Advertisement

பயங்கரவாத தாக்குதல் : பாக்.,கில் 2 வீரர்கள் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில், வட மேற்கு பகுதியில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. 'அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், இங்குள்ள ஹயாத்பாத் நகரில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது, வெடிகுண்டை கட்டிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற பயங்கரவாதி ஒருவன், மோதி வெடிக்கச் செய்தான். இதில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து சிதறியது; தொடர்ந்து சென்ற மற்றொரு ராணுவ வாகனமும் தீக்கிரையானது.
இந்த தாக்குதலில், வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, டெஹ்ரிக் - இ - தலிபான் பயங்கரவாதிகள்
பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

    அமைதி மார்க்கத்தில் இது சகஜம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement