Advertisement

தேர்தல் கமிஷன் அளித்த பதிலால் அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம்

தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதில், அ.தி. மு.க., தொண்டர்களிடம், பல்வேறு குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப் பட்டார். அப்போது, அ.தி.மு.க., பிளவுபடா மல் இருந்தது.
ஜன., 25ல் நடந்த, தேசிய வாக்காளர் தின விழாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில், சசிகலாவிற்கு, தேர்தல் கமிஷன் அழைப்பு அனுப்பியது.பிப்ரவரி மாதம், பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடிதுாக்கினார். அதன் தொடர்ச்சியாக, பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தின கரனை, துணைப்பொதுச்செயலராக நியமித்தார். அவர், சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சசிகலா அணி சார்பில் களம் இறங்கினார்.

இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கேட்டதால், அதை தேர்தல் கமிஷன் முடக்கியது. இது தொடர்பாக, தினகரனுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.இந்த சூழ்நிலையில், பன்னீர் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் துணைபொதுச் செயலர் யார்' என கேட்டகேள்விக்கு, 'அக்கட்சியில் காணப்படும் பூசல் காரணமாக, முடிவு எடுக்கப்பட வில்லை' என, தேர்தல் கமிஷன் பதில் அனுப்பி உள்ளது.

இது, கட்சி தொண்டர்களிடம், குழப்பத்தை ஏற் படுத்தி உள்ளது. பொதுச்செயலராக, சசிகலா நிய மனத்தை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் கமிஷன், ஜனவரி மாதம் ஏன் அவர்பெயருக்கு, அழைப்பிதழ்அனுப்பியது என, தினகரன் அணியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த குழப்பங்கள் தீர, பொதுச்செயலர் நிய மனம் செல்லுமா, செல்லாதா என்ற முடிவை, தேர்தல் கமிஷன் விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., அணிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (19)

 • sampath, k - HOSUR,இந்தியா

  Election commission should not take more in this issue. For each and every issue time bound decision is important. Belated decision would help to other political parties. There is doubt about E.C. For delaying this issue.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  எந்த முடிவையும் வெட்டொன்று துண்டு இரண்டு என்று சொல்லிவிடாத தண்ட கமிஷன்

 • Balaji - Khaithan,குவைத்

  வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் காலம் கடத்துகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது........ அதிமுக தேர்தல் விதிகளின் படி நியமணமாகாத சதிகாரி எப்படி பொ. செ. ஆகா இருக்க முடியும் என்று எளிதாக அவர் நியமனம் செல்லாது என்று சொல்லிவிடலாம்...........

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் இதில் வேலை செய்யும் நீதிபதிகள் முதல் அதிகாரிகள் வரை இது வரை தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் முடிவை தெளிவாக விரைவாக எடுத்துள்ளார்களா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகத் தெரிகின்றது, எதுவானாலும் லேட் லேட் லேட் இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்ற மண்ணாங்கட்டி நினைப்பில் செல்கின்றது இவர்கள் தீர்மானிக்கும் முறை. ஒரு உதாரணத்திற்கு -இவர்கள் கடவுள் ஆனால் "கர்ப்பிணி பெண்களின் பேறுகாலம் 9 மாதம் முதல் 20 வருடம் வரை ஆனாலும் ஆகும்".

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  }கமிஷன்" வந்தே மாதரம்

 • pirabaharan - Madurai,இந்தியா

  டி.டி.வி. தினகரன் தான் சரியான தலைவராக வர முடியும்.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ரொம்ப சிம்பிள் - ஜனவரி மாசம் பிரச்சனை இல்லாமல் இருந்தது - என்றைக்கு பன்னீரை தள்ளி விட்டார்களோ அன்று ஆரம்பித்த சனியன் தான் இது

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  தேர்தல் கமிஷனா அதெல்லாம் வேணாமுங்க டெல்லி நாட்டாமகிட்ட சொல்லி வேற கமிசனுக்கு ஏற்பாடு செய்தால் அம்புட்டு கழுதையும் வந்து அடிமை சாசனத்தோட காலடியிலேயே கிடக்கபோகுது இன்னும் எங்க மந்தைகள புரிஞ்சுகவே இல்லையே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அணிகள் என்று சொல்லாதீர்கள் ஆட்டு மந்தை என்று சொல்லுங்கள்... பில்லை ( பணம் ) கண்டால் குதித்து ஓடும் இவை...

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  மோடிஜி இன்னும் ஒரு முடிவுக்கு வரலை அதான் காலதாமதம் ஆகிறது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு மக்களின் ஆதரவு மிகக்குறைவே... தவிரவும் அவர்களை அரசியலில் ஈடுபட அனுமதிப்பது சற்றும் பொருத்தமான செயல் அல்ல...

 • Suresh - Nagercoil,இந்தியா

  "தேர்தல் கமிஷன் விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., அணிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது" அதுவே தான் மக்களின் எதிர்பார்ப்பும்...

 • vasanth - Jurong west,சிங்கப்பூர்

  TTV DHINAKARAN IS AN INTELLIGENT,DIPLOMATIC,ENERGETIC,COOL AND GOOD ENGLISH COMMUNICATION SKILLED PERSON. EVEN STALIN DOESN'T HAVE THIS MUCH SKILLS. TTV IS THE ONLY PERSON TO HANDLE BRAMHIM DOMINATED BJP. TTV IS DARE TO HANDLE MODI. I SUPPORT TTV. I SUPPORT TTV. I DON'T LIKE NORTH INDIAN MODI TO RULE TAMILNADU

 • sudharshana - chennai,இந்தியா

  அப்போ சரி தே க சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது ஏன்னா அவங்க நோக்கமே அதானே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement