Advertisement

காரைக்குடியில் கார் விபத்தில் சகோதரர்கள் பலி:குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

காரைக்குடி;காரைக்குடி - திருச்சி பைபாஸ் ரோட்டில் கழனிவாசல் விலக்கு அருகே கார்கள் மோதியதில் அண்ணன், தம்பி பலியாயினர். சிறுவர்கள், பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவகோட்டை சிறுவனுாரை சேர்ந்தவர் தியாகராஜன்,38. இவர் குடும்பத்தாருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று காலை வேனில் திரும்பினார். அவரே காரை ஓட்டியுள்ளார். காலை 5:00 மணிக்கு திருச்சி - பைபாஸ் ரோட்டில் காரைக்குடி கழனிவாசல் விலக்கு அருகே வரும்போது, பாம்பனிலிருந்து பெரம்பலுார் சென்ற கார் மோதியதில் தியாகராஜனின் தம்பி காமேஷ்,25, சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த மற்றொரு தம்பி பிரகாஷ்,23, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தியாகராஜனின் மனைவி ராதிகா,34, ராதிகாவின் தம்பி நென்மேனிஅழகர்,33, அவரது மனைவி சரண்யா,28, தியாகராஜனின் மகன்கள் தீபக்ராஜ்,9, திலீப் ராஜ்,4, ஸ்டீபன்ராஜ்,2, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அழகரின் காலில் பலத்த முறிவு ஏற்பட்டது.குன்றக்குடி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்கு பதிந்து காரை ஓட்டிய டிரைவர் பெரியசாமி,23,யை கைது செய்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement