Advertisement

'சிறை விதிகளின்படியே சஞ்சய் தத் விடுதலை'

மும்பை: 'ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், சிறை விதிகளின் படியே, எட்டு மாதங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்' என, மஹாராஷ்டிர மாநில அரசு விளக்கமளித்து உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான ஒரு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, மும்பை கோர்ட், ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது; மேல்முறையீட்டில் இது, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை :



புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 120 நாட்கள், பரோலில் இருந்தார். தண்டனை முடிய, எட்டு மாதங்கள் இருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில், முன்கூட்டியே, 2016, பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து, புனேயைச் சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சஞ்சய் தத்துக்கு, விதிகளை மீறி சலுகை காட்டப்பட்டதாக, அதில் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட், சரமாரி கேள்விகள் கேட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மஹாராஷ்டிர அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூறப்பட்டு உள்ளதாவது: சஞ்சய் தத் சிறையில் இருந்தபோது, ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்; பயிற்சி, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்தார்.

நன்னடத்தை :



இதனால், அவரது நன்னடத்தையை கருத்தில் வைத்து, சிறை விதிகளின் படி, அவர் எட்டு மாதங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    இவருக்கும் சிறையில் தனி சமையலா?

  • K.Sugavanam - Salem,இந்தியா

    இதற்கு விளக்கம் தேவை இல்லை .. ரெண்டு கட்சிகளுக்கும் வேண்டிய ஆள்...அவ்வளவே..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பணம்படைத்த கைதிகளால் காசு இருந்தால் சிறைச்சாலைகள் கூட சொர்க்கமாக மாறிவிடும் என்பது தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது... இந்தியா போகும் போக்கு அறவே நல்லதற்கு இல்லை...

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    என்ன ஒரு டூப்? பாதி நாள்பரோலில் வெளியில்போய் பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஜாலியாக இருந்ததும் சிறைவாசத்தில் கணக்கா? என்னவொரு அநியாயம்? ஃ பட்நாவிஸ் செய்வது சரியில்லை .அடுத்ததாக சசிகலா இதே சலுகையைக்கேட்பார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement