Advertisement

பளபளப்பு ரகசியம் : மனந்திறக்கும் மவுனிகா

கண்களில் தெறிக்கும் மின்னல்... ஐம்பொன்னில் செதுக்கிய தேகம்.. வெள்ளாவி வச்சு வெளுத்து.. வெயிலுக்கு காட்டாம வளர்ந்து.. தமிழக இளசுகளின் இதயத்தை கொள்ளையடிக்க சினிமாத்துறைக்குள் புகுந்துள்ள நடிகை மவுனிகா தேவி, தினமலர் வாசகர்களுக்காக
மனம் திறந்த நிமிடங்கள், உங்களுக்காக....

* பிறந்தது.. வளர்ந்தது... படித்தது...
சென்னை சொந்த ஊர். வளர்ந்தது, படித்தது எல்லாம் ஆந்திர மாநிலம் ஏலூர். எம்.காம்., முடித்துள்ளேன்.

* மாடலிங் துறையில் ஆர்வம்...
'டிவி'யில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் போது விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பே என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆவின் ஐஸ்கிரீம்
விளம்பரம் தான் எனக்கு முகவரி தந்தது.

* சினிமாவில் வந்தது..
கவுதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மகா தேவகி' படத்தில் மெயின் ரோலில் நடித்து வருகிறேன். பெயரிடப்படாத இரு படங்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.

* பொழுதுபோக்கு..
எனக்கு பிடித்த பாடல்களை முணு முணுப்பேன். அடிப்படையில் கிளாசிகல் டான்சர். இசையோடு நடனமாடுவதும் ரொம்ப பிடிக்கும்.

* கேமரா முன் முதல் அனுபவம்...
பயம் சுத்தமா இல்லீங்க. ஏற்கனவே செய்தி வாசிப்பாளரா இருந்ததால் ஒரே 'டேக்ல' ஓகே வாங்கிடுவேன்.

* பிடித்த இயக்குனர்...
ராஜமவுலி. அவரது படங்களில் நடிக்கும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்.

* எந்த கேரக்டர் உங்களுக்கு பிடிக்கும்...
படையப்பா நீலாம்பரி கேரக்டர். ரம்யா கிருஷ்ணன் தவிர அதனை யாரும் பண்ண முடியாது. அந்த மாதிரி கேரக்டர் அமைந்தால் நடிப்பில் வெளுத்து வாங்குவேன்.

* யாருடன் நடிக்க ஆசை..
கார்த்தி, விஜய்சேதுபதி. இருவரும் என்னை கவர்ந்த நாயகர்கள்.

* அழகின் ரகசியம்..
தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். மாலை நேரத்தில் 8 பாதாம் பருப்பு உண்பதால் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கிறது. இதை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிக்கிறேன்.

* நீண்ட நாள் ஆசை...
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கணும். இதுவே என் லட்சியம்.
இவரை வாழ்த்த deepa25sarathygmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement