Advertisement

உள்ளாட்சி தேர்தல்; விவாதிக்க பா.ஜ., செயற்குழு முடிவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஜூலை 29, 30 தேதிகளில் நடக்கும் பா.ஜ., மாநில செயற்குழுவில், உள்ளாட்சி தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது.
முழு நேர கட்சி பணியாக, 15 நாட்களாக மாநிலம் முழுவதும் பா.ஜ., நிர்வாகிகள்
ஆறாயிரம் பேர் தீவிர உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை முடித்த கையுடன், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த மேலிடம் உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில் தள்ளிபோகும் உள்ளாட்சி தேர்தலை நடத்த, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை எதிர்கொள்ளவும் மாநில தலைமைக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் தேசிய தலைவர்கள், மத்தியமைச்சர்கள் செல்லுமிடங்களில், கட்சி உறுப்பினர் சேர்ப்பு பணியில் ஈடுபடுவதுடன், ஏழை குடிசைகளுக்கு சென்று உணவருந்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.காரைக்குடியில் வரும் 29, 30 ல் நடக்கும் செயற்குழு கூட்டத்தில், மேலிட பார்வையாளர் முரளிதரராவ், அகில இந்திய இணை அமைப்பு செயலாளர் சந்தோஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தேர்தல் வந்தால் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் என மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement