Advertisement

லஞ்சம் கேட்கும் சர்வேயர் : 'வைரலாகும்' வீடியோ

தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் நிலத்தை அளக்க சர்வேயர் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
கம்பத்தை சேர்ந்த முருகன், 27, தனியார் நிறுவன ஊழியர். வீடு கட்டுவதற்காக நிலத்திற்கு பட்டா பெற சர்வேயர் சிவராமகிருஷ்ணனை அணுகினார். இதற்கு சிவராமகிருஷ்ணன் தாமதப்படுத்தியதாகவும், பணம் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிவராம கிருஷ்ணன் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோவை முருகன் பதிவு செய்தார். நேற்று இதுகுறித்து கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்தார்.
கலெக்டர் கூறுகையில், ''நில அளவை உதவி இயக்குனர் விசாரித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
சிவராமகிருஷ்ணன் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

    இது பெரிய விஷயம் அல்ல... 99 % கவெர்மென்ட் ஊழியர்கள் லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது, கொடுக்க விட்டால் நாளை வா என பலமுறை அலைகழிகிறார்கள். தொலைவிலிருந்து வரும் மக்கள் ,தினமும் வேலைக்கு போகும் மக்கள் தன் சுய வேலையை விட்டு விட்டு எத்தனை தடவை அலைய முடியும் , ஆகையால் வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுக்கிறார்கள் மக்கள் ,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement