Advertisement

பிரதமர் மோடிக்கு பூங்கொத்து தர வேண்டாம்: உள்துறை அமைச்சகம்

புதுடில்லி: பிரதமர் மோடி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போது பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்க வேண்டாம் எனவும், அதற்கு பதில் காதியால் ஆன கைக்குட்டைகள், புத்தகங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ‛மான் கி பாத்' நிகழ்ச்சியில் பூங்கொத்துகளை தவிர்த்து கைக்குட்டைகளையும், புத்தகங்களையும் வழங்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நேற்று(ஜூலை 17) பார்லி., வளாகம் வந்த பிரதமர் மோடிக்கு ரோஜா பூக்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பூங்கொத்துகளை தவிர்க்குமாறு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  மோடியை பற்றி பேசுவது நமக்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம், கலைஞர் , அறிஞர், இளவரசர், இரும்பு மனுஷி, அய்யா டாக்டர் என்று மட்டுமே நமது சம்பந்தம் சுற்றிவருகிறது. அது போதும் நமக்கு. அவருக்கு பூ கொடுத்தால் என்ன கோட்டு கொடுத்தால் என்ன , நாம்தான் ஏற்கனவே அல்வா கொடுத்துவிட்டோமே.

 • Stalin - Kovilpatti,இந்தியா

  நாடு இருக்கும் நிலையில் இது ரெம்ப முக்கியம்

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   நீ இருக்கிற நிலைக்கு இங்கு வந்து கருத்து சொல்லாமல் இருப்பதே நல்லது.

 • baski - Chennai,இந்தியா

  CLEAN INDIA, MAKE IN INDIA & DIGITAL INDIA இவைகளால் இது வரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நன்மைகளை யாராச்சும் சொல்லுங்களேன்.......

  • N.K - bochum,ஜெர்மனி

   அதற்கு தமிழர்களின் மனநிலை தான் காரணம்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   நீயே தெருவில் குப்பையை வீசிவிட்டு பிறகு தூய்மை இந்தியாவில் என்ன பலன் என்று கேட்டால் என்ன சொல்வது.

  • baski - Chennai,இந்தியா

   நா வீசுனத நீ பாத்தியா.... கேள்விக்கு மட்டும் பதில்...

 • முரட்டு காளை - Madurai,இந்தியா

  இது என்ன மெண்டாலிட்டி ? மோடி அவர்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பது ?

  • ARUN.POINT.BLANK - ,

   oru silar appadithaan vidunga

 • AzhagiannanRk -

  எங்களுடைய தளபதியின் வழியை பின்பற்றும் பிரதமருக்கு வாழ்த்துகளுங்க! RK. அழகியண்ணன். கோவை

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai

   வருங்கால ஜனாதிபதி ஸ்டாலின் வாழ்க ......... அய்யால எப்படிப்பா இப்படி பீல் பண்ணி கூவுறீங்க. குடுத்துக்கு மேல கூவுறாண்டா கொய்யால.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  தனி பூவாக கொடுத்தால் பிரச்சனை இல்லை, பூக்களை வட்டமாக கட்டிக்கொடுத்தால் யாருக்கு பயம் வராது.

 • அப்பாவி -

  அவருக்கு ஒண்ணும் தரவேணாம்...எல்லா பொருள்களுக்குமான் GST மட்டும் கட்டிருங்க...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏன் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள கோட்டுகள், ஆடைகள் வழங்கலாமே...,

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   ஒரு கோடி ரூபாய் விலையுள்ள கோட்டுகள், ஆடைகள் வழங்குவதாகவே வைத்துக் கொள்வோமே, கடந்த காலத்தில் என்ன நடந்தது. சென்ற வருடம் 10லட்ச ரூபாய்க்கு (உண்மையான மதிப்பு அல்ல, பலர் மேற்கோள் காட்டிய மதிப்பு, வாதத்திற்கு உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) மோடிக்கு ஆடை வழங்கப்பட்டது. அது பிற்காலத்தில் 4.31கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அந்த தொகை கங்கை சுத்திகரிக்க நிதியாக வழங்கப்பட்டது. வர்த்தக கண்ணோட்டத்தில் நோக்கினால் 43 மடங்கு அதாவது 4300 சதவிகித லாபம். எந்த ஒரு பொருளும் மிகவும் குறிகிய காலத்தில் இத்தகைய லாபம் ஈட்டியதாக எனக்கு தெரியவில்லை, தங்களுக்கு ஏதேனும் புலப்பட்டால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்

  • murugesan s - Pune,இந்தியா

   நீங்கள் சொல்கிற மாதிரி அந்த தொகை கங்கை சுத்திகரிக்க நிதியாக வழங்கப்பட்டது என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த தொகை அதற்காக செலவிடப்பட்டது என்று உறுதியாக சொல்லமுடியுமா. எனக்கு தெரியவில்லை, தங்களுக்கு ஏதேனும் புலப்பட்டால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்..

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   முருகேசன் ஜி, பதில் எழுதியதற்கு நன்றி. பொதுவாக அரசின் எந்த ஒரு திட்டத்தின் வரவு செலவுகளை இணையத்தில் வெளியிடாது, ஆதாலால் கங்கை சுத்திகரிக்க செலவிடப்பட்ட விவரத்தை தாங்கள் அறிய விரும்பினால் RTI மூலம் விண்ணப்பித்து தெரிய முற்படலாம். விபரம் கிடைத்த பின் எனக்கும் ஒரு பிரதியை தவறாமல் அனுப்பவும். நானும் தங்களைப்போல் அறிய ஆவலாக உள்ளேன்

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

   முருகேசு..... ஒன் ரவுசு தாங்கல..

 • VETRI VENDHAN - Vellore,இந்தியா

  மோடி அவர்கள் மட்டுமல்ல அரசியல் அதிரடி முடிவுகள் எடுப்போர், மாபெரும் சீர்திருத்த வாதிகள் இம்மாதிரி வெற்று அலங்கார வரவேற்புகளை தவிர்ப்பது நல்லது. கை குவித்து வணக்கம் செய்வதை விட மலர்க்கொத்து கொடுப்பது சிறப்பானது இல்லை, மேலும் எளிமையானது கூட.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement