Advertisement

ரூ.53 கோடி மோசடியில் 3 பேர் மீது வழக்கு: 18 மாவட்டங்களில் சுருட்டல்

திண்டுக்கல்: மதுரை, திண்டுக்கல் உட்பட 18 மாவட்டங்களில் கடன் வாங்கித் தருவதாக கூறி, ரூ.53 கோடி மோசடி செய்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல், ரூட்ஸ் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர் நந்தினிதேவி,42. இவர், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு: கன்னியாகுமரியில் தொண்டு நிறுவனம் நடத்தும் சோபிராஜன், திருச்சியை தலைமையிடமாக கொண்டு, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ் என்னிடம் அறிமுகமாயினர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறைந்த வட்டிக்கு பணம், ரூ.4 லட்சத்தில் வீடு கட்டித் தருவதாக கூறினர்.இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த 650 பெண்களிடம், ரூ.2,500 வீதம் வசூலித்து, ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்கினோம். பின்னர் மகளிர் திட்டம் மூலம் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினர். இதன் மூலம் 51 சுயஉதவிக் குழுக்களை உருவாக்கினர்.
ஒவ்வொரு குழுவிலும் 16 பேர் வீதம், 816 பேரிடம் தலா ரூ.1,600 வீதம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரம் வசூலித்தனர். மொத்தம் ரூ.33.49 லட்சம் வசூலித்தனர். ஆனால் பேசியபடி கடனும், வீடு கட்டியும் தரவில்லை. சோபிராஜன், செல்வராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.
ரூ.53 கோடி மோசடி: இவர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருச்சி, கோவை உட்பட 18 மாவட்டங்களில் சுயஉதவிக் குழுக்களிடம் ரூ.53 கோடிக்கு மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிக்கு மேலாளர் சந்திரிகாவும் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தேன்மொழி, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சோபிராஜன், செல்வராஜ், சந்திரிகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement