Advertisement

பெங்களூரில் அமித் ஷா கட்சியை பலப்படுத்த திட்டம்

பெங்களூரு, :''கர்நாடகாவில், ஊழல்வாத, காங்., ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் காக் கும், பா.ஜ., ஆட்சி அமைய, கட்சித் தலைவர் கள், தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழலற்ற ஆட்சிகர்நாடகாவில், பா.ஜ.,வை வலுப்படுத்தும் வகையிலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்கும் திட்டத்து டனும்,கட்சியின் தேசிய தலைவர்,அமித் ஷா, மூன்று நாள் பயணமாக, நேற்று பெங்களூரு
வந்தார்.பெங்களூரில், கட்சியின் முக்கிய நிர்வாகி களை சந்தித்து பேசும் அவர், மத தலைவர்கள், ஜாதி அமைப்பினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்திக்கஉள்ளார்.

உட்கட்சி பூசலுக்கு தீர்வு காணும் வகையில், கட்சி யின்அனைத்து தரப்பினரும், அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமித் ஷா, செய்தியா ளர்களிடம் பேசியதாவது: மாநிலத் தில், காங்., தலை மையிலான ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. மத்தியில், ஊழலற்ற ஆட்சி செய்யும், பா.ஜ., கர்நாட காவிலும் ஆட்சி அமைத்தால்,மக்கள் நலன் காக்கப் படும்.

கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல் வருமான, எடியூரப்பா தலைமையில், எதிர் வரும் சட்டசபை தேர்தலை, பா.ஜ., சந்திக்கும்.நலன் காக் கும் அரசுஅவருக்கு, கட்சியின் அனைத்து தரப்பின ரும் பக்கபலமாக இருந்து, பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்.

தென் மாநிலங்களில், கட்சியை வலுப்படுத்த, கர்நா டகாவில்,பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமை வது அவசியம்.கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஊழலற்ற,மக்கள் நலன் காக்கும்அரசு அமைக்கும். கட்சியின் அனைத்து தரப் பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாநி லத்தில் ஆட்சி அமைப்பதற்கான பணிக ளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, மடாதிபதி கள், வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர்கள், முன்னாள், இன்னாள்,எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ., க்களை சந்தித்து பேசவுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (28)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  காங்கிரசுக்கு பதில் காவி காங்கிரசா?

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒவ்வை ஆட்சியாளருக்கு சொன்னது (நாடு)வரப்புயர (வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல்/ அரசு/ ஆட்சி/ கட்சி உயரும் ) இது எல்லா காலத்திலும் பொருந்தும் ஆனால் இவர்கள் கட்சி பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் வெறும் அல்லக்கைகள் ஊழல் பேர்வழிகள் மக்கள் பணத்தில் தின்று பெருத்து கிடக்கின்றன இதுதான் இவரின் பலப்படுத்தும் பார்முலா

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  எதுவும் பெருசா செய்யாதீங்க.....சி பி ஐ ..இருக்கு இல்லே...உங்க அரசியலுக்கு அது போதும்...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  உட்கட்சி பூசலுக்கு தீர்வு காணும் வகையில், கட்சி யின்அனைத்து தரப்பினரும், அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது//// ஈஸ்வரப்பா வைப்பாறு பாருங்க ஆப்பு அப்பப்பா, இந்த லட்சணத்துல சரத்பவார் காங்கிரசை விட்டு போனது பொறுக்கல, என்ன ஒரு பில்டப்பு

 • VIJAYAN - mangalore,இந்தியா

  இங்கே கருத்தை பதிவிடும் எவனும் கர்நாடகாவில் வாக்களிக்க போவதில்லை , கர்நாடக மக்கள் பார்த்துக்கொள்வார்கள்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அப்பம் கையிலிருக்கும் வரை தான் நரிக்கு வேலை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் வரை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடட்டும். குன்ஹா போல ஒரு நீதிமான் வராமலா போய்விடுவான். பணமும் பதவியும் கொடுத்து கட்டி மூடப்பட்ட வழக்கு கட்டுகள் எல்லாம் மீண்டும் தூசி தட்டி நீதி ஜெயிக்கும். தெய்வம் நின்று கொல்லும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எடியூரப்பா தலைமையில் ஊழலற்ற ஆட்சி..........நல்லா நடத்துங்கப்பா.........

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  கர்நாடகாவில் பிஜேபிக்கு சங்குதான்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஊழல்வாதிகளை அகற்றி இன்னொரு ஊழல்வாதிகள் வருவார்கள், அமீத் ஷா வந்தால் அனைவரும் வருவார்கள்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் நூற்றுக்கு நூறு சுத்தமானவன் இல்லை... ஏதாவது ஒரு வழியில் தவறு செய்தவன் ஆக இருக்கிறான்... அந்த தவறை சொன்னாலே பணம் பதவியயை காப்பாற்றும் பொருட்டு அவன் உங்கள் கட்சியில் சேர்ந்து விட போகிறான்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  எடியூரப்பாவின் தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சியாமாம் அப்போ ரெட்டி சகோதரர்கள் தான் துணை முதலமைச்சர்களா கர்னாடக கனிம வளங்கள் காத்திருக்கின்றன.......

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யார் யாரை கட்சிக்கு வரவழைக்க வேண்டுமோ அவர்கள் வீட்டில் வருமான துறையை விட்டு ரைட் செய்தால் அவர்கள் உங்கள் கட்சிக்கு வந்து விட போகிறார்கள்...

 • sam - Doha,கத்தார்

  முதலில் உங்கள் ஆட்கள் எடியூரப்பா, ரெட்டி brothers எல்லாம் லஞ்ச லாவண்ய ஆட்கள் தானே. அப்பறம் என்ன லஞ்சம் இல்லாத அரசாங்கத்தை எப்படி உண்டாக்குவார்கள். இவர்களும் காங்கிரஸ் பாணியில் தான் செல்கிறார்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அமித்ஷா பாஜகவை பலப்படுத்தினால் பல கட்சிகள் பலவீனப்படுகிறது... தமிழகத்தில் இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சாதிகளை ஒழிப்பது லட்சியமென்றாலும் ஓரிரு ஆண்டுகளில் முடியும் விஷயமல்ல சாதி உயர்வு தாழ்வுகளிலிருந்து விடுதலை கிடைத்தாலே முதல் வெற்றி சாதீயத்துக்கெதிராக 90ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் போட்ட ஆர் எஸ் எஸ் பின்னணியிலிருந்து வந்த அமித்ஷா சாதீய இயக்கத் தலைவர்களை சந்திக்கும் போது சாதி பாகுபாடுகளை ஒழிக்கவாவது உறுதிமொழி வாங்கவேண்டும் இல்லயெனில் அவர்களோடு உறவு வைப்பது ஆபத்து

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இதுக்காக (கட்சியை பலப்படுத்த) எங்குமே செல்ல வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டு சிபிஐ, வருமானவரி துறை, அமலாக்கத்துறை, காவல்துறை முதலியவற்றில் உள்ளவர்களிடம் மட்டும் கூடுதல் வேலை (ரெய்டு, வழக்கு, கைது) வாங்கினால் போதும். அனைத்து எதிர் கட்சி தலைவர்களும் பாஜக வில் சங்கமம் ஆவார்கள்.

 • murugu - paris,பிரான்ஸ்

  முன்னதாக யோகி ஆதித்யநாத் தின் எம்.பி., தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  மத்த கட்சியை அழிச்சி நாம வளர்ச்சி காணலாம்னு நினச்சா பிஜேபியால வெறும் பெயரளவில் தற்போதைய காலத்தில் மட்டுமே பலமாக இருக்க முடியும் ஆனா எதிர்காலத்தில் கட்சி என்றுமே வளராது. காங்கிரஸ் பிஜேபி இரண்டும் வேறு வேறு பெயர்கள் கொண்ட மக்களைவதைக்கும் ஒரே கொள்ளகை கொண்ட கட்சிகள் தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement