Advertisement

சசியை அம்பலப்படுத்திய ரூபா தூக்கியடிப்பு; குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி.,க்கு காத்திருப்போர் பட்டியல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததை கண்டுபிடித்த, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டு, 'டம்மி' பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார்.
புகாருக்கு ஆளான சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைக்கு வரலாம்



சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் விரும்பும் உணவை சாப்பிடுவதற்காக, சிறப்பு சமையல் அறை, சமையல் செய்ய கைதிகள், அவரை சந்திக்க வருபவர்களுக்கென, மேஜை, நாற்காலிகள் என, சிறைக்குள்ளேயே, 'சசிகலா அலுவலகம்' அமைத்து, வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக, சசிகலா தரப்பிலிருந்து, சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதாகவும், சிறையில் நடந்த மேலும் சில முறைகேடுகள் பற்றியும், டி.ஐ.ஜி., ரூபா அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, டி.ஜி.பி.,யும், டி.ஐ.ஜி.,யும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டினர். நிலைமை கையை மீறி சென்றதால், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணை குழுவை, மாநில அரசு அமைத்தது.
விசாரணை அதிகாரிகள், எந்நேரத்திலும் விசாரணை நடத்த சிறைக்கு வரலாம் என கருதிய, சத்யநாராயண ராவ், சமீபத்தில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்து, சில ஆவணங்களை திருத்தியதாக கூறப்பட்டது. இதையறிந்த, ரூபாவும் சிறைக்கு சென்று, சிறை அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் விளக்கம் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தூக்கியடிப்பு



சத்யநாராயணாவின் ஆலோசனைப்படி, சசிகலா தொடர்பான தகவல்களை ரூபாவுக்கு அளித்த, 32 கைதிகள், நள்ளிரவில், கர்நாடகாவின் பல்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். விசாரணை அதிகாரிகள், நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வதாக இருந்த நிலையில், பிரச்னைக்கு மூல கர்த்தாவான, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், - டி.ஐ.ஜி., ரூபா, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது, நடவடிக்கை பாய்ந்தது.
சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில், சத்ய நாராயணா, இன்னும் இரு வாரங்களில் ஓய்வு பெற உள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய, சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு துறை, டி.ஐ.ஜி., மற்றும் கமிஷனர் பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார். இதனால், சிறையில் உள்ள கைதிகள், ரூபா இடமாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூபா இடமாற்றம் செய்தியறிந்த, அவரது கணவரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, மவுனிஸ் முத்கோல், பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள, கர்நாடக சிறைத் துறை தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்று, டி.ஜி.பி., மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பாதுகாப்பாக வைக்கும்படியும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும்படியும், அங்கிருந்த ரூபாவிடம் கூறிவிட்டுச் சென்றார்.
ரூபாவை இடமாற்றம் செய்ததற்கு, கர்நாடக எதிர்க்கட்சிகள், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., அரசை கடுமையாக கண்டித்துள்ளன. முதல்வர் அலுவலகம் சப்பைக்கட்டுபோலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் அலுவலகம், விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டிய ரூபாவும், குற்றம் சாட்டப்பட்ட, சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவும், சேவை விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாமல், மீடியாக்களிடம் அறிக்கை குறித்து விவாதித்தனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்களின் இந்த நடவடிக்கை, விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது.

இதற்காக, விளக்கம் கேட்டு, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நல்ல முறையில் நடக்கும் வகையில், டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முறைகேட்டை கண்டுபிடித்த ரூபாவை, ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்? காங்., அரசின் செயல்பாடு சரியில்லை. நேர்மையான அதிகாரிக்கு அவமானம் நேர்ந்துள்ளது.
- எடியூரப்பா மூத்த தலைவர், பா.ஜ.,

சிறையில் நடந்த முறைகேடுகளை மறக்கடிக்கும் வகையில், அதிகாரிகளை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. நேர்மையாக விசாரணை நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரணை நடத்தினால், சக அதிகாரிகளின் முறைகேட்டை கண்டுபிடிக்க மாட்டார். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- குமாரசாமிமூத்த தலைவர், ம.ஜ.த.,

சசிகலாவுக்கு 5 அறைகள்:



பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த, ஐந்து புகைப்படங்கள், கன்னட, 'டிவி' சேனல்களில் நேற்று வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது. அதில், சிறையின் ஒரு பகுதியில் உள்ள ஐந்து அறைகளும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கைதிகள், யாரும் பார்க்காதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சசிகலாவை அடைத்துள்ள அறை மட்டும், துணி போட்டு மூடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. துவைக்கப்பட்ட துணிகள், வராண்டா ஜன்னல் மீது காய வைக்கப்பட்டுள்ளன. படுக்கைகள், துணிகள், ஸ்டீல் பாத்திரங்கள் வைக்கும் வகையில், சிறப்பு ஷெல்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படங்கள் வெளியானதால், விதிமுறைகளை மீறி, சசிகலாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகைகள், அம்பலமாகியுள்ளன. இதனால், சசிகலாவுக்கு மட்டுமின்றி, கர்நாடக அரசுக்கும், நெருக்கடி ஏற்படலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (57)

  • manasakshi - chennai,இந்தியா

    அங்கேயும் ஒரு ரூபா வா . ஒரு கை பாத்துர வேண்டியது தான்

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலை விரித்து ஆடுது

  • M.Guna Sekaran - Madurai,இந்தியா

    ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் எப்படியும் தமிழக சின்னம்மா விரைவில் விடுதலை ஆகிவிடுவார், உலகம் சுற்றும் வாலிபன் மோடின் மூலம். இந்தியாவில் தான் நேருமைக்கு மதிப்பில்லையா அப்படி இருக்க இந்த ரூபாக்கு தேவையா இந்த ஆசை. இனிமேல் மிரட்டல் மத்திய அரசு மூலம்.........பாவம் ரூபா

  • rajakumar - tenkasi,இந்தியா

    பிஜேபியின் விளையாட்டு தமிழ்நாட்டில் மேலோங்கிகிறது.. சின்னமாவின் விடுதலை உறுதி செய்ப்பட்ட நிலையில் அவரின் பெயரை கெடுப்பதற்காக பிஜேபி போக்கு காட்டுகிறது. ஓ பி எஸ் இ இப்படித்தான் தூக்கி விட்டார்கள் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை என்று தெரிந்த பின்பு சசிகலா மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படி சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்தி காட்டுகிறார்கள். இப்படி செய்வதால் மக்களுக்கு அனுதாபம் ஏற்படுமே தவிர வெறுப்பு ஏற்படாது என்பதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும்.

    • K.சிவகுமார் madurai - Madurai,இந்தியா

      ஆம் சின்ன சின்ன சின்னம்மா விஷயங்கள்

  • Balaji - Khaithan,குவைத்

    நொண்ணம்மா இவ்வளவு ஆணவமாக இருப்பதற்கு காரணம் சில அதிமுகவினர் அவரை தலையில் துக்கிவைத்துக்கொண்டு நெற்றியில் மண் படும்படி குனிவது தான் காரணம்......... ஜெ இறந்தவுடன் இவருக்கு மதிப்பளிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருப்பார்........... அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள் திடீரென்று திருத்துவது என்பது சற்று சிரமம் தான்,.......... தமிழக மக்கள் தான் பாவம், இதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.............

  • bairava - madurai,இந்தியா

    நன்பர்களே அதான் ஏற்கனவே சொன்னோம்ல நீதியும், சட்டம் அதிகாரவர்கத்திற்கும் பணத்திற்கு மட்டுமே வேலை செய்யும் அப்புறம் எதுக்கு அதை பற்றி பேச்சு விமர்சனம் இங்கே நடப்பது பாசிச ஆட்சி தெரியுமோ ? சும்மா நேரத்தை வீணடிக்காதீர்

    • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

      எங்க கர்நாடகத்திலா?

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    அரசியலில் வரம்பு மீறி செயல் படுபவர்கள் இப்போது நல்லவர் ஆகிவிடுகின்றார்கள்.

  • christ - chennai,இந்தியா

    நீதிமன்றம் சிறையில் நடக்கும் கூத்துக்களை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது அல்லது நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டது போல கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா ? சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டும் தானோ ?

    • Balaji - Khaithan,குவைத்

      இதென்ன ஏழைகளுக்கு மட்டும் தானோ என்று கேள்வி வேற?????? சட்டம் ஏழைகளை மட்டும் தான் இருப்புக்கரம் கொண்டு அடக்கும் என்பது தான் நிதர்சனம்............

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    அளவுக்கு மீறி காசு சேர்த்தால், அதுவும் திருட்டு வழியில் சேர்த்தால் எவ்வளவு திமிர் வரும் என்பதன் அடையாளம்தான் இந்த செயல்பாடுகள்...அந்தமான் தனிமை சிறைக்கு அனுப்புங்க எஜமான்....

    • Sekar KR - Chennai,இந்தியா

      அந்தமான் தீவையே வாங்கிடுவாங்க. தைரியம் இருந்த அனுப்புங்க.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ஜீவராசி சசிகலாதான். அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை செய்யவில்லை. ஜெ அப்பல்லோ வந்தபின்பு அப்பல்லோ சிசிடிவி வேலை செய்யவில்லை. மர்மக் கொலையும், கொள்ளையும் நடக்கும்போது கொடநாட்டு சிசிடிவி வேலை செய்யவில்லை. பரப்பன அக்ரஹாரம் ஜெயிலை சொகுசு காட்டேஜாக மாற்றியபின் ஜெயிலின் சிசிடிவி வேலை செய்யவில்லை. Worlds most powerful CCTV jammer is Sasikala.

    • Sekar KR - Chennai,இந்தியா

      நல்ல கண்டுபிடிப்பு. சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது நிச்சயம்.

    • K.சிவகுமார் madurai - Madurai,இந்தியா

      திருநள்ளாறு அருகில் Satellite வரும் போது செயல் படாமல் போகுமாம் ( உண்மையா?), அது போலவே

  • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

    அங்க இங்கன்னு அனாத்தர அல்லக்கை இல்லைடா...... யார்ரா அங்கேன்னு கூப்பிட்றதுக்கு முன்னாடியே கூழை கும்பிடு போடற கூன் பாண்டி இல்லைடா..... சின்ன்ன்னம்ம்மாடா

  • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

    ...நேர்மையாக இருப்பது தற்போதைய நிலையில் மிகப்பெரிய குற்றம் போல... இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை, தமிழகம்தான் இப்படியென்றால் அவிங்க அதுக்கு மேல இருக்காங்கெ... இதெல்லாம் மிக மிக மோசமான முன்னுதாரணம்...

    • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      பிரதர் காங்கிரசுகிட்ட நேர்மையா? அது அவங்க சரித்திரத்திலேயே கிடையாது.

  • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

    ...எல்லாம் சரி அய்யா, இப்போதாவது அந்த கொள்ளைக்கார அம்மணிக்கு கொடுத்து வந்த சலுகைகளை நிறுத்தி வைத்துள்ளார்களா... அல்லது வாங்கிய காசுக்கு இன்னும் தொடர்கிறதா... சலுகைகளை நிறுத்தியாவது வையுங்கள், தவறு செய்தவர்கள் கொஞ்ச நாளைக்காவது தண்டனையை உண்மையாக அனுபவிக்கட்டும்... இப்படி தண்டனை கொடுப்பதற்கு, கொள்ளைக்காரியை பேசாமல் போயஸ் தோட்டத்திலேயே விட்டுருக்கலாம், ஆனா தமிழகம் இன்னும் சீரழிந்து போயிருக்கும்...

    • ravichandran - Hosur,இந்தியா

      தவறு செய்தவர்கள் கொஞ்ச நாளைக்காவது தண்டனையை உண்மையாக அனுபவிக்கட்டும்.....நண்பரே பகல் கனவு காணாதீர்கள்....அதெல்லாம் சின்ன சின்ன தப்பு செய்பவர்களுக்குத்தான்

    • Balaji - Khaithan,குவைத்

      உங்கள் ஆதங்கம் நமது சட்டதிட்டத்தின் படி நடப்பது என்பது வெறும் கானல்நீர் தான் என்பதை புரிந்துகொண்ட மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.......

  • narayanan iyer - chennai,இந்தியா

    உண்மையிலேயே சித்தராமையா நேர்மையானவராக இருந்தால் ரூபாவை அங்கேயே பதவியில் வைத்து ராவ் வை விடுப்பில் அனுப்பி இன்னும் என்ன என்ன நடந்துஇருக்கிறது என்று அறிக்கை கேட்டுஇருக்க வேண்டும் அதை விடுத்து கைதிகளையும் ரூபாவையும் இட மாற்றம் செய்தது மிகப்பெரிய தவறு . இதன் மூலம் முதல்வரும் இதற்கு உடந்தையாக இருந்துஇருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது . சசிகலாவையும் அவரது கூட்டத்தினரும் பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடமுடியும் என்ற முடிவிலும் அந்தக்கும்பலைவைத்து எல்லாரும் வேகமாக பணம் பண்ணும் நோக்கத்தில் இருப்பதுதான் வெளிச்சமாக தெரிகிறது . சே மானம்கெட்ட ஜென்மங்கள் .

    • Balaji - Khaithan,குவைத்

      இதிலென்ன சந்தேகம்????? உண்மையில் அனைத்து தரப்பினருக்கும் சொல்லவேண்டியது சென்ற பிறகு தானே இவ்வளவு உபசரிப்புகள் நடந்துகொண்டு இருக்கிறது......... இவர்களிடம் பேரம் பேச (அதாவது கர்நாடக அரசின் மேல்மட்ட அளவில்) தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர் என்பது செய்தியாக வந்ததை நீங்கள் பார்க்கவில்லை போலும்????????

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    அரசன் எவ்வழி அவ்வழி பிரஜை என்பது முது மொழி இப்போ அரசன் இல்லே சுயஆட்சியென்று நம்மளுக்கு நாம் செலக்ட் செய்த மனுஷாலே தான் நம்மை ஆளுறாங்க. அவளோட கொள்கை மக்களை போதையே தள்ளினாள் தான் அவா இஷ்டத்துக்கு ஆடமுடியும்னு தெரிஞ்சுண்டுட்டுட்டா தேர்வு செய்தவள் ஏமாற்ருறாங்க ஆளுவோர் ஜெயவினால் ஆட்ச்சிக்குவந்தவரை வெரட்டிட்டு சசிக்கு ஸலாம் போட்டுண்டு வெட்கமே இல்லாமல் ஆளுறாங்களே அதுதான் மஹாகொடுமை

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நீங்கள் மக்களை ஏமாற்றலாம்... ஆனால் இறைவனை ஏமாற்ற முடியாது.... ரூபாவை மாற்றியதால் நீங்கள் நிரபராதி என்று அர்த்தமாகாது... பொறுப்புக்களில் இருந்து காங்கிரஸ் ஆட்சி தப்பித்து கொள்ள பார்க்கிறது...

  • ssssss - Chennai,இந்தியா

    நியாயத்தை நம் நாட்டில் எதிர் பார்க்க முடியாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதன்படி சசிகலா குடும்பம் ஒரு நாள் அழிந்து விடும்.

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      தெய்வம் கண்டிப்பாய் நின்று கொல்லும்.

    • Balaji - Khaithan,குவைத்

      தெய்வம் நின்று கொள்ளும்...... அது தான் பிரச்சனையே அன்றே கொன்றால் இதுபோன்றெல்லாம் வந்திருக்கவே இருக்காதே

    • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      இலக்கணம் - "கொள்ளும்" இல்லை கொல்லும்

    • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      வளர்மதி, சி.ஆர் சரஸ்வதி இருவரும் ரூபாவை போட்டு வறுத்தெடுக்க போகிறார்கள்.

  • Sekar KR - Chennai,இந்தியா

    இதில் ஏன் நீதிமன்றம் தலையிடவில்லை?

    • Ramesh - Tambaram,இந்தியா

      நீதி கொஞ்ச நாட்களாகவே தொங்கிக்கொண்டிருக்கிறது. ஏழைகள், பாவப்பட்டவர்கள் என்றால் மட்டுமே விழிக்கும்.

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    இந்திய ஆட்சியில் நீதிக்கு இடமில்லை. நிதி என்றால் , யார்ரென்றும் பார்க்காமல் மேலதிகாரிகள்கூட உதவ வந்துவிடுவார்கள். சசி கர்நாடக. அரசையும் வாங்கிவிட்டார்களா?

  • sulochana kannan - AUKLAND,நியூ சிலாந்து

    என்னங்க இது அநியாயமா இல்ல.. அவங்களை ஏமாத்தி இருக்காங்க.. அவங்களும் சரி கிடைத்தவரையில் சரிதான் என்று இருந்துட்டாங்க போல.. இரண்டு கோடி க்கு இவளோ சின்ன ஷெல்ப்பாங்க , ஒவ்வொரு பாத்திரம் மட்டுமே வைக்க முடியுது.. துணி வெளியே காய போடாமே எங்கே போடறதாம்.. ஒரு கொடி கம்பு கூட போட்டு தரலை... இந்த ஜெயிலும் வேணாம் ஒன்னும் வேணாம் நான் வேற ஜெயிலுக்கே போய்க்கிறேன் என்று கோபித்து க்கொண்டு போய்ட போறாங்க... எது வேணா நடக்கும் இந்த நாட்டிலே

    • ravichandran - Hosur,இந்தியா

      கர்நாடகாவுல ஜெயில் அதிகாரிங்க எல்லாம் இந்தம்மாவை எங்க ஜெயிலுக்கு மாத்தணுமுன்னு கடவுளை வேண்டிக்கிறாங்களாம்.நம்மூருல இடைத்தேர்தல் வரணுமுன்னு மக்கள் வேண்டிக்கிறத போல...

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சசிக்கு சஞ்சய் தத் போன்ற சலுகைகளும் கொடுப்பபர்களோ? அது காங்கிரஸ் கலாச்சாரமாயிற்றே

    • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

      தேச நேசா... உன் கட்சி பற்று பிடித்தது... நிறைய பாத்துருக்கேன் .... சில பேர் ஒரு குவாட்டர் ஒரு பிரியாணிக்கு மாங்கு மாங்கு என்று குரல் கொடுப்பார்கள்... ஆனால் எதுக்காக கோஷம் போடுகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது... சஞ்சய் தத்தை எட்டு மாதம் சிறை தண்டனையை ரத்து செய்து வெளியே விட்டது எந்த அரசு?.... இப்போ அவர் நன்னடத்தியின் காரணத்தால் முன்னேயே விடுதலை செய்யப்பட்டார் என்று கோர்ட்டில் விளக்கம் சமர்ப்பித்தது எந்த அரசு?... சரி அதுஎல்லாம் வேண்டாம் ஒரே வார்த்தையில் சொன்னால்.... அவனை எட்டு மாதம் முன்னாலேயே விடுதலை செய்தது எந்த அரசு?.... அடித்த குவாட்டர் இறங்கிய புறம் யோசித்து பார்.....

  • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

    வெட்ட வெளிச்சமான முறைகேடுக்கு கூட நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரையே ட்ரான்ஸ்பர் செய்யும் அவலம்.... இவ்வளவு தான் இந்திய அரசியல் சட்டத்தின் சக்தியா??? கேவலமாக உள்ளது முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் முதல்வன் பட பாணியில் தூக்கி எறிய வேண்டும்.....

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சசிக்கு உதவி காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணிக்க அலைவது புரிகிறது இந்த செய்தியால் திமுகாவுக்குத் தான் நஷ்டம்

  • sulochana kannan - AUKLAND,நியூ சிலாந்து

    இறை அன்பு மக்கள் மத்தியிலே இறை உணர்வு ஊட்டினவர், சகாயம்.. சகாயம் மட்டுமே செய்கிறவர், இவர்கள் எல்லாம் மக்கள் நண்பர்கள்.. இன்னும் இருக்கிறார்கள் செயலகத்தில் செயல் புரிய முடியாமல்.. ..இவர்களோடெல்லாம் ஒப்பிட பட க்கூட தகுதி இவர்கள் அந்த கர்நாடக லஞ்ச அதிகாரிகள். நெக்ஸ்ட் ரூபாவை பற்றி, சாதாரணமாக இது ஒரு நடை முறை தான். அதாவது, இரண்டு பேர்கள் மத்தியிலே மோதல் ஏற்பட்டால் அரசு இரு தரப்பினரை யுமே அதே இடத்தில் தொடர அனுமதிக்காமல் மாற்றி விடுவது வழக்கம் .. ரூபா விற்கு வேறு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.. மறுபடியும் எல்லாம் ஓய்ந்த பின் இதே இடத்தை தரவும் வாய்ப்பு உளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்திருப்பிலேயே வைக்கப்பட்டு இருக்கிறார்கள் . பொறுத்து இருந்து பார்ப்போமா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஐந்து லக்கி நம்பர் என்பதால் 5 நட்சத்திரங்கள் கொண்ட 5 அறைகள்... ஒரு DGP இதை விட கேவலமாக நடந்துகொள்ள முடியாது... 4 ஆண்டு என்ற தண்டனையை 40 ஆண்டு ஆக்கி அந்த DGP மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும்... நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைக்க இவன்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

  • aanthai - Toronto,கனடா

    டி ஐ ஜி தூக்கிஅடிப்பு அல்ல . கர்நாடக அரசால் பழிவாங்கல் என்பதுதான் சரியாகஇருக்கும் .

  • தீதும் நன்றும் பிறர் தர வாரா - Perth,ஆஸ்திரேலியா

    கைதிகளுக்கே transfer வாங்கி குடுத்த சிங்கம் சின்ன அம்மா தான்..

    • rajan - kerala,இந்தியா

      ஆஹா அப்போ சின்னதாய் வச்சிருந்த அத்தனை சிங்க குட்டிகளும் பால்குடி மாறி பெரிய சிங்கமே வளர்ந்துட்டோ. ஏன் ஒன்னு கூட சாகல்லியா? இப்போ இனி மொத்தத்தையம் போட்டு தள்ளிட வேண்டியது தான். தாயில்லாமல் நானில்லையே தானே எவரும் வளர்ந்த்தில்லை .... எவன்டா இப்போ போய் இந்த பாட்ட பாடுறான். அது நம்ம தினகரன் தம்பி தான்.

    • rajan - kerala,இந்தியா

      நேர்மையான அதிகாரிகளுக்கு ஒன்றும் ஆகாது. இவுங்க எந்த துறைக்கு போனாலும் அங்கு ஒரு ஊழலை பிடிப்பார்கள் திரும்பவும் துறை மாற்றம் ஆகும் இப்படியே போய் கொண்டிருக்கும். ஏன்னா நம்ம அரசியல்வாதிங்க ஊழல் செய்யாத இடமே இல்லையே. எனவே இந்த அரசியல் பூச்சாண்டிகள் எல்லாம் நேர்மை எனும் அஸ்திரத்தின் முன்னால் எதுவும் பண்ண முடியாது. மோடி ஜீ,கொண்டு வாருங்கள் அந்த லோக் ஆயுக்தா சட்டத்தை. இந்த ஊழல் அரசியல்வாதிகள் நேர்மையான அதிகாரிகளை பந்தாடும் வித்தை முழுமையாக அழிக்க வழி செய்யுங்கள். SOONER IT IS, BETTER IT IS காங்கிரஸ் ஊழலை ஒழித்து கட்ட இது தான் நல்ல தருணம்.

  • Kunjumani - Chennai.,இந்தியா

    தூக்கியடிக்கப்படவில்லையென்றால்தான் ஆச்சிரியம். அரசியல் வியாதிகளின் சுபாவம் அப்படி.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கர்நாடகா??? நம்பி வந்த மம்மியை நயவஞ்சகமாய் சிறை பிடித்து தமிழ்நாட்டின் தலையெழுத்தயே கெடுத்துவிட்டாயே. எந்த நயவஞ்சகத்தால் நீ எங்களை வீழ்த்தினாயோ அதே நயவஞ்சகத்தால், ஒரு நயவஞ்சக நரியால் நீங்கள் அடித்து கொண்டு அழிவதை பார்க்கும் மனம் ஆனந்த கூத்தாடுது. உங்களின் அழிவு ஒரு தமிழச்சியின் பொருட்டு ஆரம்பித்து உள்ளது என்பதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. பலகோடி தமிழ் மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட நீ அதே தமிழச்சியின் சூழ்ச்சியால் அழிய வேண்டும். அதை நாங்கள் கண்குளிர பார்க்க வேண்டும். அதுதான் எங்கள் மம்மிஜியை கொன்ற உனக்கு சரியான தண்டனையாக இருக்கும்.

    • Anandan - chennai,இந்தியா

      கைப்புள்ள, இப்படி சட்டத்தை வலைக்கு பெண்மணியை கூடவே வைத்திருந்த உங்க அம்மாஜி எப்படி பட்டவராய் இருந்து இருப்பார்?

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், சசிக்கு கிடைத்த சலுகைகளில் ஒன்று அல்லது இரண்டு ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்கு கிடைத்து இருந்தால் மத்திய அரசும், உச்ச நிதி மன்றமும் என்ன குதி, குதித்து இருக்கும்? எதெற்கு எடுத்தாலும் ஊளை இடும் திருநாவுக்கரசு இந்த விஷயத்தில் பொத்தி கொண்டது ஏன்?

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    உச்ச நிதி மன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்பதனால்தான் ராஜிவ் கொலை குற்றிவாலைகளுக்கு 25 ஆண்டுகள் தாண்டியும் பரோல் கிடைக்கவில்லை - வயதான, உடல்நிலை பாதிக்கப்பட்ட பெற்றோர்களை பார்க்க கூட? உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசி ஜெயிலிலேயே இந்த ஆட்டம் போடுகிறாளே, உச்ச நீதிமன்றமோ, இல்லை மத்திய அரசோ தலையிட்டு, லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிக்கு கூடுதல் தண்டனை கொடுக்க கூடாதா? எந்த ஜாமீனும், பரோலும் இல்லாமல் சசி எப்படி பல தடவை ஜெயிலுக்கு வெளியில் சென்று வந்தார்? லஞ்சம் வாங்கிய தத்துவுக்கும், குமாரசாமிக்கு எந்த தண்டனையும் கிடையாதா?

  • SaiBaba - Chennai,இந்தியா

    இப்போ எப்படி, வாங்கின ரெண்டு கோடியை சத்திய நாராயணா சசிகலாவுக்கு திருப்பிக்கொடுத்திடுவாரா? அந்த transaction புரியலையே.

    • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

      பாபா நீங்க ரொம்ப வெகுளியா இருக்கேங்கங்களே..... முதலை வாயில் போனது திருபவராது..... இப்போ இந்த கேஸ் ஊடகங்களில் சூடா இருக்கு.... வேறு பரபரப்பு வந்ததும் இது மறந்துவிடும்..... புது முதலை வரும்,,,,, ஊட்டப்படும்..... 5 ஸ்டார் ஹோட்டல் ரூம் திரும்ப கிடைத்துவிடும்.... எந்த ஆட்சி இருந்தாலும்.... காசு எல்லா வேலையையும் செய்யும்..... காசு மற்றும் அரசியல் பலம் இருந்தால் இந்தியா சொர்கத்திற்கு சமம்....

    • ravichandran - Hosur,இந்தியா

      2 கோடி புது நோட்டா, பழைய நோட்டா,ஏன்னா புது நோட்டு ஒரு இடத்துல இருந்த கண்டுபுடிச்சிரலாம்னு சொன்னாங்க

  • SaiBaba - Chennai,இந்தியா

    இறையன்பு என்கிற IAS ஆஃபீசர், காஞ்சீபுரம் ஆட்சியராக 1990-களில் இருந்தார். மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் செய்தார். நல்லது செய்த காரணத்திற்காக ஒரு உருப்படாத துறைக்கு மாற்றப்பட்டார். இன்று வரை அந்த துறையில் தான் இருக்கிறார். மெலிந்து நலிந்து தான் இருக்கிறார். அவர் கட்டிய காஞ்சீபுரம் பேருந்து நிலையம் 1990 பிறகு அப்படியே இருக்கிறது. அதற்கு பிறகு ஒருவரும் எடுத்து ஒன்றும் செய்யவில்லை.

  • SaiBaba - Chennai,இந்தியா

    முனைப்புடனும், துடிப்புடனும் நேர்மையுடனும் செயல்படக்கூடிய அதிகாரிகளை ஒன்றுக்கும் இல்லாமல் ஆக்கும் அரசியல் சாக்கடைகளை என்னதான் செய்வது. மக்களே - ரூபா நேர்மையாக இருந்த ஒரே ஒரு குற்றத்தை மட்டும் தான் செய்திருக்கிறார். அவருடைய நேர்மைக்கு பரிசு இதுவல்ல, பா ஜ க உண்மையிலேயே மக்கள் நலம் காக்கும் கட்சி என்றால் ரூபா விஷயத்தில் தலையிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். ரூபா தண்டனை அனுபவிப்பாரேயானால் எல்லா அதிகாரிகளும் நேர்மையாக இருக்க பயப்படுவார்கள்.

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    இரண்டு கோடிகள் வாங்கிய சத்தியநாராயணா பிடிபட்டு விட்டார். ஐநூறு கோடிகளுக்கு மேல் வாங்கியுள்ள தத்துவும், குமாரசாமியும் தப்பி விட்டார்களே, அவர்கள் நிதிபதிகள் என்பதாலா? சத்யநாராயண மாதிரி இருவரும் ஓய்வு பெரும் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை கையாண்டார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட் ஏன் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டேன் என்கிறது? நீதி தேவதையின் கண் கட்டை ஏன் அவிழ்த்துவிட்டார்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement