Advertisement

மதுரையின்னாலே 'மாஸ்' - சாதிக்கும் சங்கீதா

மலர்களில் இவர் மதுரை மல்லி; பேசத் துவங்கினால் செம கில்லி;
வம்பிழுக்கும் எதிரிக்கு வில்லி; வாதத் திறமையில் திணறடிப்பாள் சொல்லி; வேலையில் ஜொலிக்கும் வெள்ளி; ஒரு போதும் ஓயாத வாடா மல்லி; அவர் வீடியோ ஜாக்கி (வீ.ஜே.,) சங்கீதா.
தினமலர் நாளிதழ் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...

* படித்தது, வளர்ந்தது?
சொந்த ஊர், படித்தது, வளர்ந்தது எல்லாமே மதுரை தான். பி.எஸ்.சி., (ஐ.டி.,) முடித்துள்ளேன்.

* வீ.ஜே., ஆனது?
படிப்பு முடிந்ததும் சென்னையில் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்தேன். நண்பர்கள் மூலம் வீடியோ ஜாக்கி வாய்ப்பு கிட்டியது. பிறகு வேலையை விட்டுட்டு முழுநேர வீ.ஜே., ஆக களமிறங்கிட்டேன்.

* பணியில் எப்படி?
இந்த பணியில் பயம் மட்டும் இருக்கக் கூடாது. வாய்ப் பேச்சில் துாள் கிளப்ப வேண்டும். ரொம்ப அழகாக இருக்கக் கூட தேவையில்லை.

* சினிமா வாய்ப்பு?
சில படங்களில் நடித்து உள்ளேன். 'நீயும் நானும்', 'டிக்.. டிக்.. டிக்..' உட்பட சில படங்களில் நடித்துள்ளேன். விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன. ஓரிரு படங்களின் கதை கேட்டுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பு தொடரும்.

* ஜெயம் ரவியுடன் நடித்தது?
டிக்.. டிக்.. டிக்.. படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நல்லவர்; திறமைசாலியும் கூட. பொண்ணுங்களுக்கு அவரை பிடிக்கும்.

* யாருடன் நடிக்க ஆசை?
கமல்ஹாசன், அஜித்துடன் நடிக்க ஆசை. நடிகைகளில் அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய்.

* நீண்ட நாள் ஆசை?
நீண்ட நாள் ஆசை கைகூடி விட்டது. ஓட்டல் துவங்க ஆசை. தற்போது சென்னையில் 'ரீங்காரம்' என்ற ஓட்டல் நடத்தி வருகிறேன்.

* ஸ்பெஷல் அயிட்டம்?
ஸ்பெஷல் தோசையை கூறலாம். வந்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டு நினைவே வராது. அவ்வளவு 'வெரைட்டி'கள் தோசையில் உள்ளன.

* பொழுது போக்கு?
ஓட்டலுக்கு சென்று விடுவேன். புதிதாக சமைத்து பார்ப்பேன். நன்றாக இருந்தால் ஓட்டல்
'ரெசிப்பில்' சேர்த்திடுவோம்.

* மறக்க முடியாதது?
சொந்த ஊர் மதுரையை. எந்த நாட்டுக்கு சென்றாலும் மதுரை மாதிரி வராது. மதுரை மண்ணுல பொறக்க கொடுத்து வச்சிருக்கணும். மதுரையின்னாலே 'மாஸ்'தானே.
இவரை வாழ்த்த: mailmesangeetha23gmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement