Advertisement

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று(ஜூலை 18) காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்:



ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்., உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி (72) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

ராஜினாமா:



இந்நிலையில் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இன்று(ஜூலை 18) காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்:



முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த், மற்றும் காங்., சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    முதன் முறையாக ஜனாதிபதி துணை ஜனாதிபதி இரண்டும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது , இந்தியா அரசியலில் இது மிகவும் முக்கியமானது.

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    இந்த ஸ்பீக்கர் வாயரிடமிருந்து தமிழ்நாடு தப்பியது . அடுத்த பிரதமர் ஒரு தென்னாட்டு காரர் வருவார் என்றால் , மோடி உஷாராகி இந்த டம்மி பதவி கொடுத்து வேங்காயவை சிறைப்படுத்து விட்டார் ரப்பர் ஸ்டம்புக்குள் .

  • K.Sugavanam - Salem,இந்தியா

    கனத்த இதயத்துடன் அரசியல் வட்டத்திலிருந்து விலக வேண்டிய சூழலை உருவாக்கிட்டாங்களே.. பாவம்..நல்ல அமைச்சராக செயல் பட்டார்..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    வெங்கையா வெல்வது நிச்சயம். அந்த பதவிக்கு அழகு சேர்ப்பார்.

    • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

      சாம்பாருக்கு வெங்காயம் மாதிரி.

  • kuruvi - chennai,இந்தியா

    இவரை, Deputy PM for South India வாக மாற்றுவது நல்லது.

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • baski - Chennai,இந்தியா

    விரைவில் அமேரிக்க துணை ஜனாதிபதியா வளர வாழ்த்துக்கள்...

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    HE IS TOO SMART. IF HE DOESN'T ACCEPT THIS OFFER, HE WILL BE IN POWER FOR JUST ANOTHER ONE N HALF YEAR. BUT , IF ACCEPTS , THIS OFFER, HE WILL BE IN A GOOD POST FOR ANOTHER 5 YEARS. SO HE HAS ENSURED HIS POWER FOR ANOTHER 5 YEARS. IT CLEARLY SHOWS, MR. NAIDU IS BELIEVING THE TRUTH THAT, BJP WILL NOT WIN NEXT LS ELECTION. ...KUDOS TO THE INTELLIGENCE OF NAIDU SIR.

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    குழப்படி செய்பவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதுபோல, உருப்படியாக வேலைசெய்து கொண்டிருந்த வேங்கையாவை, சுருக்கி வைத்த குடைபோல் ஆக்குகிறார்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    அப்பாடா, ஒரு ஒளறுவாயன் குறைஞ்சான்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அரசியல்வாழ்வுக்கும் டாட்டாவா? big bos elemination மாதிரி ஆயிடிச்சோ? நல்லா தானே போயிகிட்டு இருந்தது..

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சபாஷ் நாயுடு வெற்றிபெறுவது திண்ணம்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    துணை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்தால் வெண்டைக்காயும் விளக்கு எண்ணையும் சேர்ந்தால் போல நடப்பார்...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    ஒரு ரப்பர் ஸ்டாம்ப், கிடைக்கவில்லை என்றால், தேய்ந்து விட்டால், அடுத்த ஸ்டெப்னி ஆயத்தம்.

  • VETRI VENDHAN - Vellore,இந்தியா

    அந்த பதவிக்குரிய கண்ணியம் காத்து, அடுத்து வருபவர்களுக்கு உகாரணமாய் திகழ வாழ்த்துக்கள்.

  • thiru - Chennai,இந்தியா

    அவ்வளவு தான் (தமிழக) ஆட்டம் முடிந்தது... இன்னாெரு டம்மி பீஸ்...

  • Kunjumani - Chennai.,இந்தியா

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      யார் வெற்றி? குஞ்சுமணி சொல்லேன்.

    • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      மணியின் மீதுதான் பலர் குறியாய் இருக்கிறார்கள்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement