Advertisement

சீனாவில் வெள்ளம் : 18 பேர் பலி

பீஜிங்: சீனாவில், பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.ஆசிய நாடான சீனாவில், ஜிலின் மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன; ஒரு லட்சத்து, 10 ஆயிரம் பேர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்தும் முடங்கி உள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 18 பேர் உயிரிழந்து உள்ளனர்; ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • அப்பாவி -

    சீனாவும் நம்ப ஊர் மாதிரிதான்...

  • karthikeyan -

    சீனா சாவட்டும் . சந்தோஷம்

  • A shanmugam - VELLORE,இந்தியா

    அண்டைநாடு எல்லை கோட்டுக்கு அத்துமீறி தன செல்வாக்கை காட்டினால் இயற்கை பேரழிவுதான் ஏற்படும். இதனை எதிர் கொள்ளவே சீனா திண்டாடுகிறது. ஒருநாட்டை தன் படைபலத்தை மூலம் ஆக்கிரமைப்புக்கு உட்படுத்த நேரிட்டால் இயற்கை பேரழிவுக்கு ஆளாக வேண்டியதுதான். இயற்கை பேரழிவை எந்த சக்தியாலும் எந்த நாட்டாலும் வெல்ல முடியாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement