Advertisement

தி.மு.க., மீது பாய தயாராகிறது பா.ஜ.,: அமித் ஷா வருகைக்கு பின் யுத்தம் ஆரம்பம்

அ.தி.மு.க., பிளவு பட்டு கிடப்பதால், தி.மு.க., வை எதிர்ப்பதிலும், விமர்சிப்பதிலும், தன் கவனத்தை, பா.ஜ., திசை திருப்பி உள்ளது.
தமிழகத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், பா.ஜ., பினாமியாக, அ.தி.மு.க., மாறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதற்கேற்ப, ஓ.பன்னீர்செல்வத்தை மிஞ்சும் அளவுக்கு, பிரதமர் மோடியை, மூச்சுக்கு ஒரு முறை சந்தித்து, முதல்வர் பழனிசாமி அதீத இணக்கம் காட்டுகிறார்.அ.தி.மு.க.,வை வசப் படுத்தி விட்டதாக கருதும், பா.ஜ., சமீபகால மாக, தி.மு.க.,வை நோக்கி, பாய துவங்கி உள்ளது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் இடையே அதிகரித் துள்ள வார்த்தை மோதல், அதை காட்டுவதாக உள்ளது. சென்னையில், ஜூனில் நடந்த
கருணாநிதி வைர விழா நிகழ்ச்சிக்கு பின், அது கூட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர் களை, ஸ்டாலின் வெற்றிகரமாக ஒருங்கிணைத் தார். அது, பா.ஜ., வுக்கு எதிரான தேசிய கூட்டணிக்கு வித்திடு வது போல் அமைந்தது. அந்நிகழ்ச்சியில், ராகுல், சீதா ராம் யெச்சூரி உள்ளிட்டோர், மோடியை கடுமையாக விமர்சித்தனர்.

அதை, பொன்.ராதாகிருஷ்ணன், 'அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற, ஓரங்கட்டப்பட்டவர்களை வைத்து நடந்த விழா. மக்களால் புறக்கணிக்கப் பட்டு, தோற்றுப் போன விழா' என, விமர்சித்தார். அதற்கு ஸ்டாலின், 'பொன்.ராதாகிருஷ்ணன், 16 வயது இளைஞரா...' என, கிண்டல் செய்தார்.இந் நிலையில், கடந்த வாரம் நடந்த, பா.ஜ., இளைஞர் பேரணியும், தி.மு.க.,வை விமர்சிக்கும் விழாவா கவே மாறியது. தி.மு.க.,வையே பெரும் பாலானோர் விமர்சித்தனர். அப்போது, தமிழிசை, 'தமிழ கத்தில், சூரியன் மறைய துவங்கிவிட்டது' என்றார்.

இளைஞர் அணி தேசிய தலைவர் பூனம் மகாஜனும், தி.மு.க.,வை தாக்கிப் பேசினார். அவர்,'தி.மு.க.,வின் சூரியன் மறைந்து, மோடி என்னும் சூரியன் விரைவில் உதிக்கும்' என்றார்.

முட்டுக்கட்டையா?இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறிய தாவது: தமிழகத்தில், எங்கள் வளர்ச்சிக்கு, தி.மு.க., நிச்சயம் பெரிய முட்டுக்கட்டை தான். அதனால், தி.மு.க.,வை குறிவைத்து தாக்குகி றோம். அ.தி.மு.க., பிளவுபட்டு உள்ளதால், தி.மு.க., எந்தவிதத்திலும் ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக, அக்கட்சியை எதிர்த்து, அரசியல் யுத்தம் துவங்கி உள்ளோம்.

அ.தி.மு.க., கூடாரம், சிதறிய தேன்கூடு போல உள்ளது; நாங்கள் ஒன்றும் செய்ய தேவை யில்லை. அக்கட்சியினரே பார்த்துக் கொள்வர். அவர்கள் ஒன்றாக இருந்தாலும், பிரிந்தாலும், ஏதேனும் ஒரு வகையில், எங்களுக்கு சாதகம் தான். அதனால் தான், தி.மு.க.,வை எதிர்ப்ப தில், தனிக்கவனம் செலுத்துகிறோம். அமித் ஷா வருகையின் போது, இது தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (127)

 • rmr - chennai,இந்தியா

  திமுகவை மக்களுக்கு பிடிக்கவில்லை அது ஒரு ஊழல் கட்சி என்று எல்லாருக்கும் தெரியும் மக்கள் விரும்புவது ஒரு மாற்றம் முன்னேற்றம், நல்ல ஊழல் அற்ற ஆட்சி, விவசாயிகளின் நன்மைக்காக செயல் படும் ஆட்சி. அதை கொடுக்கும் தலைவர் அன்புமணி தான் என்பதை மக்கள் நம்புகின்றனர், விவசாயம் பெருகினால் தான் உற்பத்தி பெருகும் விலை வாசி குறையும். சினிமா கார்ப்பரேட் வியாபாரங்களால் அல்ல

 • Rajasekaran - Vizg,இந்தியா

  காமராஜர் தமிழக முதல்வராக இருந்தவரை அணைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன ஏன் என்றால் அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டன ஏன் இப்பொழுது மத்தியில் பிஜேபி ஆளும் பொழுது தமிழகத்தில் பிஜேபி ஆளுமை அமைந்தால் நமக்கு (உங்களுக்கு) நன்மையே

 • Aheshram Jagan - Chennai,இந்தியா

  தி மு க தமிழ் மொழியை அவமானப்படுத்தியது இலங்கை தமிழாட்களை கொன்று குவித்தது காவேரியை டெல்டா மாவட்ட விவசாயிகளை வஞ்சித்து டெல்டா மாவட்ட காவேரி நீரை தன சொந்த சாராய தொழிற்ச்சாலைக்கு பய்ன்படுத்தியது தாலுகாவிற்கு ஐநூறு Acre பைனாபி நிலம் சுருட்டியுள்ளது தனியார் பள்ளி கல்லூரிகளை தங்கை வைத்துக்கிண்டு வியாபாரமாகி அரசு பள்ளிகள் மூடும் அளவுக்கு கல்வியை அவமானப்படுத்தியுள்ளது காமராஜர் கொண்டுவந்த கல்வி வேலை போனது தி மு க வாழ் தன நல்லவன் போல நடிக்கிறார்கள் காசு கண்ணை மறைகிறது தி முக மற்றும் அதிமுக வின் கூட்டு சாதி நீடித்தால் தமிழகம் பாழாகும் மக்களே சிந்திப்பீர் சைலப்படுவீர் தி மு கே என்பது poi பிம்பம் தி மு க கூடையில் தற்போது கலைஞர் இல்லை ஏமாற vandam

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  தி மு காவிற்கு எதிரில் பி ஜே பி தலைமை என்றால் 234 மொத்தமாக சந்தேக மில்லாமல் கிடைத்து விடும். அப்போ எதிர் கட்சியே சட்டமன்றத்தில் இல்லாமல் ஆளும் கூட்டணியே பகிர வேண்டிய நிலை வரும்.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  திமுக மீது பாய்வது என்றால் திமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் IT மற்றும் அமுலாக்க பிரிவு ரெயிடு செய்வதுதானே?

 • Arivu Nambi - madurai,இந்தியா

  உங்களின் ஆட்டம் முட்டாள்களின் முன்தான் செல்லுபடியாகும் ...... தமிழகத்தில் அல்ல ... இதில் அ.தி .மு .காவினர் இவர்களின் கையில் சிக்கிவிடக்கூடாது...

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  கமலஹாசன் கட்சி ஆரம்பிச்சி தி.மு.க வோட கூட்டணி வச்சி அந்த கட்சியை காப்பாத்திடுவாரு ..அதனால தி .மு.க அனுதாபிங்க கவலைப்பட வேண்டியதில்லை ..

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  நான் என்னவோ பாரா மிலிட்டரி போர்ஸ் என்பது நாட்டை மக்களை காப்பாற்ற என்று நினைத்துவிட்டேன். இப்போது தான் தெரிகிறது அது வருமான வரித்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் ,வேண்டாதவர்கள் மீது சோதனை நடத்தும்போது ,பாதுகாப்பு கொடுப்பதெற்கென்று

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  முதலில் உங்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் திருடர்கள்/குடிகாரர்கள் கூட தொலைக்காட்சி சேனல் வைத்து மக்களை முட்டாள் ஆக்கி வைத்து இருக்கிறார்கள் உங்களால் இவர்களை திருத்த முடியாது போய் big box நிகழ்ச்சி பாருங்கள்

 • Balaji - Khaithan,குவைத்

  பாஜக தமிழகத்தில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளை மீறி வெல்வது என்பது இயலாத காரியம்.. காங்கிரஸ், பாஜக என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தனித்து தமிழகத்தில் வளர முடியும் என நினைப்பதே மூட நம்பிக்கை... தேசிய கட்சிகளுக்கு மாநில கட்சிகளான அதிமுக அல்லது திமுகவின் தயவில் தான் ஏதாவது சில தொகுதிகளை பெறமுடியும் என்பது தான் எதார்த்தம்..........

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மூத்த திராவிடக் கட்சியும் சரி ..... அதன் அடிமைகளும் சரி ..... அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இங்கு பீதியுடன் குவிந்துள்ள கருத்துக்களே சாட்சி .....

 • ramesh - chennai,இந்தியா

  அமித் ஷா 1000 முறை தமிழ் நாட்டிற்கு படையெடுத்தாலும் ஸ்டாலின் வெற்றியை எதனாலும் தடுக்க முடியாது.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் வன்முறை போராட்டங்கள் என்றுமே நடந்ததில்லை...நடக்கும் எல்லா போராட்டங்களும் மதிதிய அரசின் தமிழர் விரோத ஆட்சியை எதிர்த்துதான் ..

 • rajan - kerala,இந்தியா

  சுழற்றுங்கள் சாட்டையை நல்லா. தமிழ்நாட்டிலே உள்ள ஒரு வீடு ஊழல் புள்ளை கூட தப்பி விடாம பார்த்து மொத்த சொத்துக்களையும் பறிமுதல் பண்ணி முடக்குங்க. பரம்பரைக்கு ஆட்டைய போட்டுல்ல காசு பார்த்திருக்கிறானும்ங்க. அப்போ தான் ஜனநாயகம் எங்கே எப்படின்னு புரியும் இந்த நாதாரி கூட்டத்துக்கு. மொத்தத்தையும் ஒழிச்சு காட்டுங்க.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  எல்லா மாநிலங்களிலும் சுயமாக வளராமல் ,சின்ன கோட்டை பெரிதாக்க பெரிய கோட்டை அழிப்பது போன்ற கொள்கையை கடை பிடிக்கும் பிஜேபி இங்கே மூக்கறுபடுவது உறுதி...திமுக , அதிமுக என்ற இரண்டு பெரும் மலைகளுக்கு நடுவில் சிக்கிய எலியாகப்போவதும் நிச்சயம்...

 • Pandiyan - Chennai,இந்தியா

  குறுக்கு வழியை தமிழ்நாட்டில் பி ஜெ பி கடைபிடித்தால் தமிழ் மக்களின் வெறுப்பைத்தான் சம்பாதிக்க நேரிடும் ..தி மு க ..ஆ தி மு க ..செய்த ஊழலை ..தவறுகளை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டுவந்தாலும் தமிழகத்தில் உள்ள பிரச்னைகளில் பிஜேபி கவனம் செலுத்தினாலும் தமிழ் மக்கள் நன்மதிப்பை பெறமுடியும் .

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  கொஞ்சமாவது மக்களுக்கு ஆட்சி செய்யுங்கப்பா? 5 வருடத்தில் கொடுங்க 50 வருட செய்யாததை செய்வேன் என்றீர்கள், 15 லட்சம் என்றீர்கள், 2 கோடி வேலை வாய்ப்பை காணும், டாலோர் இன்னும் 45கு வருல, பொருளாதாரமோ படுத்து தூங்குது, காஸ் சிலிண்டர் விலையை எதியாட்சி மானியத்தை cut பண்ணியாச்சு gst போட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறீர்கள் ஏதாவது உருப்படியா செய்யுங்கப்பா எப்ப பாரு ஒரே அரசியல் அரசியல் திசை திருப்பல்களிலேயே நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது

 • Anbazhagan M - Mapusa, Goa,இந்தியா

  திமுகவை ஒன்னும் பண்ண முடியாது ... பீஜேபியோட அழிவு தமிழ்நாட்டிலிருந்து தான் ஆரம்பம்...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ரெண்டு சதவிகித வாக்குகளை வைத்துக்கொண்டு இவங்க ஆடுற ஆட்டம் ஓவரா இருக்கு, ஒரே தைரியம், வருமான வரித்துறை, சி.பி.ஐ., அந்நிய செலாவணி இலாகா, மத்திய புலனாய்வுத்துறை, இப்படி இவங்க கட்சியில் நிறைய கிளைகள் இருக்கு, என்ன செய்தாலும் வளர்ந்து வரும் ஸ்டாலின் அவர்களின் செல்வாக்கை உடைக்க முடியாது

 • mindum vasantham - madurai,இந்தியா

  Admk irukkira varaikkum than DMK ,pulanthu kattungaa

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  ஸ்வாமி சொன்னாப்ல திருடர்கள் முன்னேற்ற கழகம் கருணாவுக்கு பின்பு காணாமல் போய்விடும்.

 • Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா

  தி.மு.க.,வின் சூரியன் மறைந்து, மோடி என்னும் சூரியன் உதயமா, அதிலும் எங்கள் சூரியன் தான், சூரியன் இல்லாமல் உங்கள் மோடி , ஈ,ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ...........................................

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பிஜேபி கட்சியை வளர்க்கும் விதம்..... IT ரைடு, அமலாக்கத்துறை மிரட்டல், சிபிஐ விசாரணை... புதிய ஆயுதம் GST வரி ஏய்ப்பு சோதனை .....அடுத்த கட்சியை உடைப்பது......இப்படி கட்சியை வளர்ப்பவர்கள் யோக்கியர்களாம் ...... இதற்கு சொம்படிக்க ஒரு பக்த கேடி கூட்டம்.....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்....

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  என்ன எப்ப பார்த்தாலும் அமித்சா வருகிறார் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் .அவர் என்ன பெரிய மலை பிடிங்கி மகாதேவனா ? எத்தனையோ தலைவர்களை தி மு க பார்த்து விட்டது .இவர் பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்

 • sam - Doha,கத்தார்

  யார் ஒழிய போகிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நிச்சயமாக அறிவார்கள். இப்படி பிஜேபி பேசி கொண்டே இருந்தால் யார் இன்னும் செல்வாக்கு பெறுவார்கள் என்பதும் தெரியும். முதலில் ஏதாவது உருப்படியான தமிழ் மக்களுக்கு செய்தால் தான் கொஞ்சமாவது பிஜேபி யை மக்கள் நினைப்பார்கள்.

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  அப்படியானால் மோடியின் தோல்வியின் அத்தியாயம் தமிழகத்தில் இருந்தே துவங்கும் . மக்களின் மன நிலையை ஆளும் பிஜேபி யோ , மோடிக்கோ புரியவைக்க தயாராய் இல்லை . முன்பு இருந்த தலைவர்கள் எல்லாம் , அவர்கள் ஒரு பகுதிக்கு வரும் போது, நம் பூமிக்கு ஏதோ நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்பது இயல்பு . ஆனால் இன்றோ , இவ்வளவு கீழிறங்கும் ஒரு தலைவன் , ஒரு கட்சி என இருந்தும் அதை அதன் ஆதரவாளர்கள் நினைப்பது நடுநிலை இல்லை என்பதையே உணர்த்தும் . வரும் தேர்தல்கள் மோடிக்கு கடுமையான அடியாகவும் அமையலாம். வாஜ்பாய் செய்ததில் கூட ஒன்றும் சரியாத மோடியை இவர்கள் ஆதரிப்பது சர்வாதிகார பூமிக்கே வழி வகுக்கும் .நாடு பிளவுறும் .

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  நான் பிஜேபியை ஆதரிப்பவன் தான். அதே சமயத்தில் எதிர் கட்சிகள் பலமிழப்பதை ஆதரிக்க வில்லை.

 • மகேஷ் -

  இந்த மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் செல்லாது. அமைதியான தமிழகத்தை பஜக சீர்குலைக்க முயல்கின்றனர்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழகத்தில் தேசியம் பல காலமாக தேய்ந்து வந்துள்ளது... அதற்க்கு பிரதான காரணம் திருடர்கள் கூட்டணிதான்... முதலில் தேச விரோதிகளை ஒடுக்கவேண்டும்... இந்துக்களை ஒருங்கிணைத்து, RSS போன்ற தேசநலனுக்கு உதவும் அமைப்புக்களை வளர்க்க வேண்டும்...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இப்படித் தான் 1984 லோக் சபா தேர்தலில் பா ஜ க விமரிசனம் செய்யப்பட்டது அப்போது பா ஜ க 2 இடங்கள் மட்டுமே பெற்றது . இப்போது தனிப்பெரும்பான்மை . யாரும் எதையும் முடிவு செய்ய முடியாது . காலம் தான் பதில் சொல்லும்

 • nanjil - Nagercoil,இந்தியா

  நாடு முழுவதும் உள்ள கட்சிளை பிளவுப்படுத்தி ஆட்சிகளை பல மாநிலங்களில் உருவாக்க ஒரு கட்சி முயலுமானால் அது அரசியல் குற்றம். இத்கைய அவமானகரமான நடவடிக்கைளை தேர்தல் கமிசன் கண்காணித்து தடுத்து நிறுத்தவேண்டும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அதிமுக தனக்கான பாயாசத்தைத் தானே போட்டுக்கொண்டது. திமுகவுக்கோ 2  ஜி பாயசம் ரெடி. இதுவும் அவர்கள் செய்த முன்வினைப்பவன் தானே? இவர்களை ஒழிக்க பாஜக உழைக்க வேண்டியதில்லை 

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  வாழ்க ஹிந்திய நாடு

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  தமிழகத்தில் எப்பொழுதோ மதசண்டைகள் நடக்க ஆரம்பித்து விட்டது கோயம்புத்தூர் குன்டு வெடிப்பு தெரியாதா இந்து தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் பதில் தாக்குதல் இல்லை இந்துக்கள் அமைதியாக உள்ளனர்

 • Madurai Raja - Madurai,இந்தியா

  திமுக ஒரு பொழுதும் பிஜேபி யை ஒரு பொருட்டாக கருதியது கிடையாது.

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  திமுக அடிமட்ட மக்களால் உருவான கட்சி... அதை மூட்டை பூச்சி போல நசுக்குவேன் என சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்....

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  தனது கொள்கைகளை...கருத்துக்களை..சாதனைகளை சொல்லி கட்சியை வளர்க்க வேண்டுமே தவிர பிற கட்சிகளை தனது அதிகார பலம் கொண்டு பிளவுபடுத்தி அதன் மூலாம் தன்னை வளர்ப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?

 • Madurai Raja - Madurai,இந்தியா

  பிஜேபி இங்கு படுகொலை(கள்) நடத்தியோ அல்லது துரோக அரசியல் செய்தோ அல்லது ஓட்டிற்கு பணம் கொடுத்தோ அல்லது கட்சிகளை மிரட்டியோ தான் ஆள முயற்சி பண்ணும். வேறு வழிகளே கிடையாது. ஏனென்றால் கமல் சொல்ற மாதிரி, இது வேற நாடு.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இப்படி எதிர்கட்சிகளை மிரட்டியே அரசியல் செய்வதும் ஒரு பிழைப்பா? கருணாநிதி கூட இவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்திருப்பாரா? என்று தெரியவில்லை.

 • Tamil - Madurai,இந்தியா

  அமீத்சா வெற்றிபெற்ற கையோடு வியூகம் வகுக்க தமிழ்நாடு வருவதாக எழுதியுள்ளியிர்கள் , அமீட்சாவும் மோடியும் R S S ம் B J P ம் வகுத்த வியூகம் தோற்ற கையோடு தமிழகம் வருகிறார் என்றுபோடலாமே

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இந்த பி.ஜெ.பி யினர் எங்காவது எப்படியாவது குட்டையை குழப்பி குடும்பத்தை கலைப்பதே வேலை. இவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியாது. இந்த பண்டார கட்சியினால் ஒன்றும் மாற்றம் நிகழ் போவதில்லை தமிழகத்தில் .நேர்மையான அரசியல் செய்து ஆட்சியை பிடிக்க எத்தனை அமித்ஷா எத்தனை மோடி வந்தாலும் முடியாது.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  அப்போ தமிழகத்திலும் இனிமேல் படுகொலைகள் ஆரம்பிக்குமா, மதவெறிகள் தூண்டப்படுமா, அமைதிப்பூங்காவிற்கே ஆபத்தா

 • R Sanjay - Chennai,இந்தியா

  பாயுங்க பாயுங்க தமிழ் நாட்டுல கொஞ்சமா கோமணம் மாதிரி ஒட்டினு இருக்குற அந்த 2 சதவிகித ஓட்டுக்கூட இல்லாம போயிடப்போகுது.. குய்யோமுய்யோ ன்னு அல்லக்கைகள் அலறப்போறாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement