Advertisement

சீனாவில்தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து

பீஜிங்:சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று(ஆக.,12) 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

360 விமானங்கள் ரத்து



தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரை அருகில் உள்ள ஷாங்காய், நான்ஜிங், ஹாங்சோவ் ஆகிய விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால். சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • srisubram - Chrompet,இந்தியா

    ஓஹோ இந்தோனேஷியா விலும், ட்ரைனேஜ் ப்ரோப்லேம் ? இங்க கோயம்பேடு ல தான், சனம் திட கழிவுகளை கொட்டி நாறடிக்குதுனு நினைச்சேன் ..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இயற்க்கை ஒன்று பெயது கெடுக்கும் இல்லைஎன்ன்றால் பெய்யாமல் கெடுக்கும்... சீனா முதல் ரகம்...தமிழகம் இரண்டாவது ரகம்...

  • ganesha - tamilnadu,இந்தியா

    கடவுள் ஒருவர் இருக்கிறார்.

  • Marshal Thampi - Nagercoil,இந்தியா

    ஆக இப்போதைக்கு யுத்த டென்ஷன் இல்லை. அடுத்த வருடம் பார்க்கலாம்.

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    என்னய்யா இது.. உசுப்பேத்திக்கொண்டே இருக்காங்கோ..... அங்கே 360 விமானம் ரத்து என்றால் எனக்கு என்ன ???? .... என் வீட்டு வாசலில் சாக்கடை அடைச்சு கிடக்கு .... ரெண்டு நாள் ஆச்சு .... யாரும் வரவே இல்லை ...

    • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

      இந்தோனேஷியா அரசிடம் கேளுங்க, தமிழ் நாட்டை குறை சொல்லாதீங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement