Advertisement

சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: பயங்கரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியீடு

புதுடில்லி:சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் குறித்த போஸ்டரை டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.டில்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் குறித்த போஸ்டரை டில்லி போலீசார் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
டில்லி போலீசார் கூறியதாவது: போஸ்டர்களில் காணப்படும் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கிடைத்தால், 01124641278 மற்றும் 0112301670 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் டில்லி முழுவதும் 14 வேன்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    இவர்களோ மதக்கடமைகளையும் விடாமேல் செய்யமுயற்சிக்கிறார்கள்

  • K.Sugavanam - Salem,இந்தியா

    பாதுகாப்புமுக்கியமானது..அனைவரும் விழிப்புடன் இருந்து சந்தேகம் உண்டானால் உடன் போலீசை அணுகவேண்டும்..

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    தொப்பி தாடியோடு படம்போட்டு சிறுபான்மையினரின் மனங்களைப்புண்படுத்தாதீர்கள்

  • appavi - cumbum,இந்தியா

    ....வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்............. என்ன வகையான தகவல் ,யாருக்காக கொடுக்கப்படுகிறது ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement