Advertisement

டூவீலர்- கார் மோதல்:முதியவர் பலி

சிவகங்கை;மானாமதுரை அருகே உள்ள கால்பிரவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,60. விவசாயி. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு சாமியார்பட்டி விலக்கு அருகே மொபட்டில் சென்றார். திடீரென ரோட்டின் குறுக்கே சென்று வலதுபுறமாக செல்ல முயன்றார். அப்போது மானாமதுரையில் இருந்து வேகமாக வந்த கார் மோதியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்ட வரப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, இறந்துவிட்டது தெரியவந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement