Advertisement

தேவாரத்தில் மூவர் 'டெங்கு' காய்ச்சலால்...பாதிப்பு:தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

தேவாரம்;தேவாரத்தில் மூன்றுபேர் 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் தொடர் காய்ச்சலால் அவதிப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.கேரளாவில் 'டெங்கு' காய்ச்சல் தீவிரமாக பரவியுள்ளதால், தேனி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில், கோம்பைக்கு உட்பட்ட உத்தமபாளையத்தில் 'டெங்கு' பாதிப்பிருந்ததை கண்டறிந்தனர். தேவாரம் அமராவதி நகரை சேர்ந்த பார்வதி என்பவருக்கு 'டெங்கு' உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளார்.
இந்நிலையில் தேவாரம் தி.மு.க., செயலாளராக உள்ள பால்பாண்டிக்கு தொடர் காய்ச்சல் இருந்தது. பரிசோதிக்கப்பட்டதில் 'டெங்கு' இருப்பது உறுதியானதால், தேனி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சுண்ணாம்பு காளவாசல் தெருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் 'டெங்கு' உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். ஐயப்பன் கோயில் தெரு, நாடார் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதியில் தொடர் காய்ச்சலுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 'டெங்கு' பாதிப்பிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தடுப்பு நடவடிக்கை
'டெங்கு' பாதித்தவர்கள் குடியிருக்கும் பகுதியிலும், கடந்தாண்டுகளில் பாதிப்பிருந்த தெருக்களிலும் 'ஏடிஸ்' கொசு ஒழிப்புக்கு புகை மருந்து தெளிக்கும் பணியில் பேரூராட்சி இறங்கியுள்ளது. மஸ்துர் பணியாளர்கள் கொசு உற்பத்தியாகாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சுகாதாரத்துறை, பேரூராட்சி இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கிவிடப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement