Advertisement

கண்காணிங்க சார்:திறந்த வெளிகளில் தின்பண்டங்கள் :பாதிக்குது மாணவர்கள் உடல் நலன்

சாத்துார்;விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளின் அருகில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்களின் உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.மாவட்டத்தில் நகரம் ஒன்றியம் என்ற பாகுபாடு இன்றி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் வரை தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் முன்பும், அருகிலும் உள்ள சிற்றுண்டி விற்பனை கடைகளில் மிட்டாய், பழங்கள், பச்சி,வடைகள், மற்றும் சிறுபழங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன . இந்த பொருட்களை முறையாக மூடி வைத்து விற்பனை செய்யப்பட வேண்டும்.ஆனால் இவை சுத்தமில்லாத முடாமல் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகள் பெரும்பாலும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாகவும், தள்ளுவண்டிக்கடைகளாகவும் உள்ளன.
மதியம், மாலை நேரம் இடைவெளி நேரம் மற்றும் மதியம் சாப்பாட்டு நேரங்களில் மட்டுமே இத்தகை கடைகளுக்கு மாணவர்கள் அதிகளவில் சென்று தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.புளிப்பும், இனிப்பும் கலந்த ஜூஸ் போன்ற வகைகளை மாணவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
காலாவதியான பொருள்
இதில் தேதி மற்றும் காலாவதி தேதிகள் இருப்பதில்லை.அதிகளவில் சிகப்பு மற்றும் பச்சை, மஞ்சள் வண்ண பொடிகளை கலந்து பாப்கார்ன்,சோளப்பொரி உருண்டைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட் போன்றவை தரம் குறைவானதாக, காலாவதியான பொருட்களாக உள்ளன.வெட்டி வைக்கப்பட்ட மாங்காய் துண்டுகள், பலாப்பழங்கள் போன்றவை ஈக்கள் மொய்க்காதபடி வலைகளுக்குள் வைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படுவதால் இவற்றில் ஈக்கள் மற்றும் கொசு, துாசு போன்ற மாசுகள் படிந்து விடுகின்றன.இவற்றை வாங்கி சாப்பிடும் மாணவர்கள் வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
பிரைடுரைஸ்
சில மாணவர்கள் புளிப்பான உணவுகளை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு சளி, இருமல், மற்றும் காய்ச்சல் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர்.ஜங்புட் எனப்படும் பாஸ்புட் ஐயிட்டங்களான காளான் வறுவல், பிரைட்ரைஸ் பிரைடுஎக்,பானிப்பூரி, பேல்பூரி போன்ற கடைகளும் மாலை நேரத்தில் மாணவர்களை குறிவைத்து ஆரம்பிக்கப்படுகி்ன்றன. இந்தக் கடைகளில் குவியும் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் இது போன்ற தரமில்லாத பாஸ்புட்களை வாங்கிசாப்பிட்டு பல்வேறு உடல் நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். தரக்கட்டுபாடுஇன்றி தயாரிக்கப்படும் இது போன்ற கடைகளால் செயற்கை நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை திடீர் ஆய்வு
சாத்துார் சங்கரேஸ்வரன்:மாணவர்கள் சாப்பிடும் உணவுகள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும்.பள்ளிகள் முன்பும் உள்ள பலகடைகளில் பாதுகாப்பற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதால் வயிற்று போக்கு,வாந்தி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. சாக்கடை மேலும் குப்பைத்தொட்டிகள் அருகிலும் கடைகள் நடத்தப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஈ, கொசு, துாசு படாத படி தின்பண்டங்களை கண்ணாடி பாட்டில் அல்லதுகூண்டில் வைத்து மூடி விற்பனை செய்ய வேண்டும். இவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement