Advertisement

அ.தி.மு.க., விவகாரத்தில் பா.ஜ., ஆர்வம் ஏன்?

அ.தி.மு.க., அணிகளை இணைத்து, அவர்களு டன் கூட்டணி வைத்து, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளதன் காரணமா கவே, இரு அணிகள் இணைப்பில், பா.ஜ., ஆர்வம் காட்டுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ., மறைந்ததும், முதல்வரான பன்னீர் செல்வம், மத்திய அரசுக்கு இணக்கமாக இருந் தார். இதை விரும்பாத சசிகலா, அவரை நீக்கி விட்டு, தான் முதல்வராக முயற்சித்தார். இதை மத்திய அரசுவிரும்பவில்லை.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறை சென்றார். அவரது அணியைச் சேர்ந்த பழனிசாமி, முதல்வரானார். அவரை மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தற்போது, முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

எனவே, இரு அணிகளையும் இணைக்க, பா.ஜ.,
முடிவு செய்தது. இதற்கு, பன்னீர் தரப்பில் சில நிபந் தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சசிகலா குடும் பத்தை, கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்பது முக்கியமானது.அதற்கு, பழனிசாமி அணி யினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதேபோல், முதல் வர் மற்றும் பொதுச்செயலர் பதவியை விட்டுக் கொடுக்கவும் பழனிசாமிசம்மதிக்காததால், இணைப்பு இழுபறியானது.

ஆனால், இரு அணிகளும் கண்டிப்பாக இணைய வேண்டும் என, பா.ஜ., நிர்ப்பந்தித்து வந்தது. அதைத் தொடர்ந்து, 'தினகரன் நியமனம் சட்ட விரோத மா னது' என, முதல்வர் பழனிசாமி அணியினர், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேலும், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு, இரு அணியின ரும் டில்லி சென்றனர்.

அங்கு பேச்சு நடந்ததாக, தகவல் வெளியாகி உள் ளது. இரு அணிகளிலும், பலர் இணைப்பை விரும் பாத நிலையில், பா.ஜ., தமிழ கத்தில் காலுான்று வதற்காக, இரு அணிகளையும் இணைக்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது:அ.தி.மு.க., தற்போதுமூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் தேர்தலில், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். இதை, பா.ஜ., விரும்பவில்லை. பன்னீர் அணியுடன் மட்டும், பா.ஜ., கூட்டணி அமைத்தாலும், வெற்றி பெறுவது கடினமாகும்.

எனவே, சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டிவிட்டு,
இரு அணிகளையும் இணைத்து, இரட்டை இலை சின்னத்தை பெற, பா.ஜ., உதவி வருகி றது. இரு அணிகள் இணைந்ததும், அ.தி.மு.க., வுடன் இணைந்து, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, பா.ஜ., விரும்புகிறது. உள்ளாட்சி தேர்தலில், மக்களின் மனநிலை என்ன என்பது தெரிந்து விடும்.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, மக்கள் ஏற்றுக் கொண்டால், அதே கூட்டணியை, லோக்சபா தேர்தலில் தொடர்வது; மக்கள் ஏற்று கொள்ளாவிட்டால், வேறு கூட்டணியை ஏற்படுத்துவது என, பா.ஜ., முடிவு செய்துள் ளது.அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறது. ஆனால், இரு அணியினரும், முக்கிய பதவிகளை விரும்புவதால், இணைப்பு தள்ளிப் போகிறது. இவ்வாறு அவர்கள்கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • sam - Doha,கத்தார்

  இவர்களை எத்தனை பேருடன் கூட்டு வைத்தாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வுவது உறுதி

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  இரட்டை இலையுடன் கூட்டணி வைத்தாலும் தாமரையால் தமிழகத்தில் காலூன்ற முடியாது .... செய்தது கொஞ்ச நஞ்சமா ? இம்முறை பல சிறிய கட்சிகளின் அசுரர் வளர்ச்சியை நாம் பார்க்க போகிறோம் .... வாஜ்பாயிக்கு நேர்ந்தது மோடிக்கும் நிகழும் ...

 • sam - Doha,கத்தார்

  இந்த லஞ்ச லாவண்ய ஆட்களுடன் கூட்டு வைத்தால் என்ன நடக்கும் என்று பிஜேபி அறிந்து தான் செய்கிறதா என்பது தெரிய வில்லை. ஏதாவது மக்களுக்கு நல்லது செய்தால் தான் மக்கள் பிஜேபி யை பற்றி நினைப்பார்கள். குறுக்கு வழியில் சென்றால் அழிவு தான்

 • Siva Natarajan - Owings Mills,யூ.எஸ்.ஏ

  AUG 10TH WAS THE DATE GIVEN FOR 2G SCAM JUDGEMENT. WHY IT'S GETTING DELAYED AND NO MAGAZINE ASKING FOR IT

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement