Advertisement

நக்சல் ஆதரவு மாணவி குண்டர் சட்டத்தில் கைது

சேலம்: சேலம், வீராணத்தைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி, 23. இதழியல் படிக்கும் கல்லுாரி மாணவியான இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பழனிவேலுவின் உறவினர். 12ம் தேதி, சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும், மாணவ, மாணவியரிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தார்.
அவரை, அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். மாணவி மீது, கடலுார், கரூர், கோவை, மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகள் பதிவாகியுள்ளன. நக்சல், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் நெருக்கமாக உள்ள வளர்மதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இதன் நகல், சேலம் பெண்கள் கிளை சிறையில் உள்ள வளர்மதியிடம், நேற்று வழங்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Murugan Rajagopal - Jurong East,சிங்கப்பூர்

    போங்கடா ... நீங்களும் உங்க சட்டமும்... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement