Advertisement

கொடைக்கானலில் கஞ்சா

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியை சேர்ந்தது பூம்பாறை கிராமம். இங்குள்ள தோட்டங்களில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை அமைத்து பூம்பாறை கிராமங்களில் ரோந்து சென்றனர். அவர்களைக் கண்டதும் ஒரு தோட்டத்தில் இருந்த இருவர் ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்று பிடித்ததில், அப்பகுதியை சேர்ந்த மலைச்சாமி, 60 மற்றும் ஜெயக்குமார், 39, எனத்தெரிந்தது. இருவரும் கத்தரிக்காய், பீன்ஸ் பயிர்களின் இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மலைச்சாமியிடம் இருந்து அனுமதியில்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, கஞ்சா செடிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
டி.எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறியதாவது: எஸ்.பி., சக்திவேல், போதை வஸ்துகளை ஒழிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரால் பல கிராமங்களில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது, என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement