Advertisement

மனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா

காணும் கண்பார்வை செவ்விளநீர் சுகம்; குளிரும் பேச்சிலோ ஜிகர்தண்டாவும் உருகும்;

வண்ண மலர்ச்செண்டாக மலரும் முகம்; தென்றல் காற்றோடு இவள் வாசனை உலவும்;
நடையை நடனத்தை பிரித்தறிய முடியா நாகரிக நங்கையிவள், குயிலின் தோட்டத்தில் உலவும் மயிலாய், காதம்பரியில் அறிமுகமாகிறார் அகிலா. தினமலர் வாசகருக்காக தேன்தமிழில் பேசியது

* அறிமுகம்?
பிறந்தது கோயம்புத்துார். வளர்ந்தது, படிச்சது அமெரிக்கா. இப்போ சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறேன்.

* அமெரிக்காவில்...
ஆமா. அமெரிக்காவில் படிக்கும் போதே, 'மாடலிங்' பண்ணிட்டு இருந்தேன். சென்னைக்கு படிக்க வந்தப்போ நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

* முதன் முதல்?
முதல் படமே எனக்கு பேய் படம். படத்தோட பேரு 'காதம்பரி'.

* 'நீலாம்பரி'யோ?
அட போங்க சார். 'படையப்பா'ல எப்படி நீலாம்பரியோ. அதுமாதிரி 'காதம்பரி'ல நான் தான். படத்துல எனக்கு பேய் பிடிச்சுடும். எனக்கும் 'பேய்'னா ரொம்ப பிடிக்கும். படத்துக்காக முழுசா பேயா மாறிட்டேன். நிச்சயமா நிஜத்துலல்லாம் அப்படி இல்லப்பா!

* பயம்?
கொஞ்சம் இருக்கு. ரசிகர்கள் மனசுல நாம எப்படிடா இடம் பிடிக்குறது. பிடிச்சப்புறம் எப்படி தக்க வைக்கிறதுனு பயம் இருக்குது.

* ஆசை?
கும்கி, மைனா படங்கள்ல வர்ற கிராமத்து பொண்ணு வேடம்தான். இன்னும் அந்த மாதிரி கதைகள் எனக்கு கிடைக்கல.

* பாடல்?
நான் நல்ல 'சிங்கர்'ங்க... அமெரிக்காவுல இருக்கும் போது நிறைய தமிழ்ப் படப் பாடல்களை, என் வாய்ஸ்ல பாடியிருக்கேன். இப்போ, நான் நடிக்கிற படத்துலயும் ஒரு பாட்டு சான்ஸ் கிடைச்சு பாடியிருக்கேன்.

* இசை?
இசையை யாருக்கு தான் பிடிக்காது. பியானோ, வயலின், வாசிக்க தெரியும். இசையில், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஹிப்ஹாப் ஆதியை பிடிக்கும்.

* பிடித்தமானவை?
தமிழ்நாடு பிடிக்கும். கூடவே பொங்கல், சாம்பார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தமிழ் பாட்டுன்னா எனக்கு உயிரு. நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய், தனுஷ்.

*அகிலா, அழகுக்காக?
பெருசா ஒன்னும் இல்லீங்க. நம்மளும் நம்ம மனசும் சந்தோஷமா இருந்தா மத்தவங்களுக்கு நாம அழகாத்தான் தெரிவோம். இதுதான் காரணம் போதுமா, சிம்பிள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement