Advertisement

அடுத்த நடவடிக்கைக்கு தயாராகும் வருமான வரித்துறை; தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு சிக்கல்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வங்கிகளில் அதிக தொகையை, 'டிபாசிட்' செய்த, தமிழகத்தை சேர்ந்த, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
நாட்டில் உள்ள கறுப்புப்பணம் மற்றும் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர, 2016 நவ., 8ல், 5௦௦, 1,௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை, பலர் வேறு வழியின்றி வங்கிகளில், 'டிபாசிட்' செய்தனர்.

திரட்டிய வங்கிகள்சிலர், வருமான வரித்துறை தங்களை கண்காணிக்கலாம் என்ற சந்தேகத்தில், உறவினர்கள் அல்லது வேறு நபர்களின் வங்கி கணக்குகளில், டிபாசிட் செய்தனர். இதையடுத்து, நீண்ட நாட்களாக பணம் எதுவும் டிபாசிட் செய்யப்படாமல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, திடீர் பணப்புழக்கம் அதிகரித்த வங்கிக் கணக்குகள்; அதிக தொகை, டிபாசிட்டான வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, வருமான வரித்துறை சேகரித்தது.
அந்த தகவல்களை திரட்டிய வங்கிகள், எஸ்.எப்.டி., எனப்படும், நிதி விவரங்கள் தொடர்பான அறிக்கையை, வருமான வரித்துறைக்கு அனுப்பின.
அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, 2016, நவ., - டிச., மாதங்களில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்த, 18 லட்சம்பேருக்கு, வருமான வரித்துறை விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரி தாக்கல் செய்வோருக்கு, இ - மெயில் மற்றும் அலைபேசி எஸ்.எம்.எஸ்., மூலமாகவும்; கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டன. அதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஆன்லைனில், கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, 5.50 லட்சம் பேரிடம், வருமான வரித்துறை, விளக்கம் கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், தகவல் அனுப்பியுள்ளது. இதில், தமிழகத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகம் முதலிடம்...இது குறித்து, தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் தான், வருமான வரி ஏய்ப்பு அதிகம் நடந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுஅறிவிப்பின் போது, இங்கு, 1,300 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழும், 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, வங்கிகளில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்தவர்களுக்கு, டில்லி தலைமையகத்தில் இருந்து, இ - மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலமாக, விளக்கம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய ஆலோசனைசென்னை, நுங்கம்பாக்கத்தில், வருமான வரி தலைமை அலுவலகமான ஆயக்கர் பவனில், தமிழக - புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஹர்லால் நாயக் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதில், தமிழகத்தில், 25 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது தொடர்பாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பாகவும், எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பழைய காரை வித்து நாலு லட்சம் வாங்கி ஐ ஐ டி பீஸ் கட்டினேன். அந்த நாலு லட்சத்துக்கு கணக்கு கேட்டா எங்கே போவேன் என்கிறார் நண்பர். பழைய கார் சம்பந்தப்பட்ட எதுவுமே கையில் இல்லையாம்.

 • john - chennai,இந்தியா

  I T Slaves, do your job honestly, instead of instruction from present government.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இதையேதான் ஆறுமாசமா சொல்றேங்க கடைசி வரைக்கும் பாம்பை வெளியில விட மாட்ரீங்களேய்யா. உங்க சிக்கலுக்கு மலச்சிக்கல் தேவலாம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  திருந்துவதற்கு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கையும், கணக்கு கட்ட மாற்றி அமைக்கப்பட்ட தேதிகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இதிலும் திருந்தாத ஜென்மங்களுக்கு சோதனை தான் அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

 • Pillai - Lagos,நைஜீரியா

  இதில் ஒரு அரசியல்வாதி கூட சிக்கவில்லை ஏன் என்று புதிராக உள்ளது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஆஹா சிக்கிட்டாங்கடா 25 பேர் என்று ஆபத் தனமாக சந்தோஷப்படவே ஒரு கும்பல் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டுமானால் இது செய்தி மத்தபடி இது ஒரு டுபாக்கூர் நாடகம், கேவலமாக அரங்கேறுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் பிடிக்கிற கட்டுக் கட்டண ரூபா நோட்டுகள் அல்லது அதைக் கொண்டு வந்த வாகனங்களின் உரிமையாளர்கள் எல்லாம் வெளியே சுத்திகிட்டு இருக்கான், இனி அடுத்த நடவடிக்கையாம்.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  பி ஜெ பி அரசின் இந்த வகையான நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தி வரியை முடிந்தவரை வசூலிப்பது சிரமமான வேலை தான்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஏமாற்றுவோர் தண்டிக்கப்பட வேண்டும் கண்டிப்பாக. அதனால் கிடைக்கக்கூடிய பலன் யாருக்கு போய்சேருகிறது. சாமான்ய மக்களுக்கு இல்லையே. தக்காளியும், சின்ன வெங்காயமும் கிலோ நூறு ரூபாய்க்கு மேல்.

 • rajan - kerala,இந்தியா

  என்னய்யா நீங்க வேற பெருசா படம் போடுறீங்க. எங்க சின்னத்தாயி வச்சு விளையாடுற எல்லாருக்கும் தெரிந்த இந்த கள்ள பணத்தை புடுங்க உங்களுக்கு துப்பில்லை. அந்த மன்னார்குடி மாபியா சிறைக்கு வர்றவன் போறவனெல்லாத்தையும் விட்டு பணத்தால் விளாசுற. போங்கய்யா போங்க போய் இருக்கிற முதலைகளை புடிப்பீங்களா அதை விட்டு விட்டு எலிய புடிக்க அலையுறீங்களே. உருப்படியா ஏதாச்சும் பண்ணுங்க.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாவ்... முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு காப்பிட்டு உள்ளே வைக்க வேண்டும்... பெனாமி சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்... சொத்துக்கள் எப்படி வாங்கினார்கள் என்று கணக்குக்காட்ட முடியவில்லை என்றால் திருடி சேர்த்ததாக கருதி உள்ளே வைப்பதே நேர்மையானவர்களை பாராட்டும் முறை...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  முந்திரிகள், எம் எல் ஏக்கள், கவுன்சிலர்கல் மட்டும் விசாரித்தால் 60 சதவிகித கள்ளப்பணம் வெளியே வந்து விடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement