Advertisement

என் முதல் காதலி - சாய்சக்தியின் ஹீரோ கனவு

பேசுவது ஒரு கலை என்றாலும் மேடை ஏறி மூச்சுவிடாமல் பேசுவது திறமையான விஷயமாக கருதப்படுகிறது. இதனை வளர்த்துக் கொண்ட பலரும் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர். அந்த வரிசையில் பேச்சுத்திறமையால் 'டிவி' தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சில சீரியல்களில் நடித்ததைத் தொடர்ந்து சினிமாவிலும் முத்திரை பதித்து வருகிறார் சாய்சக்தி, 23.
'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அவர் கூறியதாவது:
பிறந்து வளர்ந்தது சென்னை. சின்னத்திரையில் 4 ஆண்டாக தொகுப்பாளராக பணிபுரிந்தேன். இதன் மூலம் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு நிகழ்ச்சிக்காக சென்றேன். அப்போது நடிகர், நடிகைகளிடம் பழகும் வாய்ப்பு கிட்டியதால் அதை பயன்படுத்தி சினிமாவுக்குள் நுழைந்தேன்.
நான் நடித்த முதல்படம் 'கோலாகலம்'. இதில் ஹீரோயின் சரண்யா மோகனுக்கு அண்ணன் வேடத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 'வசந்தம் வந்தாச்சு', 'மாட்டுத் தாவணி' உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். சினிமா தான் என் உயிர் மூச்சு. அது தான் எனது முதல் காதலி. இதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். தற்போது 'மாடலிங்' பணியையும் கூடுதலாக செய்து வருகிறேன்.
என்றாவது ஒரு நாள் சினிமாவில் 'ஹீரோ'வாக வலம் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதைமட்டும் ஒரு போதும் கைவிட்டதில்லை, என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement