏழைகளை சாகடித்துவிட்டு ஏழைகளே இல்லாத பாரதம் என்று பீற்றிக்கொள்ளவா.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  முட்டாள்தனமான நடவடிக்கை . மயிலே மயிலே இறகு போடு என்று அரசு கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. பான் கார்டு+ ஆதார் கார்டு மூலம் TAX EXEMPTION தொகையை (ரூ.2 .50 லட்சம்) அடிப்படையாக வைத்து மற்றவர்கள் பெயரை தனிப்படுத்தலாம். மேலும் தற்போதுள்ள கார்டுகள் பல வருடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டவை .அப்போது மாத வருமானம் ரூ.1000 என்று கொடுக்கப்பட்டவர்களின் மகள்/ மகன்கள் டாக்டர்களாகவும் இன்ஜினீயர்களாகவும் லட்சங்களில் புரளுபவர்கள் கூட ரேஷன் கார்டின் பயனை அனுபவிக்கிறார்கள். இதையெல்லாம் வடி கட்டி, உண்மையிலேயே தகுதியுள்ள ஏழைகளுக்கும், ஆதரவற்ற வயதானவர்கள்,உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு பயனை கொடுக்கலாம்.

 • Manian - Chennai,இந்தியா

  நான் சொல்வதை செய்யுங்கள், நான் செய்வதை செய்யாதீர்கள் - காந்தி சொன்னதை நாங்களும் செய்யுறோம். என்னைய்யா, ஓட்டுக்கு காசு கேக்குறானுக. அதுக்கு வரி கட்டுறவங்க 1 % பேருகிடடே கேக்கமுடியுமா? கட்டிங் இல்லாட்டி எவன் எங்களுக்கு ஓட்டு போடுவான். திரு-மங்கலம் பார்முலா இப்போ நாடு பூரா பரவிடுச்சே. அப்போ ஒங்க முட்டாள் தனத்துக்கு எங்க மேலே கோபப்படலாமா? எல்லாம் சட்டப்படித்தானே நடக்குது- திருடர்கள் கழக மந்திரி, எம் ஏல் ஏ , எம் பி, திருடர் கழக தொண்டர்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்க கூட பதவியை அரசியலை விட்டு விட்டு போய் விடலாமே...

 • sam - Doha,கத்தார்

  முதலில் MLA களுக்கு கொடுக்கும் ஊதியத்தை நிறுத்துங்கள். லஞ்சத்தில் புரளும் அரசியல் வாதி களுக்கு பணம் கொடுக்க மக்கள் ஏன் விரும்பவேண்டும்

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  ரேஷன் கடைகளில் விட்டுக்கொடுக்காமலேயே பல பொருட்களை வழங்குவதில்லை. அப்படி இருக்க, அரசின் இந்த கோரிக்கை, கேனத்தனமான உள்ளது.

 • srisubram - Chrompet,இந்தியா

  டேய் மங்குனி , அமைச்சர்களே , நானும் என் குடும்பத்தினரும் எந்த பொருளும் வேண்டாம் , ரேஷன் கார்டு மட்டும் போதும் என்று எனது சம்பளம் 6 ஆயிரம் என்று 11 வருடங்களுக்கு முன்பே எழுதி கொடுத்துவிட்டோம் . இலவச டிவி , மிக்ஸி , பேன் , கிரைண்டர் , வெள்ள நிவாரண நிதி என்று எதையும் வேண்டாம் என்று கூறி வாங்கிக் கொள்ளவும் இல்லை . ஆனால் , நீங்கள் அடிக்கும் கொள்ளைகளை பார்த்து , அதுவும் , டெலிபோன் கட்டணம் மாதம் ரூபாய் 15000 , நியாயமாடா? 399 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் தாராங்களே. நீ எங்க போனை வைத்திருக்கிறாய் ? எப்ப அடிச்சாலும் ஸ்விட்ச்சேட் ஆப் னு தான் வருது . நீ இந்த , பெட்ரோல் அல்ல்வான்ஸ் , போன் அல்லோவான்ஸ் விட்டுக்கொடு .. இல்லக்கட்டி மூடிட்டு ஓரமா போய்ட்டு .

 • Darmavan - Chennai,இந்தியா

  இவனெல்லாம் தன்னுடைய சம்பளம் படி மற்ற இலவசங்களை ஏன் விடக்கூடாது. முதலில் அவற்றை பிடுங்க வேண்டும்.... வசதியானவர்கள் வேலைக்காரர்களிடம் கொடுக்கிறார்கள் என்றால் அது அவர் உரிமை. அது ஏழைகளுக்கு பயன்படுவதில் என்ன தவறு/ அப்படி கடைகளில் விற்றாலும் இவன் செய்யும் ஊழலில் லக்ஷத்தில் ஒரு பங்கு இருக்காது. மிச்சமாவதை ரேஷன் கடைக்காரர்கள் விற்றால் உன் ஸிஸ்டமில் உள்ள தவறு. அதை தடை செய்ய ஸிஸ்டத்தை மாற்று. கடைக்காரன் சொல்வது அதில் மேலதிகாரிக்கு பங்கு என்று.. இந்த திருடனெல்லாக்ம் மக்களுக்கு கிடைக்கும் சிறிய சலுகையை ரத்து செய்ய துடிப்பது ஏன்? கேவலமானவர்கள்.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  MLA / MP க்களுக்கு தற்போது சம்பளம் மற்றும் படிகள் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்ட பின்னர், உடனடியாக அவர்களுக்கு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல, அரசு ஊழியருக்கு சம்பள கமிஷன் மற்றும் அடிக்கடி பஞ்சபடி உயர்த்துவதால், அவர்களுக்கும் மானியங்களை நீக்க வேண்டும். இவர்கள் இருவரால், அரசுக்கு எப்போதுமே கூடுதல் செலவினங்கள் மற்றும் மற்ற பொதுமக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது.

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  தவறுசெய்வதே திறமை என்றாகிவிட்ட்து அதை பார்த்தும் சட்டம் தூங்குகிறது . பின் தவறுகள்தானே நடக்கும் . முன் ஏர் ஒழுங்காகச்சென்றால்தான் பின் ஏர் ஒழுங்காகச்செல்லும் . அமைச்சர்கள் பெரிய அளவில் கொள்ளையடித்தால் மற்றவர்கள் அவர்களால் முடிந்த அளவில் கொள்ளையடிக்கிறார்கள் . தட்டிக்கேழ்க்கும் தகுதியை இழக்கிறார்கள் . மாற்றம் மேலிருந்து வரவேண்டும் .

 • R Sanjay - Chennai,இந்தியா

  என்ன மானங்கெட்ட மாநில மத்திய அரசியல்வியாதிகளா உங்களை ஒன்னு கேக்குறேன் மக்களை மட்டும் இந்த மானியத்தை விடு அந்த மானியத்தை விடு. மானியத்தை விடாதவர்களுக்கு மானியம் கிடையாதுன்னு அறிவிக்கீறீங்களே, ஒரே ஒரு கேள்வி, ஓரு 399 ரூபா இந்த மொபைலுக்கு ரீசார்ஜ் பின்னாலே இந்தியா முழுக்க INCOMING OUTGOING MESSAGE INTERNET எல்லாமே unlimitedடா கிடைக்குதே பிறகு ஏன்டா உங்களுக்கு உங்க சம்பளத்தோடு extraவா தொலைபேசிக்கட்டணத்துக்குன்னு பதினைந்தாயிரம் வாங்குறீங்களேயே முதல் முயற்சியா இந்த பதினைந்தாயிரத்தை மக்களுக்காக நீங்க விட்டு தரமுடியுமா? இதுக்கு பதில் சொல்லிட்டு மக்களோட மாணியத்து மேல கைய்ய வைங்கடா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement