Advertisement

உப்பு உற்பத்திக்கு கடல் நீர் எடுக்கும் பணி தாமதம்:இரு குழாய்கள் பதிக்கப்படாமல் இழுத்தடிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் அரசு உப்புக்கழகத்தின் உப்பு உற்பத்திக்காக கடல் நீரை எடுக்கும் திட்டம் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 குழாய்கள் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரு குழாய்கள் பதிப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. வாலி நோக்கம் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக அரசு உப்புக்கழகம் நிறுவப்பட்டு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உப்பு உற்பத்திக்கான தண்ணீர் கடலில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு பம்பிங் செய்து நிலங்களில் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 8 கி.மீ., தொலைவிற்கு 5,504.12 ஏக்கர் நிலங்களுக்கு கடல் நீர் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
4.5 கோடியில் திட்டம்: வாலி நோக்கம் பகுதியில் அரசு உப்புக்கழக அலுவலகம் அருகே சேனங்குறிச்சி பகுதியில் இந்த உப்பு உற்பத்திக்கான கடலநீரை பம்பிங் செய்யும் இடம் அமைந்துள்ளது. கடலுக்கும் 300 மீட்டர் வரை உப்பு அரிக்காமல் இருக்க பைபர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆறு குழாய்கள் பதிக்க வேண்டும். தற்போது நான்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
8 கி.மீ., பயன்பாடு: இங்கிருந்து பம்ப்செய்யப்படும் கடல் நீரானது எட்டு கி.மீ., பரப்பளவில் உள்ள அரசு உப்புக்கழக நிலங்களில் பாய்ச்சப்படுகிறது. அதிலிருந்து உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தாமதம்: 4.50 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இது வரை இரண்டு குழாய்கள் பதிக்கப்படாத நிலையில் இயங்கி வருகிறது. ஆறு குழாய்களில் இருந்து கடலில் தண்ணீர் எடுத்தால் மட்டுமே முழுமையாக இங்குள்ள நிலங்களில் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி செய்ய முடியும். தற்போது குறைவான நிலங்களில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதலாக பதிக்கப்பட வேண்டிய இரு குழாய்களை பதித்து, முழுமையாக உப்பு உற்பத்தியினை செய்ய முன் வரவேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement