Advertisement

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரசின் அஹமது படேல் வெற்றி

காந்திநகர்: குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அஹமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி மற்ற இரு இடங்களில் வெற்றி பெற்றனர்.


வியூகங்கள்:




குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ.,சார்பில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியானது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காங்.,சார்பில் அஹமது படேல், பா.ஜ., சார்பில் காங்., கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவிய, பல்வந்சிங் நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அஹமது படேலை தோற்கடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது.


‛கூவத்தூர் ' பாணி:




முன்னதாக காங்., கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து குஜராத் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ‛கூவத்தூர் ' பாணியில் நடந்த இந்த நிகழ்வில் குதிரை பேரம் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த தனியார் விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையும் நடந்தினர்.


கோரிக்கையும்.. எதிர்ப்பும்..




இந்நிலையில் நேற்று (ஆக. 8) நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டு சீட்டை பா.ஜ.,வினருக்கு காண்பித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து 2 எம்.எல்,ஏக்களின் ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்க காங்.,தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு பா.ஜ., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டு எண்ணும் பணி நீண்ட நேரமாக காலதாமதம் ஏற்பட்டது.


செல்லாது:




தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஓட்டுபதிவின் வீடியோவை ஆய்வு செய்தது. இதனையடுத்து காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் ஒட்டு எண்ணும் பணி நள்ளிரவு தாண்டிய பின்னர் துவங்கியது.


அகமது படேல் வெற்றி:




முடிவில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோர் தலா 46 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். இழுபறியாக இருந்த 3 வது சீட்டிற்கான போட்டியில், வெற்றிக்கு தேவையான 44 ஓட்டுகளை பெற்று காங்., கட்சியின் அஹமது படேல் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பல்வந்த் சிங் 38 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.


இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா, ஸ்மிரிதி ராணி, மற்றும் காங்., சார்பில் போட்டியிட்ட அஹமதுபடேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.


என தலைவர்கள் கருத்து:




வெற்றி பெற்றது குறித்து அஹமது படேல் தனது டுவிட்டரில் ‛‛வாய்மையே வென்றது'' என பதிவிட்டுள்ளார். அஹமது படேலின் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.


இதற்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலில் இது போன்ற பரபரப்புகளும், திருப்பங்களும் ஏற்பட்டதில்லை என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (179)

  • Cheran - Kongu seemai,இந்தியா

    சாதாரணமாக இந்த தேர்தலை விட்டு இருந்தால் பிஜேபி யின் வெற்றி பெரிதாக பட்டு இருக்கும். அதுவும், அமித் ஷாவின் MP தேர்வு பெரிதாக பட்டு இருக்கும். ஆனால் காங்கிரெஸ்ஸை தோற்கடிக்க குறுக்கு வழியை வலியனே தேர்ந்தெடுத்து அசிங்கமான அரசியல் செய்ய முற்ப்பட்டதே இங்கு பிரச்சினை. அசிங்கப்பட்டார் அமித் ஷா...

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    பிஜேபி க்கு வோட்டு போட்ட இரண்டு காங்கிரஸ் MLA வடிவேல் காமெடி பார்த்து இருப்பாங்க .......... அது தன வோட்டு சீட்டை கட்டி இருக்காங்க

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    மோடியின் செயலுக்கு மோடியின் மாநிலத்தில் இருந்து வந்த முதல் தோல்வி

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றது பெரிதாக படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் முதல் முதலாக பிஜேபி வெற்றி பெற்றது பெரிதாக படவில்லை. உப ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றது பெரிதாக படவில்லை. ராஜ்யசபா தேர்தலில் பிஜேபி முதன் முதலாக அதிக எண்ணிக்கை பெற்றிருப்பது பெரிதாக படவில்லை. குஜராத் தேர்தலில் மூன்றில் இரண்டு பேர் பிஜேபி கட்சியில் வெற்றி பெற்றது இவர்களுக்கு பெரிதாக படவில்லை..ஆனால் இவர்கள் சிவகங்கை பார்மூலாவில் கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு என்னும் இடத்தில் சிதம்பரம் செய்த மாயாஜாலத்தை செய்து வெற்றி பெற்றதை போல தற்போது அரங்கேற்றி வெற்றி பெற்றது தான் பெரிதாக படுகிறது. வெறும் 43 ஓட்டுகளில் கொள்ளைக்கார கூட்டாளி ஒருவர் பெற்ற வெற்றி தான் இவர்கள் சாப்பிட்டதை ஜீரணிக்க வைத்து இருக்கிறது. பாவம் அப்பாவிகள். அவர்கள் இன்னும் இருபது வருடம் இந்த வெற்றியை நினைத்து கொண்டாடி ஆனந்தம் கொண்டு இருக்கவே நானும் விரும்புகிறேன். ஒரு நிமிட சந்தோசம் கூட இல்லாமல் நீண்ட வருட கால மனம் இறுக்கம் காரணமாக நாட்டில் ஒரு பெரும் தேசத்துரோக கூட்டம் பைத்தியக்காரர்களாக மாறி விடாமல் தடுக்க இந்த வெற்றி அவர்களுக்கு உதவட்டும்....

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    விரைவில் குஜராத் தேர்தல் மக்கள் முடிவு விரைவில் தெரிய வரும்.

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    நல்ல வேளை. ஓட்டளிக்க வாக்கு பதிவு இயந்திரம் பயன் படுதலை . இதனால் காங்கிரஸ் வென்றது .இல்லை உ பி கதிதான். பிஜேபிக்கு பெரும் செலவுதான் . காசை வாங்கிப்புட்டு வாக்கும் போடாமல் காங்கிரஸ் MLA கள் அமித் ஷா வுக்கு அல்வா கொடுத்திட்டார்கள் .

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற காங்கிரசின் கணக்கு, அதற்கு வக்காலத்துக்கு அக்கறை மாமனிதர்கள்.

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

    கண்டிப்பா அஹ்மத் படேல் தோற்பார் என்று பிஜேபி வாங்கி வெச்சிருக்கும் செய்தி நிறுவங்கள் நேற்று மாலையில் இருந்து இது சோனியாவுக்கு தோல்வி , காங்கிரஸ் அழிவின் முடிவு , சாணக்யத்தனம் என்று டமாரம் அடித்து கொண்டு இருந்தார்கள் .. 12 மணிக்கு பிறகு அவர்கள் முகத்தை பார்க்கணுமே , அதுவும் அந்த அர்னாப் . ஹி ஹி ..

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

    இது சாணக்யத்தனம் என்று கூறிய மேதாவிகளுக்கும் , சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பல கோடி செலவு செய்த பிஜேபிக்கு சவுக்கடி .. அந்த ரெண்டு அறிவாளிகளும் அய்யா பாருங்க அய்யா நாங்க உங்களுக்கு தான் ஓட்டு போட்டு இருக்கோம் , கணக்கு வழக்கு சரியாய் இருக்கணும்யா என்று வாக்கு சீட்டை காட்டி மாட்டி கொண்டார்கள் .. செம காமெடி..

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

    இங்கே தேச வேஷன் , ஊசிமணி , இடவை போன்றவர்களின் கருத்தை படிக்க செம சிரிப்பா இருக்கு .. நேற்று வரை இது சாணக்யத்தனம் , காங்கிரஸின் கையாலாகாத தனம் என்று கூவிட்டு இன்னிக்கு வந்து சமாளிப்பு .. தேர்தல் கமிஷன் வேற நியாயமா நடந்துச்சாம் .. எப்பிடி எப்பிடி பிஜேபி 3 வதா நிறுத்திய நபர் வாங்கிய ஓட்டு 38 இன்னும் 2 சேர்த்தாலும் அஹ்மத் படேல் வெற்றி உறுதி , கூட பிஜேபி வாக்கு பதிவின் போது செய்த காரியம் வீடியோவாக வெளியே வந்து பல்ல இளிக்குது .. அய்யா எப்பிடி இருந்தாலும் வெற்றி பெற முடியாது , நீதிமன்றம் சென்றாலும் தேர்தல் கமிஷன் தலை காட்ட முடியாது , பேசாம எங்க பெயரை காப்பாற்றி கொள்கிறோம் என்று அனுமதி வாங்கி அறிவித்தது போல அல்லவா இருக்கு ?? ஆனா இந்த வேகத்தை காங்கிரஸ் மற்ற தேர்தல்களிலும் காட்டி இருக்கலாம் .. காட்டி இருந்தா கோவா , மணிப்பூரில் எல்லாம் ஆட்சி அமைத்து இருக்கலாம் .. சோம்பல் முறித்து இப்போதாவது எழுந்தார்களே..

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இறைவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஆகையால் தான் அந்த இரு எம் எல் ஏ கள் தாங்கள் மாற்றி அளித்த வோட்டை பி ஜே பி காரர்களுக்கு காண்பித்து அவர்களின் அறியாமையில் அது விதி படி செல்லாது என்றாகி யார் வெற்றி பெற்றிருக்க வேண்டுமோ நடைமுறைப் படி அவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

  • R Sanjay - Chennai,இந்தியா

    காங்கிரஸ் பிஜேபி இரண்டு மாபெரும் ஊழல் கட்சிகளும், அடுத்த கட்சி MLAக்களை பணத்தால் வளைத்து போட்டு தான் நினைப்பதை சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் என இதன் மூலம் நன்றாக விளங்கிவிட்டது, என்ன இன்று பிஜேபி இப்படி வெளிப்படையாக நடந்துகொண்டது, இதை காங்கிரஸ் ஏற்கனவே பல முறை பல தேர்தல் சமயங்களில் செய்துவிட்டது (உதாரணம்: 2009 to 2014 பார்லிமென்டில் இதே காங்கிரஸ் அரசு காலகட்டத்தில் பிஜேபி MP க்களை பணம் கொடுத்து இழுக்க முனைந்தது அந்த விஷயத்தை சில பிஜேபி MPக்கள் காங்கிரஸ் கொடுத்த பணக்கட்டை சபாநாயகரிடம் காண்பித்து போராட்டம் நடந்த அசிங்கமும் நடந்தேறியது) இந்த இரண்டு ஊழல் கட்சிகளில் இன்று பிஜேபிக்கு செருப்படி தான் கிடைத்துள்ளது. கிடைப்பதை வைத்து திருப்தி அடைவதே சாலச்சிறந்தது மாறாக ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருக்கிறது தேர்தல் ஆணையத்தை வளைத்து விடலாம் என நினைத்து அதுக்கும் மேல அதுக்கும் மேலன்னு போன பிஜேபிக்கு இன்று வரலாற்றில் ஒரு கரும்புள்ளி நாள் என்று தான் கூறவேண்டும். இதை என் தமிழ் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று அன்றே கூறிவிட்டது. எதையும் சாதிக்க துப்பில்லாமல் தன் முகத்தில் தானே கரியை பூசிக்கொண்டது மத்திய பிஜேபி அரசு, இனி எல்லாவிதத்திலும் இவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும். வாருங்க காங்கிரஸ்/ பிஜேபி அல்லக்கைகள் என்னை வசை மாறி பொழிய.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    இதுதான் நடக்க போகுது... கோர்ட்டுக்கு போனா, தேர்தல் ஆணையம் சொன்னது தப்புன்னு சொல்லப்போறாங்க... இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாகுபாடு இல்லாம இருந்தாங்கன்னு நல்ல பேர் கிடைக்கும்... அநியாயமும் தோத்து போகும்... இன்னிக்கு தேர்தல் ஆணையம் காங்கிரஸுக்கு எதிரே சொல்லிருந்தாங்கன்னா பியூஸ் போன கும்பல் எல்லாம் கொஞ்சம் குதிக்கும்... கோர்ட்டுக்கு போனா அது வேகாது..

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    இந்திய ஜனநாயகம் இன்னும் பல படிகள் மலைகள் ஏறி முன்னேற வேண்டும் வாக்காளர்கள் விலை போனால் வேட்பாளர்கள் பலதடவையோ அல்லது குடும்ப விவகாரமாகவோ நினைத்து போட்டியிடுவது எல்லாமே வேடிக்கை 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் சில பேரே மீண்டும் மீண்டும் போட்டி வெற்றி என்ன ஒரு சூதாட்டம்

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    நெறி முறை தவறி நடந்தால்( ஜனநாயக படுகொலை) செய்தால் சூடு போட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று இந்த தேர்தல் மூலம் தெளிவு படுத்த படுகின்றது. முறை தவறி ஜனநாயக படுகொலை செய்து மணிப்பூர் கோவாவை கைப்பற்றியது போல் இங்கேயும் செய்யலாம் என்று எண்ணினார்கள் அது இங்கே எடுபடவில்லை உண்மையில் இது வாய்மையே வெற்றி பெற்று உள்ளது . காசுவாங்கி கொண்டு ஓட்டு மாறி போட்டவர்களுக்கு இது செருப்படி தான்

  • Veeran - Kanyakumari,இந்தியா

    15 கோடி அமித் ஷா கொடுத்தது எல்லாம் வீணா போச்சா, இவன் யாரு மனசுல ராஜான்னு நினைப்பு, இவர் ராஜசபை வரும் போது பட்டேல் இருக்க கூடாதாம் பிஜேபி காவி மக்கள் கொஞ்சம் சொல்லுங்க ராஜா ஆட்சி எல்லாம் எப்போவோ முடிந்து போயிட்டு இப்போது ஜனநாயகம் நடக்குது

  • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

    பாஜகவுக்கு இந்த ... போதுமா ?

  • raghuraman -

    படேல் வெற்றி பெற்ற விதம் ஷாவிற்கு வெற்றி. ஓடி ஆடி நாக்கு தள்ளி படேல் ஜெயித்தார். அரசியலில் இது சகஜமப்பா

  • murugabhupathi - rishikesh,இந்தியா

    தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவை என்று சொன்னவங்கெல்லாம் எங்கப்பா? சசி மேட்டரில் மோடி கண்ணசைவு கிடைக்காதலால் தேர்தல் ஆணையம் சைலெண்டா இருக்குன்னு சொன்னீங்க.

  • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    நாட்டில் தொழில் முன்னற்றமில்லை, வேலை வாய்ப்பில்லை, விலைவாசி குறையவில்லை இப்படியே போனால் பிஜேபி 2019 தேர்தலில் காணாமல் போய்விடும் எனவேதான் இப்போதே ஒவ்வொரு கட்சி MLA MP க்க்ளை விலை கொடுத்து பிஜேபி வாங்குகிறது. இவர்களுக்கும் ஒரு சாதாரண வியாபாரிக்கும் என்ன வித்தியாசம்.....?

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

    பிஜேபி க்கு சீனா பிரச்சனையை விட ராஜ்யசபா பெரிய பிரச்சனை இதற்காக தான் வியூகம் வகுக்கப்பட்டதாம்., அவன் டெய்லியும் அறிக்கை விடுறான் இவர்களோ ரூம்போட்டு காங்கிரஸ் எப்படி துவசம் பண்ணலாம் என்று யோசிக்கிறார்கள்., மக்கள் ஒரு கணம் யோசிக்கணும் அதாவது யானை பலத்தை ஒரு கட்சிக்கு கொடுக்க கூடாது.

  • அப்பாவி - coimbatore,இந்தியா

    "அஹமது படேலை தோற்கடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது.காங்., கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியது." இதுவெல்லாம் பா ஜ கவின் நேர்மையான முயற்சியால் நடந்த நிகழ்வா? திருட்டு கழகங்களை மிஞ்சும் பா ஜ க.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    தேர்தல் கமிஷனின் கான் கிராஸ் ஏஜெண்டுகள் தனது பழைய எஜமானர்களுக்கு தகுந்த நேரத்தில் செய்திருக்கும் உதவி. தேர்தலில் கலந்து கொண்டு வாக்கு அளித்து வரும் ஒருவர் தனது வாக்கு சீட்டின் மீதி பகுதியை காட்டுவது என்பது தவறு இல்லை என்பதை நமது ஊரில் நடக்கும் தினமும் நடக்கும் கூத்து. மீதி இருக்கும் சீட்டில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்க முடியாது. வாக்கு அளிப்பதற்கு முன்பு இந்த தவறை செய்திருந்தால் அது தவறு. ஆனால் நேற்று நடந்திருப்பது கான் கிராஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஜனநாயக கொலை. வாக்கு அளித்த பிறகு வாக்கு சீட்டை காண்பித்ததற்காக பிஜேபி எம் எல் ஏ வின் ஒட்டு நிராகரிக்கப்பட்டு உள்ளது. கான் கிராஸ் கட்சியின் கொள்ளைக்கார ஏஜெண்டை காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. கான் கிராஸ் கொள்ளைக்கூட்டத்தின் எச்சங்கள் ஆட்சி அதிகாரத்தின் இருக்கைகளின் இருந்து இன்னமும் முழுவதுமாக துடைத்தெறியப்பட என்பதற்கான ஒரு சிறந்த ஆதாரம் இது. மோடி அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • senthil - chennai,இந்தியா

    கூவத்தூர் பாணியில் தனது கட்சி mla வை fraud பிஜேபி இடம் இருந்து காப்பாத்தியது காங்கிரஸ் ......வாழ்த்துக்கள் ......

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இனிமெட்டு இவுனுவளுக்கு இதுதான் நெறய கிடைக்கும்...

  • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

    இனிமேல் காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றிதான். கோவா மற்றும் மேகாலயாவில் இந்த ஜாதி கட்சிகள் ஆடிய ஆட்டம் என்ன? கட்சி மாறி வோட்டு போட்ட எம்.எல்.எக்களுக்கு பதவியை பறிக்க வேண்டும். மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆள வேண்டும்.

  • பொன் வண்ணன் - chennai,இந்தியா

    இந்த போலி ஜனநாயகத்தை வைத்து கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லையே இல்லை... பண நாயகத்தான் இப்போதும் வென்றது...பிஜேபி ஒன்றும் புனிதர்களின் கட்சி அல்ல...அதுவும் ஊழல் லஞ்சம் இவற்றால் அழுகிப்போன ஒன்றுதான் என்பது இந்த இரண்டு மூன்று நாட்களில் நிரூபணம் ஆகி உள்ளது....

  • Ram Babu - Trivandrum,இந்தியா

    பிஜேபி மக்களுக்கு நல்லது செய்யாமல் மேக் இந்தியா புதிய இந்தியா பழைய இந்தியா என்று எத்தனை வருசமாக சொல்வார்கள். இருக்கிற இரண்டு வருடமாவது மக்களுக்கு நன்மை செய்யுங்கள் .

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    பண பலம், குண்டர் பலம், பிறவி கோண புத்தி பலம் எல்லாத்துக்கும் வெச்சாங்கயா சூப்பர் ஆப்பு..... வர்ற போற State assembly எலெக்சன்ல BJP யோட தோப்புக்கு இப்பமே அச்சாரம் போட்டாச்சு.....

  • Chandrasekar Ramasamy - madurai,இந்தியா

    பா ஜ க இனியாவது மரியாதையோடு அரசியல் செய்வது நல்லது

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

    இத்தனை க்ளோபரங்களுக்கு மத்தியில் அகமது படேல் பெற்ற வெற்றிதான் உண்மையிலேயே இமாலய வெற்றி ,ஒரு தனி மனிதனுக்கு எதிராக எத்தனை சூழ்ச்சிகள் ,எவ்வளவு கோல்மால்கள் ,ஒரு ஓட்டுக்கு பதினைந்து கோடி பேரங்கள், படேல் மேல் எவ்வளவு பயம் இருந்திருந்தால் இத்தனை இறங்கி பாஜக பகீரத பிரயத்தனம் பட்டிருக்கும் ? களத்தில் நின்று பாஜக விற்கு மரண பயத்தை காட்டிய அகமது படேல் ஹீரோ தான் , குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் இந்த வெற்றி , மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கவனிக்காமல் காங்கிரஸ் MLA களை வளைப்பதில் ஆர்வம் காட்டிய பாஜக விற்கு குஜராத் மக்கள் ஆப்பு அடிக்க கவுண்டவுன் தொடங்கி விட்டது. சத்யமேவ ஜெயதே.....

  • Sampath Kumar - chennai,இந்தியா

    குஜராத்திலே ஊத்திக்கிச்சு நல்ல ஆரம்பம் தான்

  • Appu - Madurai,இந்தியா

    இந்த மேட்டரில் பாஜக சொதப்பியது ஆச்சரியமாகவே உள்ளது.வட போச்சே

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

    அகமது படேல் தோற்றால் சோனியா அவர்கள் இத்தாலிக்கு மூட்டை முடிச்சு கட்டட்டும்ன்னு சொன்ன தேஷ் பக்கத்தால் எங்கப்பா ? உங்க மூட்ட முடிச்செல்லாம் கட்டிட்டிங்களா ? அது சரி மூட்ட முடிச்ச கட்டி என்ன பிரயோஜனம் ஒண்டுவதற்கு ஒரு நாதியும் இல்லாத வந்தேறிகள் ஆயிற்றே நீங்க.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    தனது முழு பலத்தையும் உபயோகம் செய்தும், அதிகாரம், ஆட்சி, பண பலம் என்று சகல அதிகாரங்களும் கையில் இருந்தும், தனக்கு தெரிந்த அணைத்து வித்தைகளையும் உபயோகித்தும் அஹ்மத் படேல் அவர்களின் வெற்றியை தடுக்க முடியவில்லை, ஒன்று மட்டும் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒருத்தரின் பதவியை பறிக்க, தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்கு பி.ஜெ.பி எந்த வேலையையும் செய்ய தயங்காது.

  • kadhiravan - thiruvaroor,இந்தியா

    பா.ஜ.க வின் செயலை பார்த்து உலகமே நகைத்து கொண்டு இருக்கிறது..,நாட்டு மக்களுக்கு நல்லது செய்யக்காணும்.., இருக்கிற இரண்டு வருடமாவது மக்களுக்கான நல்ல செயல்களை செய்தால் உங்களுக்கு நல்லது.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    கட்சி மாறி வாக்களித்து, அந்த வாக்கு சீட்டை வெளிப்படையாக காட்டிய உறுப்பினர் வாக்கை செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துக்கள்..... சுயமாக செயல்படும் அமைப்பு என்று நிரூபணம் ஆகிறது... ஆனால், அதே தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் களத்தில் விளையாடும் பணத்துக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாமல் விழி பிதுங்கி நிற்கிறது.....

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை, மிஷினில் கோளாறு செய்தே பாஜக வெற்றி பெறுகிறது என்று ஒரு சொம்பை கருத்து சொல்லுவான், அவனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்...

  • NRK Theesan - chennai,இந்தியா

    கனிமொழி வெற்றியைவிட இது ஒன்றும் பெரிய வெற்றியில்லை. ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து எதிர் கட்சியை அளித்து இதைவிட பெரிய ஜனநாயக படுகொலை நடந்தது ,அது பூசி மொழுகப்பட்டது .

  • sam - Doha,கத்தார்

    இந்த குறுக்கு வழியை நினைத்து பிஜேபி சென்றால் காங்கிரஸ் இக்கு ஏற்பட்ட கதிதான்.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    பணம்தான் இப்போதும் வெற்றி பெற்றுள்ளது...அதை யாரும் மறக்க வேண்டாம்.....

  • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

    கட்சி மாறி வாக்களித்த அனைத்து சடட மன்ற உறுப்பினர்களும் தங்களது எம் எல் ஏ பதவியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சூதை தர்மம் வெல்லும்

  • ravi -

    congratulations to the election commissioner for a clear verdict. it is a disgrace for bjp for stooping down to low levels. I am afraid at this rate they will loose 2019. I will never support or vote for Congress. but bjp better open your eyes before it is too late.

  • VOICE - CHENNAI,இந்தியா

    மக்களால் தேர்ந்து எடுக்கப்படாமல் MLA மூலம் தேர்ந்து எடுக்கப்படும் ராஜ்யசபா Mp சிஸ்டம் ஒரு டுபாக்கூர் சிஸ்டம். அது போல ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதமரும் மக்களால் மட்டுமே தேர்வு செய்யப்படவேண்டும், அது போல ஒரு ஒரு வருடமும் மக்கள் தங்கள் தொகுதி mla MP திரும்ப பெறும் முறை செயல்பாட்டுக்கு வருவதின் மூலம் வோட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடர வாய்ப்பு இல்லை.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    ஷாவுக்கு பெரிய்ய பரிசு, மூன்றாண்டுகளை தலீவராக நிறைவு செய்யும் வேளையில்.. அவர் "சாணக்கியர்"..

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஹாஹாஹா இங்கு கருத்துப் போடும் பல அறிவாளிகள் இந்திய தேர்தல் ஆணையமே அமித்ஷா மோதியின் முழுக்கட்டுபாட்டிலுள்ளது போல முன்பு கருத்து எழுதியவர்கள் தான் அவர்கள் துப்பியதை அவர்களே உண்ணட்டும்

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    ராஜ்ய சபா தேவையா ? தண்ட செலவு.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    வாய்மை வெல்லவில்லை அசிங்கமே வென்றது நமது நாட்டின் ஜனநாயக லட்சணத்தைப் பார்த்து உலகமே சிரிக்க வைத்தாயிற்று சோனியாவின் கிரிமினல் ஆலோசகர் ராஜ்யசபாவுக்கு வருவது இழுக்குத்தான் ஆனால் அதற்காக பாஜக இவ்வளவு போராடியிருக்க வேண்டாம் இன்னும் கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொண்டிருக்கலாம் காங்கிரஸைப் பற்றி சொல்லவே வேண்டாம் நான்கு முறை எம்பியாக இருந்து அவர் சாதித்த ஒரு முக்கிய திட்டம் 20000000000000 ரூபாய் நிலக்கரி ஊழல் தான்.(மறக்கமுடியாத இன்னொன்று சோனியாவை கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பட்டதாரி என தேர்தல் ஆவணத்தில் குறிப்பிடவைத்த கிரிமினல் வேலை) இப்படிப்பட்டவரை ஹவாலாவுக்கு உதவும் ஒரே காரணத்துக்காக மீண்டும் எப்படியாவது எம்பியாக்கிய சாதனைக்கு ஒரு குட்டு ஜனநாயகத்தின் கறுப்புநாள்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    காங்கிரசுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுப்பாலமாக இருப்பவர், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் சோனியாவின் பெயரைச்சொல்லி பணம் கறப்பவர், கட்சியின் மூத்த தலைவர்களை மிரட்டி சோனியாவுக்கு அடிபணிய வைப்பவர் (இர்ஷாத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு, மற்றும் சம்ஜவுத்தா ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் பாகிஸ்தானின் பங்கை மறைத்து காவி தீவிரவாதம் என்று பெரிய புளுகை அவிழ்த்து விட்டவர்) என்று பல புகழ்களுக்கு சொந்தமானவர். இளைஞர்களை கட்சிக்குள் பகைத்துக் கொண்டிருப்பதால் தான் ராகுல் நேற்று எல்லா நாடகங்களிலும் ஆப்சென்ட்.

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    படேலின் வெற்றி என்பது சாதாரண விஷயம். தோற்றிருந்தாலும் குடி முழுகி இருக்காது. ஆனால் மாபெரும் ஜனநாயக படுகொலையை தடுத்திருப்பது தான் வெற்றி.

  • Rags -

    அப்பாடா. ஒரு வழியா வெற்றி பெற்றார்கள். வாழ்த்துக்கள். எங்கே ராகுல் மற்றும் அவர் நண்பர்கள் காணவில்லை. படேல் சகாப்தம் முடியாதது இளைஞர்கள் குழுவிற்கு வருத்தமாக இருக்கும்

  • R.Nagarajan - CHENNAI,இந்தியா

    ஆட்சி பலம், பணபலம் போன்றவற்றால் வெல்ல முடியாதது ஜனநாயகம் மட்டுமே. ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் ஜெயித்தே தீரும். ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தே வேட்பாளரை நிறுத்துவது மகா முட்டாள்தனம். பிஜேபி க்கு சரியான அடி.

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    நியாயம் உங்கள் பக்கம் இருந்தததால் நீங்கள் ஜெய்த்துவிடீர்கள் அகமத் பட்டேல் சார். மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இங்கும் கூவத்தூர் தான் வெற்றிபெற்றுள்ளது. பிஜேபி க்கு இந்த முயற்சி தேவையற்றது. எல்லாம் தெரிந்திருந்தும் எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

  • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

    IT IS NOT ONLY THOSE TWO VOTES ARE D AS INVALID, THOSE TWO MLAS ARE TO BE DISQUALIFIED AND ARRESTED FOR VIOLATION OF PEOPLE REPRESENTATIVE ACT.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மறுதேர்தல் நடத்தவேண்டும்... காங்கிரஸ்காரர்கள் பலர் அணி மாறி வாக்களித்ததாக சொல்லி இருக்கிறார்கள்... MLA க்களையே அடிமைகள் போல அடைத்து வைப்பவர்கள் மக்களை என்ன பாடு படுத்துவார்கள்...

  • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

    /// இதற்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலில் இது போன்ற பரபரப்புகளும், திருப்பங்களும் ஏற்பட்டதில்லை என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்/// இது மட்டும்தான் பரபரப்பா, அடுத்த வாரம் சீனா காரன் ராணுவ நடவடிக்கை எடுக்குறதா சொல்லியிருக்கன், இப்படி மக்களை பரபரப்பா வைக்கிறதுதான் இவர்கள் வேலை.

  • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

    பிஜேபி தவறான நெறிமுறைகளை மக்களிடம் பரப்புகிறது.. அதுதான், காசும் அதிகாரமும் இருந்தால் என்ன வேணுமானாலும் பண்ணலாம் என்ற நெறிமுறை... இன்றைய இளைஞர்கள் சமுதாயம் நேர்மையான நெறிமுறைகளை எதிர்பார்க்கிறது ..

  • B.b.s Maduranthagan - Bangalore ,இந்தியா

    We are not getting news like this All bjp leaders and certral ministers went to srilanka to save the tamil fisher men All went to kathiramangalam to solve the ongc issue We are fools

  • B.b.s Maduranthagan - Bangalore ,இந்தியா

    Again Mr.Modi done a unwanted activity which leads to losing of his name in public

  • TamilReader - Dindigul,இந்தியா

    BJP should be ashamed for its childish and illicit acts in this election The party should sack its chief Amit Shah his childish and illicit acts

  • solaiyan - Sydney,ஆஸ்திரேலியா

    அமித் ஷாவுக்கு பேரிடி

  • Cheran - Kongu seemai,இந்தியா

    அஹ்மத் படேல் வெற்றி பெற்றதற்காக சந்தோசப்படுவதைவிட குறுக்கு வழியில் இந்த ராஜ்ய சபா சீட்டை பிடிக்க நினைத்த பிஜேபி தோற்றதில் பெரு மகிழ்ச்சி.

  • Cheran - Kongu seemai,இந்தியா

    BJP (mischievous party) will ruin the democratic tem of India. BJP invented RSScratic tem and spoiled democratic tem.

  • Cheran - Kongu seemai,இந்தியா

    Worst politics ever seen by our country so far. Money and power bought everything in this country including election commission. Better military power take over this country instead of the bunch of political jokers.

  • Cheran - Kongu seemai,இந்தியா

    Amit shah is exposed now.

  • Cheran - Kongu seemai,இந்தியா

    Shame on BJP and Shah for using money power to purchase the votes.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement