Advertisement

மயில் வேட்டை: மூவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

சிவகங்கை; இளையான்குடி அருகே மயில் வேட்டையில் ஈடுபட்ட மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.இளையான்குடி அருகே பெத்தனேந்தல் கண்மாயில் அதிகளவில் மயில்கள் உள்ளன. அவற்றை சிலர் அடிக்கடி வேட்டையாடி வந்தனர். நேற்று சிவகங்கை மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையிட்டனர். அவர்களை பார்த்ததும் மயில்களை வேட்டையாடிய மூன்று பேர் தப்பினர். அவர்களை வனத்துறையினர் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கல்குறிச்சியைச் சேர்ந்த கார்த்தி, 30, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டி, 38, முனியசாமி, 33, என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடிய மயில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement