Advertisement

வடகொரிய ஏவுகணையை தடுக்க ஜப்பான் ராணுவம் அதிரடி திட்டம்

டோக்கியோ,அமெரிக்காவுக்கு சொந்தமான, குவாம் தீவு மீது, ஏவுகணை தாக்குதல் நடத்த, வடகொரியா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணை தடுப்பு அமைப்புகளை, ஜப்பான் ராணுவம் ஏற்படுத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான, வடகொரியா, தொடர்ச்சியாக, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது; இது, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வடகொரியாவிற்கு எதிராக, கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கும் தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவின் குவாம் தீவில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக, தகவல் வெளியானது.
இந்த தீவு, மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அத்தகைய சூழலில், அணு ஆயுதங்களை பயன்படுத்த போவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், குவாம் தீவிற்கு அருகிலுள்ள, அமெரிக்காவின் நட்பு நாடான, ஜப்பான், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு அமைப்புகளை, ஜப்பான் நிறுவியுள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரங்களில், இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    எண்ணித் துணிக கருமம்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    ஜப்பானுடன் நமது உறவு மென்மேலும் பலப்பட வேண்டும் .....

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    பலே ......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement