Advertisement

உ.பி.,யில் குழந்தைகள் பலி விவகாரம்: விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

கோரக்பூர், : உ.பி.,யில், அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த, 30 குழந்தைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்ப வம் குறித்து, விரிவான விசாரணை நடத்த, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
'குழந்தைகள் இறப்புக்கு, மாநில அரசின் அலட் சியமே காரணம்' என, குற்றஞ்சாட்டியுள்ள, எதிர்க் கட்சிகள், முதல்வர்,ஆதித்யநாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத், உடனடியாக பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தியுள் ளன.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். கோரக்பூர் மாவட்டத்தில், மூளை வீக்க நோய் பாதிப்புக் குள்ளான, பல குழந்தைகள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றன.மருத்துவமனைக்கு தேவையான,
ஆக்சிஜன் சிலிண்டர்களை, ஒப்பந்த அடிப்படை யில், தனியார் நிறுவனம், 'சப்ளை' செய்து வந்தது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய, 66 லட்சம் ரூபாய் பாக்கி தொகையை தர, மருத்துவமனைநிர்வாகம் தாமதித்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய் வதை, அந்த நிறுவனம் நிறுத்தியது. நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது; இரண்டு நாட்களில், 30 குழந்தை கள் பலியாயினர்.

முதல்வர், யோகி ஆதித்ய நாத்தின் தொகுதியான, கோரக்பூரில் நடந்த இந்த நிகழ்வு குறித்து, ஊடகங் களில் செய்தி வெளியானதை அடுத்து, அதிகாரிகள் மற்றும்அமைச்சர்கள், மருத்துவமனைக்கு விரைந் துள்ளனர்.குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தர விட்டுள் ளதாக, மாவட்ட கலெக்டர், ராஜிவ் அறிவித்துள்ளார்.

ஒப்பந்த நிறுவனம் மற்றும்மருத்துவமனை நிர்வா கிகளிடம், போலீசார் விசாரித்து வருகின்ற னர். துணை முதல்வர், கேஷவ் பிரசாத் மவுர்யா, மாநில சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் மற்றும் பல அமைச்சர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.குழந்தைகள் இறப்புக்கு பொறுப் பேற்று, முதல்வர், ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என, காங்கிரஸ், சமாஜ்வாதி,
நடத்தப்பட்டு, அரசிடம், அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விகாரத்தை, முதல்வர் கூர்ந்து கவனித்து வருகிறார். குற்றவாளிகள் மீது பாரபட்சமற்ற பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

பாரபட்சமற்ற நடவடிக்கைதுணை முதல்வர், கேஷவ் பிரசாத் மவுர்யா செய்தி யாளர்களிடம்பேசியதாவது: மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை கள், திடீரென இறந் ததற்கான காரணம் குறித்து விசாரிக்க,குழு அமைக்கப்பட்டுள்ளது. நேர்மை யான,விரிவான விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா செய்ய வேண்டும்!:காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யு மான, குலாம் நபி ஆசாத் தலைமையில், காங்., தலை வர்கள், கோரக்பூர் அரசு மருத்துவமனை யில், நேற்று ஆய்வு செய்தனர். செய்தியாளர் களிடம், குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை களின் உயிரிழப்புக்கு, மாநில அரசின் அலட்சி யமே காரணம். மருத்துவமனை நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளது. ஆக்சி ஜன் பற்றாக்குறையால், இரண்டு நாட்களில், 30 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதே மருத்துவ மனையில், ஐந்து நாட்களில், 63 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று,முதல்வர், ஆதித்ய நாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (37)

 • M.Balakrishnan - Chennai,இந்தியா

  Dear all, நோட் திஸ் பாய்ண்ட் பிடிஆர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் சீஃப் ஆபீஸர் காஃபீல் கான் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பற்றி மிக அருவருப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. 1. ஒரு இஸ்லாமிய நர்ஸை பலவந்தம் செய்த வழக்கில் ஒரு வருடம் ஜெயிலில் இருந்தான். ஜெயில் ரெக்கார்ட்ஸ் பக்காவா இருக்கு. 2. இன்று தூற்றுதலுக்கு உள்ளாகி இருக்கிற அந்த ஆஸ்பத்திரியின் ஆக்ஸிஜன் சப்ளை கமிட்டியின் தலைவரே இவன் தான். போதுமான சப்ளை இருக்குமாறு பாத்து கொள்வது இவனின் வேலை தானே?? இதுக்கும் ரெக்கார்ட்ஸ் இருக்கு. 3. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்'க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்படி பத்து லட்சத்தை தொட்டு விட்டால் அதை கிளியர் செய்து விட்டு தான் புது சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூல்ஸ். ரெக்கார்ட்ஸ் இருக்கு. ரூல் புக்கும் இருக்கு. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு? கமிஷன் வரவில்லை என 69 லட்சத்துக்கு பில்லை கிளியர் செய்யாமல் அதுவும் ஆறு மாத காலத்திற்கு வைத்திருநதது யார்?? 4. இன்னொருவருக்காக பரிட்சை எழுதி மாட்டி உபி'யில் முன்னா பாய் என பட்டப் பெயர் உண்டு இவனுக்கு. எந்த வருடம் என நியாபகம் இல்லை. ரெக்கார்ட்ஸோ டீடெயில்ஸோ இல்லை.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அந்த டாக்டர் தெய்வம் மேலும் பல உயிரிழப்பைத் தவிர்த்தவருக்கு தண்டனையா ? ஆனாலும் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் வாழ்த்துக்களும். எங்கள் அனைவரின் உளமார்ந்த ஆசியும் அவர் குடும்பத்தை மேன்மையுடன் வாழவைக்கும்

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  ஆக்சிஜன் கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கானுக்கு ஆதித்யநாத்தின் ‘பரிசு’ பணி நீக்கம். அயோக்கிய பிஜேபி அரசு.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  வாசகர்களில் 99.999.% சதவீதத்தினர் அநீதி நடந்துள்ளது .. அநீதிக்கு என்ன சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள் ... அதற்க்கு பஃறுப்பேற்ப்பது யார் என்பதன் அடிப்படையில் கேள்விகள் இருக்கும் போது .. 001.% சதவீதத்தினர் இதோ இங்கே நாங்கள் இருக்கிரோம் என்று அடையாளப்படுத்தி மனித மாண்புக்கே உலையை வைக்கிறார்களோ ? என்று என்னுவதில் வியப்பில்லைதானே

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  மாநிலத்தில் எவ்வளவு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து என்ன பயன்....முக்கிய துறையில் ஒருமண்ணையும் காணோம்...நெஞ்சம் பதறுகிறது...

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  படத்தில் இருக்கும் டாக்டர் காபீல் அகமது தன் சொந்த செலவில் 12 ஆக்சிகன் சிலிண்டர்களை தன் காரில் கொண்டு வந்து நிலைமையை சமாளிக்க முயற்சி செய்ததால் மேலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என்பதை தினமலர் எழுதி இருக்க வேண்டும் ..

 • bairava - madurai,இந்தியா

  ஐயோ நாடு நாசமாப்போகுற ஆட்சிக்கு இது ஒரு உதாரணம்... கார்பொரேட் கம்பெனிகளின் புதிய மருந்துகளை பரிசோதனை செய்ததின் விளைவுதான் இந்த விபரீதம்..தாங்காது இனி இந்த பாரத மாதா .

 • revathemanoj - pune,இந்தியா

  நாடு நாசம போயிட்டு இருக்கு மட்டும் தெரியுது..அரசு சம்பளம் வாங்க தெரிஞ்ச உங்களுக்கு வேலை பண்ண தெரியலியே.careless...babies oda ஆத்மா சாந்தியடையனும்

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  இந்திய பீரங்கிகளால் உருள இயலவில்லை. ராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு இல்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசியல் வியாதிகளுக்கு ஊதிய குறைபாடு என்றைக்கும் இல்லை. தீவிரவாத தாக்குதல்களுக்கு பஞ்சம் இல்லை. பணமதிப்பிழப்பால் கருப்பு பணம் ஒழியவில்லை. கள்ள நோட்டுகள் அச்சிடுவதை தடுக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு மருத்துவமனையில்கூட ஆக்சிஜன் இல்லை. மாட்டிறைச்சி உண்ண அனுமதி இல்லை. மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. மக்கள் வாக்குகளுக்கு மதிப்பில்லை. வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ச.ம.உக்களின் விலை 15 கீழே கோடிக்கு குறையவில்லை. 300 விழுக்காடு கொள்ளை அடித்து சொத்து சேர்த்தவன் மீது வருமான வரி ரைடு இல்லை. 10 லட்சம் மதிப்புள்ள கோட்டு போட்ட பிரதமர் நாட்டில் தங்குவதில்லை. சாமானியனுக்கு அணிய உடை இல்லை. அதானி, அம்பானிக்கு கடனை திருப்பி செலுத்த அவசியம் இல்லை. சாமானியனுக்கு ரேஷன் இல்லை. காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை. கொலைகார கோட்ஸேவுக்கு சிலை வைப்பதில் மாற்றம் இல்லை. இத்தனையும் இருந்தாலும் நாம் சொல்லவேண்டும் நாம் மக்களாட்சி நாட்டு குடிமக்கள் என்று...

 • Basheer Mohideen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு மருத்துவருக்கு இருக்கிற அக்கறை கூட ஆட்சி செய்பவர்களிடம் இல்லையே

 • Sumanchandrasekaran - Chennai,இந்தியா

  இவனுங்க எல்லாம் நம்ம உயிரோட விலையிடறதுக்கு தான் ஆட்சிக்கே வரனுங்க.

 • Jana - Chennai,இந்தியா

  நாட்டிற்கு தேவை yoga அல்ல.. நாடு முழுவதும் yoga day கொண்டாட என்ன பயன். நல்ல கல்வியும் சுகாதார மேம்பாட்டுக்கு.. முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.. பச்சிளம் குழந்தை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் மன நிலையை புரிந்து இதற்குக் காரணமான அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தப்பட வைக்கிறது. ஆனால் இந்த அரசியல் வாதிகள் இதையும் வைத்து மக்களை கேவலப்படுத்துகிறார்கள். உண்மையான காரணத்தை கண்டுபிடித்து மறுபடியும் இந்த மாதிரி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு அமைப்பில் உள்ள குறைகளை நீக்கவேண்டும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பிள்ளைப்பாசம் என்னவென்று தெரியாதவர்களை தங்களை ஆள அனுமதிப்பது மக்களின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இப்படி பிள்ளைகள் சாவதற்கு இதற்கு காரணமான எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும்.

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  நீதியின் லட்சனத்தை கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் குழந்தைகள் கருகிய தீர்பில் தான் பார்த்தோமே போங்கடா அரக்கர்களா

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  முதல்வரின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.. தீவிர விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.. குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியவில்லை எனில் முதல்வரும் / சுகாதாரத்துறை அமைச்சரும் / மருத்தவமனை டீனும் பதவி விலக வேண்டும்.. இல்லையேல் அவர்களது மனச்சாட்சி அவர்களை கொல்லும்.. ஒருவேளை மாநில அரசு இதில் மழுப்பினாலும் மத்திய அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

 • unmaiyai solren - chennai,இந்தியா

  இப்படி கடுகளவும் மனசாட்சியின்றி,சிறிதளவும் இரக்கமின்றி, மிருகத்தை விடவும் கேவலமாக தன் சுய ரூபத்தை காட்டி இருக்கிறாயே? 30 பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ளதே,அதற்கு சிறிதளவாகினும் தன் அனுதாபத்தையோ, மாநில அரசுக்கு கண்டனத்தையோ பதிவு செய்தாயா?

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  யோகி ஆத்யநாத் இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது..... இது 25 ஆண்டுகளுக்கு முன் உபியை ஆண்ட காங்கிரசின் கையாலாகாத்தனம்.... இப்படிக்கு பக்த கேடிகள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பற்றாக்குறை வேறு.... அறவே இல்லாது இருப்பது வேறு... இதற்க்கு காரணமான தலைமை மருத்துவர்... பண்டக காப்பாளர்,,, விஞ்ஞான பொருள்கள் காப்பாளர்களை, செவிலியர்களை பதவி நீக்கம் செய்யவேனும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆதித்ய நாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் ஆகிய இருவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையாக வைத்து இருந்தால் பதவி விலக வேண்டும்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இந்த உலகம் அறியாத, காரணம் அறியாத பிஞ்சு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் படும் வேதனைகளை பார்க்கும், போது நெஞ்சு பொறுக்கமாட்டேங்குதுயா

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  தயவு செய்து நீங்கள் செய்திகளாக போடுங்கள் புகைப்படங்கள் போட்டு வாசகர்கள் மனதை வேதனைக்குள் ஆக்காதீர்கள்

 • VGS RAJA - Chennai,இந்தியா

  அட பதருங்களா r sanjai முதலிய அறிவாளிங்களே உங்களுக்கு தெரியுமா 2 வருடங்களுக்கு இதே இடத்தில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தார்கள் என்று. ஏன்னா அப்போ மதச்சார்பற்ற அகிலேஷ் யாதவ் முதல்வர்????

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியாது... ஆனால் இருப்பவர்களை காக்கலாம்... சுத்தம், சுகாதாரம் மிக அவசியம்... அதைத்தவிர அரசியல், வானசாஸ்திரம் போன்ற விஷயங்களை பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை... குறைந்தபட்சம் உங்கள் வீடு, அருகில் உள்ள இடம் போன்றவற்றில் கொசுக்கள் பரவும் அளவில் சாக்கடை, கழிவு நீர் தேங்கும் இடங்களில் மண்ணெண்ணையை ஊற்றவும்.. கட்சி பேதம் பார்க்காமல் கூட்டமாக தெருக்களையும் கூட சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வேதனையாக இருக்குது, அன்று தமிழகத்தில் 83 குழந்தைகளை கொன்ற மக்களுக்கு விடுதலையான செய்தியின் போதே 63 குழந்தைகளை பலி கொடுத்துள்ளோம் , வேலை செய்யாமல் அரசியல் கோட்டாவில் வேலை தேடுவோரே , நீங்க விமரிசிக்க தகுதி இல்லை

 • murugu - paris,பிரான்ஸ்

  முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் எம்.பி., தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  அடிதடிகளும் கட்டப்பஞ்சாயத்தும் மாட்டுப்பஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்த , பிள்ளை குட்டி இல்லாத ஒருத்தர் EVM ஆல் பின் வாசல் வழியாக முதல்வர் ஆனவர் , மாட்டுக்களுக்காகவே மட்டும் வாழும் அகோரியின் ஆட்சி இப்படித்தான் இருக்கும்.. வாயால் வடை சுடும் மோடியின் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்

 • R Sanjay - Chennai,இந்தியா

  இறந்த அத்தனை குழந்தைகளும் கடவுள் புண்ணியத்தில் வேறு ஒரு நல்ல உலகத்தில் பிறக்கட்டும், இந்த ஜனநாயகத்தில் 30 உயிர்கள் பறி போனதற்கு பெயர் "ஆக்ஸிஜன் பற்றாக்குறை" இதுக்கு காரணமானவங்க சுதந்திரமா சந்தோசமா எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இந்தியாவில் வசிக்க முடியும் வாழமுடியும். பிறகு ஹிட்லர் ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். அவன் சர்வாதிகாரம் மூலம் இதுபோன்று பல கொலைகளை செய்தான். இன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சி நாம்(பிஜேபி) தான் என்ற நினைப்பு இந்த பிஜேபி சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு, யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு கால் பிடித்து தான் அடிக்கும் கொள்ளையில் ஒரு பங்கை ஆளும் கட்சிக்கு கொடுத்து விடுவது. எங்க இந்த பிஜேபி அல்லக்கைகைள் எதற்கெடுத்தாலும் ஒன்று சொல்வார்களே இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று இங்கு வந்து அதை கூவுங்கள். இந்த பிஜேபி அல்லக்கைகள் எல்லாம் தமிழர்களே அன்று வட நாட்டிலிருந்து தமிழ் படித்துவிட்டு இங்குவந்து தமிழர்கள் என்ற போர்வையில் பல பெயர்களில் பிஜேபிக்கு ஆதரவாக கருத்து எழுதுகின்றனர். எல்லாம் வேஷம். தற்போது இத்தனை உயிர்கள் சென்றுவிட்டதே இதற்க்கு யார்பொறுப்பு. இந்த கேள்விக்கு எந்த சொம்புகளும் பதில் சொல்லாது

 • Swaminathan -

  அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கு. சம்பளம் அதிகமாக கொடுத்ததால் ஆடம்பரம் மற்றும் சுயநலம் கடமையை செய்யமுடியாதளவுக்கு மாற்று சிந்தனை.. . .நடந்த சம்பவத்திற்க்கு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளே முழு பொறுப்பு மேலும் அவர்களை சரியாக வழிநடத்த தவறிய அரசுக்கும் அதில் பங்கு உண்டு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement