Advertisement

‛‛முடிவெடுத்தால் நான் முதல்வர்'': கட்சிகளுக்கு கமல் கவிதை பதில்

சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர்.

விரைவில் அறிவிப்புஇது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.

கவிதை மூலம் பதிலடிஇடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்....
இவ்வாறு கவிதை மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (200)

 • ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ

  மற்றவை எப்படியோ... இவர் கவிதை என்ற பெயரில் பிதற்றுவது சகிக்கவில்லை. கிரேசி மோகன் போன்ற ஜால்றாக்கள் இவரை ரொம்ப ஏற்றி விட்டுவிட்டார்கள். இவர் மனதில் தன்னை பாரதியார் அளவுக்கு நினைத்துக் கொண்டு நம்மைக் கொல்கிறார்.

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  இந்த வயோதிக வாலிபருக்கு ஒரு கேள்வி ...எல்லா துறையும் ஊழல் இல்லாம சிறப்பா செயல்படுற ஒரு இந்தியா ஸ்டேட்ட சொல்லு...

 • Shanu - Mumbai,இந்தியா

  மக்கள் தான் முடிவெடுப்பார்கள்.

 • Srini Vasan - nairobi,கென்யா

  கமல் BIGBOSS ஐ எல்லோரும் ஓட்டுவதால்,விமர்சிப்பதால் தாங்கமுடியாமல் இப்படி அரசியல் கமெண்ட்ஸ் செய்து மக்களை திசை திருப்புகிறார். இதில் ஒன்று இல்லை. கமலால் BIGBOSS ஐ இப்போதே விட முடியுமா? முடியாது. அழுத்தத்தின் காரணமாக செய்யும் வேலை இது.

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  கமலுக்கு கவிதையெழுத வரவில்லையென்றால் அதை விட்டுவிடுவது நலம், இல்லையேல் உளறல்நாயகன் என்ற பெயர்தான் மிஞ்சும். கொஞ்சம் வசனநடையில் பேசும்போதே தெளிவில்லை, இதில் கவிதை நடை தேவைதானா?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  " அனைவருக்கும் இந்த பெரிய தலையின் [BIG BOSS] வணக்கம்....நான் முதல்வர் ஆவேன் என்று சொல்லிவிட்டதால், ரஜினி ஆக மாட்டார் என்றோ ஸ்டாலின் ஆகமாட்டார் என்றோ பொருள்கொண்டால், அது நமது தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்று எனக்கு தென்படவில்லை என்ற உண்மையை சொன்னால், சினிமாக்காரன் தானே இவன் , வியாபார உத்தியில் இப்படித்தான் பேசுவான் என்று சிலர் பேசக்கூடும் என்பதனை நான் முன்பே தெரிந்திருந்த காரணத்தால் தான், கலைஞர் அய்யா திடகார்த்தமாகவும் , அம்மையார் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்த காலத்திலும் நான் எதுவும் பேசியதில்லை, என்ற பொய்யான வாதத்தை இங்கே சிலர் பரப்பிவிட, முயன்றாலும் அது தப்பான பொருளாகவே தமிழர்களின் கண்களை உறுத்தும் என்ற உண்மையை இங்கு சொல்ல நான் கடமைபட்டுளேன் .." நான் முதல்வர் ஆவேன் என்று சொல்லவில்லை ...ஆனால் நன்றாயிருக்கும் என்று தான் சொல்லவந்தேன்"...என்பதனை எனது ரசிகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் .. இடையிடையே ஓவியா நன்றாக ஆடுகிறார்... ஜூலியானா நன்றாக அழுகிறார் என்று போட்டு கொள்ளுங்கள்... மீண்டும் ஒருமுறை எனது ரசிகனுக்கு விருந்து படைக்க , எனது படைப்புக்களை காணிக்கையாக விரும்புகிறேன்... எனது படைப்புக்களை வெளியிட முழு உரிமை எனக்கு உள்ளது... இதனை தடை செய்ய நினைப்பவர்களுக்கு பயந்து சிலர் சொல்வதை போல இமய மலைக்கெல்லாம் ஓடிப்போய்விடமாட்டேன்.. ..நாட்டை விட்டு வெளியேறி வேறு கண்டத்துக்கு போய்விடுவேன் என்பதனை வீரத்துடன் சொல்லிக்கொள்ள கடமை பட்டுளேன் .. நன்றி..."

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ரஜினி, கமல் இவர்களுக்கு பின்னால் நடிக்க வந்த விஜயகாந்த் அரசியலுக்கு வந்து ஒதுங்கிவிட்டார், ரஜினி கமல் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை ஆனால் எல்லோருக்கும் முதல்வர் கனவு வந்து விட்டது, நல்லது நடந்தால் சரி , நல்லதே நடக்கும் என நம்புவோம்.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  பிஜேபி , அதிமுக கள்ளக்கூட்டணிக்கு இவர் வேட்டு வைத்து விடுவாரோ என்ற பயம் தான்.. அதனால்தான் பிஜேபி அதிமுக இருவருமே இவரை எதிர்க்கிறார்கள்...ஆனால் பிஜேபி விரட்டி அடிக்கப்படும்..ரஜினியோடு சேர்த்து....

 • anvar - london,யுனைடெட் கிங்டம்

  சொந்த வாழ்க்கையில் எம்ஜியார் கலைஞர் ஜெயா எல்லாம் ரொம்ப யோக்கியமா போங்கடா புள்ளைகுட்டிகளை படிக்க வைங்கடான்னு சொன்ன கமல் வந்தா தப்பு ஒன்னும் இல்லை

 • shankar - chennai,இந்தியா

  சிவாஜிக்கு ஏற்பட்ட கதிதான் இவருக்கும் இவரது நடிப்பை வேண்டுமானால் ரசிக்கலாம் அதற்காக மக்கள் இவருக்கு ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. இவர் நிற்கும் தொகுதியிலேயே இவர் சிவாஜியை போல் தோற்று மண்ணை கவ்வி அப்போதும் ஒரு கவிதை வெளியிடுவார் இவர் கலைஞர் அல்ல கவிதை வெளியிட. ரஜினியால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த அரசியல் பிரவேசம்.

 • arasu -

  congrats thalaiva

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  .... போட்டால் கவித அருவி மாதிரி கொட்டும் போல.....மானே தேனே.ன்னு..

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  மதுரை எஸ்.எல்.நரசிம்மன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். கமலும் ரஜினியும் இணைந்து ஒரு புதிய கட்சியை தொடங்கி முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் ஐபிஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜஸ்டிஸ் சந்துரு போன்ற நல்லவர்களை, திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் தலைமையில் ஒரு ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது.

 • Triumbak - Stuttgart,ஜெர்மனி

  @ Sumathi Bharathi - காமராஜ் பற்றிய கமெண்ட் மிகவும் சரி. ஆனால் அதற்கு பின்னால் வந்தவர்கள் காமராஜை பல மடங்கு மிஞ்சி விட்டனர். எல்லோருக்கும் tematic - ஆக முலாம் பூசி History - ஐ change பண்ணிட்டாங்க - பாட புத்தகங்களில். சிலை வைத்து, கல்வெட்டுகள் வைத்து, புகழ் பாடி புனிதமானவர்களாய் மாற்றி விட்டார்கள். கேட்டால் தமிழன்டா என்பார்கள்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  திறந்து கெடக்குது தமிழகம் TASMAC கில் மயங்கி கெடக்குது, ஊழலில் கரிந்து கெடக்குது வறட்சியில் காய்ந்து கிடக்குது வறுமையில் வெந்து கிடக்குது , நிலமெல்லாம் அந்தரத்தில், நீரெல்லாம் இல்லாமல் போனது, உடமைக்கு தினம் போராட்டம், ஊருக்குள் புகை வருது விவசாயம் கெட்டு ஆலை ஆக்கிரமிக்கிறது ஆறுகள் எல்லாம் நீருக்கு இல்லாமல் மணலுக்கு என்றாகி போனது மலையெல்லாம் அருவிகள் மறந்து உளிக்கு பலியாகிறது அரிதரம் அட்டக்கத்தி தத்துவம் பேசுது வெள்ளை திரையில் சீறுகிறது இப்போது தமிழகம் சூறையாடப்பட்டு பிஜேபி ஆக்கிரமிப்பில் முதுகெலும்பை ஜெயா உடைத்து பிஜேபி வசம் இருக்கும் அடிமைகளை ஒப்படைத்துவிட்டு சசி கொட்டம் தூண்டிவிட்டு தமிழகத்தை ஒரு மாதிரியாக்கி விட்டதால் மார்வாடிகளும் ஆளலாம் ஆரியரும் சூழலாம் இனி இப்படித்தான் கொள்கை இல்லா தமிழன் அடிமையாகி இலவசம் வாங்கி தின்னுவான் அதற்கு ஆள்வான் ஆளவந்தான் வசனம் போதும் தமிழனுக்கு சில கத்தி சண்டை சில சில்மிஷம் போதும் இதுதான் ஆளும் தகுதி கமல் என்ன ஜாக்கிசான் கூட தமிழக முதல்வர் ஆகிடுவார் .

 • Triumbak - Stuttgart,ஜெர்மனி

  ஒரு Leader மற்றவருக்கு முன் உதாரணமா இருக்கணும் என்பது முக்கியமானது. இங்கு பலர் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசவேண்டாம் என்று கருத்து போடுகிறார்கள். ரொம்ப கேவலம். இப்படி நினைப்பதால்தான் யார் வேண்டுமானுலும் முதல்வர் ஆகலாம் என்ற நிலை வந்து விட்டது . கொடுமை

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  கவிதையை படித்தால் , அவரை பற்றி சொல்வதாக தெரியவில்லை .. பொதுவாக தான் எழுதி இருக்கிறார் .. முடிவெடுத்தால் சாமானியனுக்கு தலைவன் ஆகலாம் என்று .. அதில் ஒரு வரியை மட்டும் எடுத்து தலைப்பிட்டு இவ்வளவு கொந்தளிப்பு உருவாக்கி விட்டிர்கள் .. தமிழ் தெரியாத எச்.ராஜா எல்லாம் இது புரியாமல் கதறி கொண்டு இருக்கிறார் ..

 • Dhanaprabhu - Coimbatore,இந்தியா

  நீங்க முடிவெடுத்தால் முதல்வர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பேராசை. மக்கள் முட்டாள்கள் இல்லை

 • Indhiyan - Chennai,இந்தியா

  கமல் சிந்திக்க கூடியவர்தான், தன் கடவுள் மறுப்பு கொள்கையை திணிக்காமல் இருந்தால் நல்லது. " யாம் மன்னரில்லை" என்பதில் "யாம்" என்ற சொல் மன்னர் சொல்லக்கூடியது. யாம் மன்னரில்லை என்பது முரண்பாடான சொற்கள்.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இதுவரைக்கும் தமிழகத்தில் ஆண்ட முதல்வர்கள் எல்லாம் அரசியல் படித்து பட்டம் பெற்று விட்டுத்தான் பதவிக்கு வந்தார்களா? யாரேனும் காட்டமுடியும்மா? கருணாஸ் என அரசியல் பட்டம் பெற்றவரா? இல்லை, இப்போது பதவியில் இருக்கும் எடப்பாடியார் அரசியல் படித்து பட்டம் பெற்றவரா? ஆகவே தமிழ் நாட்டில் தமிழக மக்கள் யாரை ஆதரித்தாலும் முதல்வர் பதவிக்கு வரலாம். தமிழக மக்களின் செல்வாக்கு தான் MLA ஆவதற்கும், முதல்வர் ஆவதற்கும் "முக்கிய தகுதி". ஒட்டுமொத்த தமிழக மக்களின் செல்வாக்கு இல்லாமல் யாரும் தமிழ்நாட்டில் முதல்வர் ஆகமுடியாது.

 • kmish - trichy,இந்தியா

  கடைசி வரைக்கும் கவிதை எழுதி கிட்டே இருக்க வேண்டியது தான் , ஒருத்தர் போர் வந்தா பார்க்கலாம் , இன்னொருத்தர் இப்படி , நீங்க எல்லாம் எதுக்கும் உதவ மாட்டீங்க

 • Eswaran - TRICHY,இந்தியா

  ஆக மொத்தம் தமிழ் நாட்டு தலைவரா திரும்ப திரும்ப கூத்தாடி கூட்டம் தான் வரும் போல இருக்கு.. மக்களோட நடைமுறை குறைகள் தெரிஞ்சு அதை சரிசெய்ய ஒரு IAS அல்லது IPS படிச்சவங்க தேர்தல்ல நின்னா டெபாசிட் கூட வாங்காம நம்ம மக்கள் பார்த்துக்குங்க. இப்போதைக்கு ரஜினி கமல் அரசியலுக்கு வருவார்களா மாட்டங்களானு தான் ஒட்டு மொத்த மக்களும் வேலை வெட்டியா விட்டுட்டு எதிர் பார்த்துண்டு இருக்காங்க. ஜெயலலிதாக்கு செத்தும் நேரம் சரியில்லை.. அதான் அந்தம்மா கட்சி அவங்க ஆளுங்களாலேயே படாத பாடு படுது..

 • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

  ''முடிவெடுத்தால் நான் முதல்வர்'': கட்சிகளுக்கு கமல் கவிதை பதில். ''அவசரத்தில் முடி எடுத்தால் நான் முதல்வர்''என்று படித்து விட்டேன்

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கமல் இந்த தமிழ்நாட்டின் சமூக அவலங்களையும் அரசியல் அவலங்களையும் கைக்கெட்டி பார்த்துக்கொண்டிருக்காமல் தன் சொந்த கருத்துக்களை எல்லா கட்டத்த்திலும் பதிவுசெய்கிற அரசியல் ஞானமுள்ள ஒரு கலைஞர்.... அவருடைய சொந்த வாழ்க்கையை பார்ப்பது மடத்தனத்தின் வெளிப்பாடு.... ஆனால் அவர் அரசியலில் வந்தால் இந்த பண பெருச்சாளிகள் மத்தியில் எடுபடுவாரா என்பது சந்தேகம்...

 • வால்டர் - Chennai,இந்தியா

  கூத்தாடிங்க தொல்லை தங்க முடியலையே. வீர வசனம் பேசினா மட்டும் போதாது. இவரு பரமக்குடில நின்னு டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.

 • Gnani - Casabalanca,மொராக்கோ

  குடித்து கும்மாளமிட்ட முதுகெலும்பில்லாத கூவத்தூர் சென்ற புழுக்களே நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லும் கமலுக்கு எதிர் சவாலிட ஒருவர் கூடவா உங்களிடம் இல்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எடப்பாடி லாம் முதல்வராகிற போது, கருணாஸ் லாம் எம் எல் ஏ ஆகிற போது , கமல் முதல்வர் ஆனால் தப்பே இல்ல. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்கப் போவது அவரை மாதிரி வாழ் முடியலியே என்கிற ஆதங்கம் உள்ளவர்கள் தாம்.

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  விஷய ஞானம் உள்ள மிகச்சிறந்த கலைஞன், கமலஹாசன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து குழப்பிக்கொள்ள வேண்டாம். ஒருவேளை அவர் அரசியல் பிரவேசம் செய்தால் பரிசீலிக்கலாம். அதே வேளையில் அவர் தனது கடவுள் மறுப்பு கொள்கையை மக்கள் மீது திணிக்காமல் இருக்க வேண்டும். நடிகன் ரஜினிக்கு, கமலஹாசன் எவ்வளோவோ தேவலாம். விவாதிக்கலாம் வாருங்கள் நண்பர்களே....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  புலியை பாத்து பூனை சூடு போட்டு கொள்ளக்கூடாது...

 • ArunagiriSundharamurthy -

  முதல்வர் கனவு தமிழ் நாட்டில் இயற்கையானது அதுவும் சினிமாவில் உள்ள சில உச்ச நடிகர்களுக்கு கடைசி ஆசை தமிழ்நாடு இந்தியாவின் பாதத்தில் இருப்பதால் யார் குனிந்து பார்க்க போகிறார்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரட்டும் ஆனால் எல்லாரையும்விட அதிகமாக பணம் கொடுத்தால் ஆசை நிறைவேறும்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  முடிவெடுத்தால் நான் முதல்வர்..ஆஹா கவிதை..கவிதை. "முடி எடுத்தால் நான் மொட்டைன்னு" வேணா சொல்லிக்கோ..முதல்வரா யார் வரணும்ன்றது மக்கள்தான் முடிவு எடுக்கவேண்டும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  யாராவது இதற்கு விளக்கம் கொடுங்கள். கொஞ்சம் தான் புரிகிறது. தேவை இல்லாமல் இப்போது கமலை ஏன் வம்பிற்கிழுகிறார்கள்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  முடியெடுத்தால் யாம் கூட முதல்வர் தான்....

 • Srini Vasan - nairobi,கென்யா

  டியர் நண்பர்களே கமலுக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைப்பதால்... இந்த மாதிரி foward message போடுகிறார். இது ஒரு cut paste ரகம். ஸ்மைல் செய்து விட்டுவிடவும். குழம்பிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கமலுக்கே இதற்கான அர்த்தம் தெரிய வாய்ப்பு குறைவு.. எதாவது தமிழ் புக்கில் இருந்து எடுத்த வாக்கியம் இது. just time pass. thats it .

 • Veerasamy Rengarajan - chennai,இந்தியா

  பார்த்து குடியுங்கள். பம்மல் சம்பந்தம் படம் அல்ல.

 • S.L.Narasimman - Madurai,இந்தியா

  திரு. சகாயம் அவர்களே CM ஆக முன் நிறுத்தி ரஜினி, கமலஹாசன் கட்சி தொடங்கலாம்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இவரை ஒரு நடிகராக மட்டுமே இன்று வரை அங்கீகரித்துள்ளோம். இன்று இவர் பேசும் வீர வசனங்கள் எல்லாம் அரசியல் போன்ற சமூக சேவை சார்ந்த வாழ்க்கையில் மிக கடினம். இதனை நாள் இல்லாமல் ஏன் இப்படி மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறார் என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வாதவர்க்கு ஒரு பிடி சோறும் விஷம் என்பது தான் கமலுக்கு பொருந்தும். அவருக்கு நடிப்பு மட்டுமே உகந்தது. ஊழல் பற்றி கருத்து கூறுவதற்கு முன் நம் சொந்த வாழ்க்கையில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே மக்கள் நாம் சொல்லும் கருத்துகளை கேட்பார்கள். அரசியல், சமூக சேவை என்பதெல்லாம் ஒன்றும் பணம் போட்டு பணம் எடுக்கும் சினிமா துறை இல்லை என்பதயும் உணர வேண்டியது அவசியமாகிறது

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  யானை சூடு போட்டதை பார்த்து எறும்பு சூடு போட்டுக்கொண்ட கதையாய் ஆக போகிறது இந்த கமல் மற்றும் ரஜினி கூத்தாடிகளின் கனவு.

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  பி ஜே பி பதறுவது வேடிக்கையாக உள்ளது

 • wellington - thoothukudi,இந்தியா

  சமீபகாலமாக அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திரைத்துறையினர் பலர் பலவிதமாக குரல்கொடுத்துவருகின்றனர் ,அமைதியாய் இருந்த இவர்களை பேசச்சொல்வது யார் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் மர்மம் ,திரைத்துறையில் உள்ள ஒருவரை கொண்டுவந்து பதவியில் உட்கார வைக்க போராடுகிறது அந்த கும்பல் ,அந்த வரிசையில் இப்போது வந்திருப்பது கமல் மொத்தத்தில் தமிழ்நாட்டை இல்லுமினாட்டி குழுவினர் ஆட்டிப்படைக்கின்றனர் ,

 • Kps Prakash - Chennai,இந்தியா

  கமலின் தமிழ் பற்று, நேர்மை மற்றும் வரலாற்று அறிவு இவைகள் அரசியலுக்கு வந்தால் அவருக்கு உதவும் என்று நம்புகிறேன். நான் இவருக்கு வாக்களிப்பேன். சுய வாழ்கை பற்றி ஒப்பிட தேவை இல்லை.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இந்த சப்பை கவிதைக்கு எளிய தமிழில் பொழிப்புரை எழுதுவோருக்கு நாக்பூர் ஸ்பெஷல் ஸ்வீட் பத்து கிலோ பார்சேல்....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்ன கருமண்டா தமிழ்நாட்டுக்கு.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எந்த ஒரு சட்ட திட்டத்துக்கும் பந்த பாசத்துக்கும் கலாச்சரத்துக்கும் மதிப்பு கொடுக்காமல் எப்படி ஒரு பொம்பளையை கழட்டி விட்டுட்டு வேறொன்னு ஏற்பாடு பண்ணி கொள்வது போன்ற பெரும் சாதனைகளை தமிழர்களுக்கு சொல்லி கொடுத்த புரட்சிக்காரன் அரசியலுக்கு வர வேண்டியதுதான்.

 • verdad - Vellore,இந்தியா

  பெரியாரிஸ்ட் என்ற போர்வையில் இவர் செய்யும் பல லீலைகள் பெரியாரிஸ்டுகளுக்கு சங்கடத்தையும் அவமானத்தையும் தருகிறது. என் பார்வையில் ஒரு பசு தோல் பெரிய ஓநாய்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  இவனிடம் அதிகாரம் கிடைத்தால் ஊரில் ஒரு பொண்ணும் நடமாட முடியாது...

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...கவிதை சூப்பர் தமிழா... தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்களாம், அரசியல்வாதிகளின் ஊழலுக்கெதிராக குரல் கொடுக்க மாட்டார்களாம், தமிழ் மக்கள் விரோத அரசியல் போக்குக்குக்கெதிராக குரல்கொடுக்க மாட்டார்களாம், தமிழ் விவசாயிகள் படும் துயரங்களுக்கெதிராக குரல் கொடுக்க மாட்டார்களாம், தமிழ் நாட்டுக்கு காவேரி நீர் தராதற்குகெதிராக குரல் கொடுக்க மாட்டார்களாம்... ஆனால் தமிழக மக்களின் முதல்வராக மட்டும் ஆகிவிடவேண்டும் என்று நினைக்கும் நடிகர்களின் மத்தியில், தன் தொழிலுக்கு பங்கம் வரும் என்று தெரிந்தும், தவறு செய்யும் ஆட்சியாளர்களுக்கெதிராக தைரியமாக குரல் உயர்த்தும் தமிழனுக்கு தலை வணங்குகிறோம்... நன்று...

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  போடா ...... என்று சொல்ல கமல் ஒரு கவிதையை துணைக்கு கொண்டார் அவ்வளவுதான்

 • Barani - Chennai,இந்தியா

  G S T வந்தால் நடிக்க மாட்டேன் என்று வசனம் பேசினார். அது வந்தாகிவிட்டது. இப்பொழுது நடிக்கப் போனால் தன்மானப் பிரச்சினை. அதனால், சின்ன திரை பக்கம் வந்தாகி விட்டது. அப்படியே அரசியலிலும் வந்து விட்டால் பிழைப்பு பிரச்சனை இல்லை. சமூகத்தின் மேல் அக்கரை என்றால், என்றோ வந்திருக்க வேண்டும். இன்றல்ல. இவ்வளவு நாள் இல்லாத அக்கரை இன்று எங்கிருந்து வந்தது? எல்லாம் பகல் வேஷம். ஒரு தாரம் என்பது தமிழ் கலாச்சாரம். அதை அவரால் பின்பற்ற முடியவில்லை. இதில் தமிழருக்காக குரல் என்று எதற்கு சொல்ல வேண்டும். தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்வதால் ஒன்றும் அவர் அரசியலுக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகி விடமாட்டார். கமல் எங்கும் தன் தலைமைப் பண்பை உணர்த்தியதில்லை. அவர் நடிப்பின் சிகரமாக இருக்கலாம். அதனால் அவர் தொட்டது எல்லாம் சிறப்பு என்று அர்த்தமில்லை.

 • velan - california,யூ.எஸ்.ஏ

  கமலஹாசன் அவர்கள் சமூகத்திற்காக நிழலிலும் நிஜத்திலும் குரல் கொடுத்துள்ளார் . வரவேற்போம் . கண்டிப்பாக மக்கள் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் . அதை சிரமேற்று ஆத்மாத்தமாக சேவை செய்தால் போதும் . காமராஜரை மிஞ்சினால் வரலாறு பேசும் . காமராஜரை போன்ற தங்கத்தை படித்த போதுதான் தெரிந்தது . அரசியலில் வருவதற்கு முன் தயவு செய்து காமராஜரை படிக்கவும் . பெரியாருக்கு மதிப்பளித்து சமூக சமத்துவ நல்லிணக்கத்திற்கு பெண் விடுதலைக்கும் அவரை போன்று போராட வேண்டும் திராவிடம் மென்மேலும் செழிக்க கமல் அரசியலுக்கு வரவேண்டும் .

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  மேடைகளில் தானும் ரஜினியும் நண்பர்கள் என சொன்னாலும் இந்த பகுத்தறிவாளனுக்கு ரஜினியின் ஒவ்வொரு அசைவும் வயித்தெரிச்சல் .. புதியதாய் இப்போது.. இப்படி

 • A shanmugam - VELLORE,இந்தியா

  லஞ்சத்தை பத்தி பேசினால் ஏன் தமிழக மந்திரிகளுக்கு கோபம் பொத்திக் கொண்டு வருகிறது? எந்த அமைச்சராவது அவர் வணங்கும் தெய்வத்தின் முன் சத்யம் செய்யமுடியுமா "நான் சேர்த்த சொத்துக்கெல்லாம் நேர்மையான முறையில் கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி, அதிகார துஷ்பிரயோகம் இல்லாமால், கொள்ளையடிக்காமல்,சம்பாத்தித்த ஆடம்பர பங்களாக்கள், பெரிய பெரிய மால்கள், மற்றும் நிலம் நீர், வாகனங்கள் என சொல்லமுடியுமா? ஒரு பொறியியல் என்ஜினீயர் IIT யில் தங்க மெடல் வாங்கி உத்யோகத்தில் பணிபுரிந்து சம்பாதித்தாலே ஒரு வீடு, ஒரு காரு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் கல்யாணம் ஆகியவைதான் செய்யமுடியும். மேலும், சமசீரான வாழ்க்கைதான் வாழமுடியும். தவிர, ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள், பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் கல்வி படிப்பு, மிதமிஞ்சிய சுகபோக வாழ்க்கை எப்படி வரும்? கொள்ளையடிக்காம, லஞ்ச லாவணியம் பெறாமல் வருமா? வரவே வராது? நான் அடித்து சத்யம் சொல்றேன். ஆகவே, இந்த ஜனநாயக நாட்டில் நடக்கும் அட்டூழியத்திற்கும், அநியாயத்திற்கு நடக்கும் ஊழல்களை பற்றி தமிழ்க மக்கள் அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு. இதனை தட்டி கேட்க எந்த அமைச்சருக்கும் நாதி கிடையாது. அப்படி கேட்க நினைத்தால் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை மாற்றிவிட்டு, ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகள் ஆட்சி நடக்கும் போது மக்கள் அடிமையாக இருப்பார்கள். ஆகவே, கமல் தமிழக துறையில் லஞ்சம் வியாபித்து உள்ளது என கூறியது எந்த விதத்திலும் தவறு இல்லை. மேலும், தமிழக மக்களை பொது வாக்கெடுப்பு மூலம் கேட்கலாம். யாரேனும் லஞ்சம் தராமல், பத்திர பதிவு, மின் இணைப்பு, முனிசிபல் வாட்டர் இணைப்பு, பள்ளி, கல்லூரி சீட் பெற, வண்டி வாகன லைசென்ஸ் உரிமம், கடை உரிமம், வர்த்தக வாணிப தளங்கள் உரிமம், (இப்படி பட்டியல் இட்டு கொன்டே போகலாம்) பெற்று இருக்கிறர்களா என மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தைரியமாக சொல்லமுடியும்மா? நான் ரெடி, நீங்க ரெடியா?

 • v rajagopal - Chennai,இந்தியா

  எவ்வளவு உயரத்திலிருந்து எங்கே குதிப்பார்.

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  இவரை தமிழ் கலாச்சார மந்திரியாக நியமிக்கலாம் - மேலும் இவருடைய கலை லீலைகளை பொன்னேடுகளில் பொரித்து இவரையும் இவர் பொன்னான வாரிசுகளையும் திறந்து வைக்க சொல்லலாம் - தமிழும் கலாச்சாரமும் பல நூற்றாண்டுகள் முன்னோக்கி செல்லும் -

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  ஏற்கனவே சினிமாக்காரங்களால் தமிழ் நாடு சீரழிந்து பாதாளத்தில் உள்ளது. இனி இவனும் தன் பங்குக்கு ஆவண செய்ய துடிக்கிறான். ஏழு பொண்டாட்டி காரங்களெல்லாம் நம்மை ஆள வேண்டும் என்பது தலையெழுத்தானால் மாற்றவே முடியாது

 • Tamil - Trichy,இந்தியா

  கமல் நல்ல தலைவனாக இருக்க முடியும். மக்களுக்காக உண்மையான குரல் இது. சகாயம் போன்றொர் உங்களுடன் கை கோர்த்தால் தமிநாடு வூழலிலிருது விடுபடும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  Politics is a field of action,not a poetry recitation camp

 • Raj - Chennai ,இந்தியா

  சீமான் சைகோ இரண்டுமே கார்பரேட்களை மிரட்டி காசு பார்க்கும் தலைவர்கள்..

 • vasanthan - Moscow,ரஷ்யா

  இவரை டம்ளர் சாமானோடு ஒப்பிடாதீர்கள். டம்ளர் சாமான் ஒரு இலங்கை தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வென் என்று நரம்பு புடைக்க வசனம் பேசுபவன் . எட்டப்ப கருணா, சாவுமணி யின் கைப்பிள்ளை . இந்த விதத்தில் கமல் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்

 • MumbaiNana -

  மூன்று பொண்டாட்டி , பெரியாரிஸம் தகுதி இருக்கிறது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யாராக இருந்தாலும் பரவா இல்லை...லஞ்ச லாவண்ய மில்லா அப்பழுக்கற்ற அரசியல் வாதிகள் தேவை... கிடைப்பார்களா... மழையை நோக்கி காத்திருப்பது போல நல்ல இதயங்களை வரவேற்க காத்து கிடக்கிறோம் வெம்பிய மனிதர்கள்.. திராவிடம் என்று சொல்லிக்கொண்டு எல்லோரையும் தெருவில் விட்டவர்கள் வேண்டாம்..

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  கமல் அரசியலில் நேரடியாக இறங்குவார் அல்லது ஸ்டாலினுக்கு துணை நிற்பார் .....இது தான் விரைவில் நடக்க போகிறது....தமிழகத்தில் புறக்கடை வழியாக காலூன்றலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பிஜேபி யின் கனவுகள் தவிடு பொடியாக போகின்றன....

 • அப்பாவி -

  ஒரு லெட்டர்பேட் கட்சியாவது எல்லாரும் வெச்சிக்கணும்...இல்லேன்னா தூக்கி உள்ளெ வெச்சிருவாங்க.

 • MumbaiNana -

  மூணு பொண்டாட்டி வச்சிருந்தா தான் தகுதி உண்டு

 • Sithu Muruganandam - chennai,இந்தியா

  அரசியல் சுவடே அறியாத அரிதாரமே, அரசியலில் அரிச்சுவடி கூட தெரியவில்லையென்றால் தரித்திரன் நிலைதான். உன் மேனாமினுக்கி வேலையெல்லாம் இங்கு எடுபடாது என்பது தெரியுமா? கேமராவுக்கு முன்னால் தான் நீ பிக் பாஸ். மக்கள் முன்னால் நீ செல்லாகாசு . வருமானத்தை ஒழுங்காகக் காண்பிக்கும் நடிகன் எவன்? ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான்.

 • Hari - Chennai ,இந்தியா

  இருக்கிற கோமாளி கொள்ளையர்களுக்கு இன்னும் ஒரு கோமாளி வரவு . இவர் வந்தால் நாடே காயத்ரி ரகுராம்கள் தான் கோலோச்சுவார்கள் . இனிமேல் பூணுல் பக்தர்கள் கமலை தூக்கி வைத்து ஆடுவார்கள்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஐயோ பாவம்.. மக்கள் கவிதைக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. வசனம் பேசினாலே புரியாது.. இப்போ கவிதையால் ...

 • nizamudin - trichy,இந்தியா

  ஏன்டா வாடா போடா னு வம்புக்கு இழுக்கு ரீங்க ? கமல் உலகம் அறிந்தவர் / கமலை உலகம் அறியும் /உன்னையும் என்னையும் யாரடா அறிவார் ?தமிழ் நாட்டில் உன்னையும் என்னையும் அறியாதவர் கோடான கோடி நண்பா ? கமல் இந்தியாவின் பொக்கிஷம் /அவர் இறந்த பிறகும் அவர் புகழ் உலகில் நிலைத்து இருக்கும் /நான் கவிஞனும் இல்லை நல்ல ???????????

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  பாவம் தமிழ் நாடு

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "வெட்டியதால் (நான் / யாம்) விழவில்லை....., வெட்டாதிருந்தால் விழுந்திருப்பேன் / போம்....." - இது எப்டி இருக்கு....?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  @ Appu: ச்சீமான், சிவாஜி ராவ் இவனுவெல்லாம் COMEDY பீஸுங்க.... இவனுவளோட கமல compare பண்ணவே ப்டாது...

 • Global Citizen - Globe,இந்தியா

  இங்கே கமலின் கவிதை நடை/ கருத்து புரியவில்லையெனப் புலம்பும் மக்களே, தமிழைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகளைத் தமிழில் கூடுமானவரை உரையாடச் சொல்லி கட்டாயப்படுத்துங்கள். அவர்களாவது எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாதென சொல்லாமலிருக்கட்டும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  (BJP யோட சகவாசம் வெச்சுக்காதவர) என்னோட வோட்டு "பரமக்குடி ப்ராமண"னுக்குத்தான்.....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கமலுக்கு சந்தை மதிப்பு குறைந்துவிட்டது... அதனால் தான் அரசியல் மற்றும் டிவி யில் கூட நடிக்க ஆரம்பித்து விட்டார்...

 • Ramesh -

  Nee kalakku sithappu

 • N. Sridhar @ Ashok Naarayanan - Kanchipuram

  ஆசை இல்லை, பதவி மோகம், இல்லை சீர்கெட்ட இன்றைய அரசியல் சூழலில் சீர்தூக்க ஒரு தமிழனாக புறப்படு, நாங்கள் உன் உடன் இருக்கிறோம் ஒரு உண்மை தமிழனாக, அசோக் நாராயணன், காஞ்சிபுரம்.

 • JayaRaj -

  I Am not your fan. But I will support to change the world, with lots of effective ideas living in UK as a tamilian

 • அப்பாவி -

  தமிழனுக்கு அழிவு தமிழால் தான்.

 • Senthil - Bangalore,இந்தியா

  ஜெயா இருந்த போதும் இவர் வாயை திறந்தார். இந்தியா வை விட்டே வெளியே போய் விடுவேன் என்றார். இது இந்தியா அளவில் பேச பட்டது. அதன் பிறகு தான் பிரச்சினை கை மீறி போய் விடும் என்ற பயத்தில் இவர் படத்தை வெளியிட அனுமதி கிடைத்தது. நியாயத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம், ஒரு தடவை பேசா விட்டால், அதனால் எப்பொழுதும் பேச கூடாது என்று அர்த்தம் ஆகாது.

 • Ramesh - Sydney,ஆஸ்திரேலியா

  வாங்க சார் . உங்கள் அறிவு தமிழகத்தை உயர்த்தும்.

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  தமிழக அரசியல் விறுவிறுப்பில்லாமல் இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஓரளவு நம்பிக்கை உள்ள கொங்கிரஸோ ஆயுதம் இழந்து சோம்பேறியாக உள்ளது. ரஜனி கடவுளிடம் வரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஊழல் மலிந்துவிட்டது. கமல் மத்திய- மாநில அரசுகளின் குறைகளை சொல்லிக் கொண்டே மக்களை அடிக்கடி கிராமங்களில் சென்று சந்தித்துக் கொண்டிருந்தால் வரும் தேர்தலில் அவருக்கு அமோக ஆதரவு கிடைக்கும். தேர்தலுக்கு 6 மதத்துக்கு முன்னாள் கட்சி ஆரம்பிக்கலாம் வெற்றி வாகை சூடலாம்

 • SaiBaba - Chennai,இந்தியா

  இவருக்கு யாரு ஓட்டுப்போடுவாங்க? மூடமையா மடமையா? என்ன சொல்ல வரார்? இவருடைய சில படங்களை ரசிக்கலாம். பல படங்களை பார்க்கக்கூட முடியாது. இவருக்கு ஏன் அரசியல் ஆசை? சகாயம் இறையன்பு போன்றோர் அரசியலுக்கு வரலாம். அவர்களுக்கு ஆளவும் தெரியும் மக்கள் நலனும் புரியும்.

 • பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா

  சினிமா என்னும் தொழில் தொழில் நடத்திய ஒருவனின் வயது அவன் தலையில் குட்டி "வயதானால் மணிரத்னம் போல செல்ல காசாகி விடுவாய், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியலில் நுழைந்து பகலில் மேடைகளில் இரண்டு கை அசைத்தால் இரவில் கால் அசைக்கலாம்" இதுநாள் வரை செய்ததை தொடரலாம் ....என்று கூறி இருக்கும் போல ........

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  Kamalahasan if going to plunge in politics he should join hands with Makkal Paadhai Sahayam IAS, Thamizharuvi Manian like honest persons. Now the people are fed up with the prominent corrupt Kazhagams.

 • RAJASEKARAN RAJASEKARAN - chennai,இந்தியா

  நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்,அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய நல்லவர்கள் வரணும்

 • sankar - trichy,இந்தியா

  ஹிந்துவில் கேள்வி பத்தி சொல்ல போகிறார் என்று நினைக்கிறேன்

 • ranjit - cleveland,யூ.எஸ்.ஏ

  எதை கொண்டு தடுப்பினும் ....சதி என்றும் நடந்திடும்... சினம் கொண்டு வழி நடத்த எதுவும் இல்லை ... சீலம் கொண்டு வழி நடத்த எது இல்லை .... பிணி பிடித்த உடல் கொண்டு என்ன செய்ய ...இல்லை உடல் பிணி இரண்டும் வேறில்லை ஒன்றுதான் அரசியல் பேச ஓட்டுரிமை போதும் அரசனாக அரசியல் செய்யவேண்டும்... அரசியல் குற்ற மில்லை , அரசு இல்லாமல் இயலாமல் இயங்காமல் இருப்பது தான் குற்றம்... வெற்றிடம் தோன்றி வெகு நாட்கள் ஆனது ...நிரப்ப ஒரு பீனிக்ஸ் பறவை தேவை .... அனுமதி பறப்பதற்கு மட்டுமே , பரக்க இல்லை ...

 • Krishna - Dindigul,இந்தியா

  தமிழ் நாட்டுக்கு இன்னொரு பீடையா... தாங்காதுடா சாமி நாடு.... ஏற்கனவே திக திருட்டுமுக ன்னு போலி நாத்திகவாதிங்க கைல சிக்கி சீரழியுது.... இதுல இந்த கண்ராவியை வேற சகிக்கணுமா.... இவனுங்களுக்கெல்லாம் இந்து ன்னா மட்டும் இளிச்சவாயன்...மத்த மதத்தை பத்தி வாயே தெறக்கமாட்டானுங்க.... இந்த ஜென்மங்களை நம்பி இன்னும் ஒரு கூட்டம் காலை நக்கி பொழச்சுட்டு திரியுதுங்க....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  யெப்பா சாமி நீ கொஞ்சம் எங்கியோ போறேன்னு சொன்னியே, அங்கியே கெளம்பி போ. உன்னோட அறிவுக்கெல்லாம் நாங்க ஒத்து வர மாட்டோம், நீ கெளம்பு கொஞ்சம். உன்னோட அறிவு, உன்னோட புத்திசாலித்தனம் இதுக்கெல்லாம் தமிழ்நாடு ஒத்து வராது, உனக்கு புடிச்ச இடமா எங்கியோ இருக்கு நான் அங்கியே போய்டுவேன்னு மிரட்டுனா இல்ல, அங்கேயே போ, நாங்க ஏதோ எங்க முட்டா புத்திக்கு தகுந்த மாறி வாழ்ந்துக்கிறோம். முடில உன்னால.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  யோவ் யேன்யா இப்புடி பண்றீங்க, இந்தாளு நல்லா நார்மலா இருக்கிறப்போ பேசினாலே ஒரு ம....ம்ம்ம் புரியாது. இதுல இது வேறயா? அப்பறம் ரொம்ப பேசினா நான் ஊட்டை உட்டு போய்டுவேன், நாட்ட விட்டே போய்டுவேன், ஆத்தா வையும் காசு கொடுன்னு சப்பாணி மாறி நய நய ன்னு எதையாச்சும் பேசி உளறி கொட்டுவான். கொஞ்ச நேரம் அமைதியா கெளப்பி விடாம இருங்கய்யா, ப்ளீஸ்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தெர்மோ கோலை போட்டு தண்ணீரை காப்பாற்றுபவர்கள் ஒருபக்கம் இருக்க கவிதை பாடி உங்கள் கண்ணீரை துடைக்கிறேன் என்று இவரு வேற கிளம்பிட்டாரா? இதுல இதோ பஸ் கிளம்பிடுச்சுன்னு சொல்லி சொல்லியே கலெக்ஷன் பாக்குற கண்டக்டர் வேற ரெடியா இருங்கன்னு சொல்லிட்டாரு. ஆக மொத்தத்துல ராகுவும் கேதுவும் தமிழகத்தை ஒரு வழியா பண்ணிடுவாங்க போல இருக்கே..

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மங்குணிகள் மற்றும் அடிமைகள் மத்தியில் நீங்கள் எவ்வளோவோ மேல். உங்கள் நேர்மை தமிழ்நாட்டை கண்டிப்பாக முன்னேற்றும். இளைய தலைமுறை உங்கள் பின்னால் கவலை வேண்டாம்.

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  வாயில் வடை சுடும் மன்னன் உளரு வாயால் கலக்கும் கள்ளன் பச்சோந்திப்போல் பல வண்ணன் மேக்கப்பில் மயக்கும் கண்ணன்

 • Raja Sekar - Manama,பஹ்ரைன்

  இவர் எழுதிய வரிகளை படித்து புரிந்த அமைச்சர்கள் எத்தனை பேர். வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூடிய மாமனிதர்களை விட இவர் எவ்ளவோ மேல். அரசியல் பிரவேசம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்

 • singaivendan - Singapore,சிங்கப்பூர்

  காசு பாதி லூசு பாதி கலந்து செய்த கவிதை நான்...உள்ளே காசு வெளியே லூசு... விளங்க முடியா கவிதை நான்...ன்னு இவரு அந்த காலத்துலயே ஒரு கவிதை படைச்சு இருந்தார் ரொம்ப அருமையான படைப்பு... கழுத, கழுத கெட்டா கூட்டு சொவரு...தான??? வேறென்ன இருக்க முடியும்???

 • Kumar -

  அட்டகாசம் ...அறிவாளியே வா! எங்களை காப்பாற்ற...

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  சென்னை வெள்ளத்தில் மக்கள் மிதக்க நீ நக்கல் செய்தவனாயிற்றே... கமல் நா சும்மாவா.. 2 , 3 hit கொடுத்த லாரன்சு 1 கோடி தறாரு.. 50 வருஷம் சினிமாவில் இருந்து கொண்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வெள்ளத்தில மக்களின் பிணம் மிதந்தபோது, 10 ரூபாய்குட பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் மக்களின் பிணத்தின் மீது ஏறிநின்று நான்கட்டிய வரியெங்கே என்று அரசை எதிர்த்து கேள்விகேட்ட வீர தமிழ்மகன் அல்லவோ நீர்.. திமுக, அதிமுக அழியவேண்டிய கட்சிகள். ஆனால் அதற்க்கு மாற்று நீயல்ல.. இனவெறி பிடித்த ந.. கள் தமிழ்நாட்டிற்கு என்றுமே ஆபத்து தான்.. தன்னலமற்ற மதம், மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட காமராஜர் போன்ற தலைவர் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்

 • Raman - Lemuria,இந்தியா

  எதுகை மோனையாக எழுதினால் போதும் அவரே தலைவர் உயிரி மெய் எழுத்து கூறினாலும் போதும் தலைவராக இலவசமாக என்ன தருவார் என்று கூறிவிட்டால் ஜெயிப்பாரா இல்லையா என்பதை கூறிவிடலாம்

 • vinu - frankfurt,ஜெர்மனி

  சும்மா இருந்த கமலை அதிமுக அடிமைகள் உசுப்பி உட்டுருக்கானுங்க. கமல் அரசியலில் இறங்க எல்லா தகுதியும் இருக்கிறது,

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  திரு.அப்பு அவர்களே கமலோடு சீமானை ஓப்பிடுவதா? சீமான் ஒரு black mailer என்பது உங்களுக்கு தெரியுமா? தன் மனைவியின் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டிருகிறார் என்று தமிழருவி மணியன் சொல்கிறார். தன் அடிவயிற்றில் இருந்து கத்திக்கொண்டிருந்தால் சீமான் ஒரு உணமையான தலைவனாகி விட முடியுமா?

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  எங்க பாஷையிலே பேசு - சும்மா பூச்சாண்டி வேலையெல்லாம் வேணாம் -

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  இந்த மாதிரி புரியாத தமிழில் பேசினால் எங்களுக்கு புரியாது - ஏற்கனவே ரெண்டு ரெண்டாய் தெரிகிறது - போதா குறைக்கு கவிதையாம் கவிதை - எங்கள் உலகத்திற்கு வாருங்கள் - நாங்கள் சண்டியர்கள் - வெட்டு ஒன்னு - துண்டுகள் பல வர்ணம் - நாங்கள் தூங்குவதோ ஏழைகளின் முதுகின் மேல் - கானா கூனா - களத்துக்கு வான்னா பேசிக்குவோம் - நீயா - நானா - மயிலையும் கூட்டின்னு வாண்ணா -

 • KumarYogi -

  Tommarow is ours,,,

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  காந்தியும் பெரியாரும் களம் கண்டார் ...கடமை செய்தார்... அடிமைத்தன மடமை அறுத்தார்... ஆனால் முடி மறுத்தார்.. ஆயினென் என்றும் மக்கள் மனத்து மன்னராய் திகழ்கிறார்...ஆனால் அரியாசனம் அமர்ந்தோர் இன்று அவமானம் கண்டார்.. உள்ளத்தில் உயர்வெண்ணம்... உலகம் உய்யும் வண்ணம் அதை செய்தால் அவர் தெய்வத்துள் வைக்கப் படுவர்...

 • SevukanSaravanan -

  ஸ்டாலின் கமலுக்கு வக்காலாத்து வாங்கு போதே தெரியும்

 • Appu - Madurai,இந்தியா

  மனுஷன்டா நீ...ரஜினி போல வராம சும்மா சவுண்டு விட்டு பம்மாமா தைரியமா நிக்குற உன்ன கண்டிப்பா பாராட்டனும்டா கமலா....சீமான்,,,சகாயம்,,,கமல்,,,போன்ற பொதுமக்கள் மற்றும் நாடு பற்றிய கவலை உள்ளோர் இருப்பது சற்று ஆறுதல்....

 • adalarasan - chennai,இந்தியா

  முன்னமே எழுதியிருந்ததுபோல் எதிர்பார்த்ததுதான்?ஆசை யாரை,பதவி மோகம், விட்டது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement