Advertisement

பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு; கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை

முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், அவர் தொடர்பான செய்திகளும், முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள், அவர் தொடர்பான செய்திகளும் வெளியாகின.

ஒதுக்கி வைப்பதாகஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டது, முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தினகரனை கட்சியில் இருந்து, ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். பின், சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி,தினகரன் அணி என, பிளவுபட்டது. தினகரனை, 35 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.

தினகரனுக்கு எரிச்சல்அவர்களில் பெரும்பாலானவர்களை, பழனிசாமி அணியினர், தற்போது தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் முழுமையாக, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

'முன்னாள் முதல்வர் பன்னீர் அணியும், சசிகலா அணியும் ஆக., 5க்குள் இணைய வேண்டும். இல்லையேல், என் பணியை துவக்குவேன்' என, ஏற்கனவே தினகரன் கூறி உள்ளார். இந்நிலையில், தன் ஆதரவாளர்களை, பழனிசாமி அணியினர்இழுத்து வருவது, தினகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவரது ஆதரவாளர்கள் சிலர், சட்டசபையில் அரசுக்கு எதிராக, சில கருத்துக்களை கூறினர்.

இது, பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளிதழில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான செய்தி மற்றும் படம் எதுவும் இடம் பெறவில்லை.
முதல் பக்கத்தில், ஜனாதிபதி தேர்தல் மற்றும், 'சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், கர்நாடக, டி.ஐ.ஜி., ரூபா மீது, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்' என, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வெளியானது. இதன் மூலம், பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான, மோதல் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (25)

 • Balaji - Khaithan,குவைத்

  இந்த செய்தியே தினம் தினம் வருவதால் மக்கள் இதுபோன்ற செய்திகளை கண்டுகொள்வதே இல்லை........ அந்தளவுக்கு வெறுத்துவிட்டார்கள்.........

 • krishna - cbe,இந்தியா

  கட்சி அழிவு பாதையில் போய் கொண்டு இருக்கிறது.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  அண்ணா தி மு க வை காப்பாற்றும் சக்தி தினகரனுக்குத்தான் உண்டு.. இரட்டை இலை சினத்துக்காக சிறை சென்ற ஒரு கட்சி விசுவாசி. பிஜேபி நடவடிக்கைகளால் பழனிசாமி ஆமாபோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். MGR ஆல் உருவாக்கப்பட்டு அம்மா வால் வளர்க்கப்பட்ட அண்ணா தி மு க பிஜேபி இன் அரசியல் தந்திரத்தால் உடைந்துபோய் உள்ளது .இக்கட்சி தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால் ஒன்றுபட்டு தினகரனின் தலைமை ஏற்கவேண்டும்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை..இந்த மோடி என்ன செய்கிறார். ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் யாருக்காவது ஆப்பு அடிப்பாரா.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  கதை வசனம் யார்? திரு நடராஜன் அவர்களா?

 • narayanan iyer - chennai,இந்தியா

  அன்பான வாசர்களே தயவுசெய்து இந்த நாலாந்தர மனிதர்களின் செய்திகளை உள்வாங்கி படிக்கவேண்டாம் . இவர்களெல்லாம் மனித இனத்தையோ அவர்களைச்சார்ந்த பண்புகளையோ கொண்டவர்கள் இல்லை .

 • krishna - chennai,இந்தியா

  சசி தினகரன் EPS OPS போன்ற தலைவர்கள்தான் பணமும் சாராயமும் வாங்கி வோட்டு போட்ட தமிழனுக்கு கிடைக்கும்.இல்லை என்றால் மீண்டும் ஸ்டாலின் என்ற கொள்ளை கூட்டம் வரும். தமிழகத்தின் சாப கேடு கருணாநிதி ஜெயா என்ற ஈன பிறவிகள். ஜெயா என்ற கொள்ளை கூட தலைவியின் சாதனை மன்னார்குடி மாபியாவை உண்டாக்கியதுதான்.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  எப்படா கட்டி புடிச்சி உருளுவீங்க...?...

 • karthikeyan -

  இவர்களுக்கு என்ன மானம். அப்புறம் மான நஷ்டம் எங்கிருந்து வந்தது?

 • Stalin - Kovilpatti,இந்தியா

  இவனுக சண்டைதான் இப்ப பிரச்சனையா கருமம் பிடிச்சவனுக கொள்ளையடித்த பணத்தை வைத்து வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் எரும கிடா மாதிரி படுத்துறாங்கங்க

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  OPS அணி, EPS அணி, தீபா அணி, தினகரன் அணி...இப்பவே நாலு. இவங்க நாலு பேரும் ஒண்ணா சேர்ந்து ரெட்டை இலை கூட நின்னாலே இப்ப தேறாது. இதுல இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல 7–8 அணி ஆகிடும் - அப்புறம் யாரு இதையெல்லாம் ஓட்டுறது? அதிமுக அவ்வளவுதான் போல.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இந்த டிராமா இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்.

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  எங்கே தம்பிதுரை? 'கட்சியில் பிளவு இல்லை. நாங்கள் ஒற்றுமையாக, சகோதரர்களாகத்தான் இருக்கிறோம்', என்று அறிக்கை எதையும் காணோம்?

 • ramesh - chennai,இந்தியா

  சீக்கிரமாக சண்டையைபோட்டு ஆட்சியை கவிழுங்கள் .நாட்டில் நீங்கள் செயும் நன்மை அது ஒன்றாகவாது இருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் காசு பங்கு பிரிப்புதான்...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மீண்டும் மீண்டும் இதையே எழுதி ..........ஒரு பிரயோஜனமும் இல்லை. விரல்களின் ஜாலம், வித்தையின் மூலம் பொம்மைகள் ஆட்டம். ஆனால் சூதுவாதுள்ள உயிருள்ள பொம்மைகள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இது என்ன தமிழகத்தில் எல்லோரும் படிக்கும் பத்திரிக்கையா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அப்போ டாக்டர் நமது எம்ஜியாரை தினமும் அதிமுக தொண்டர் படிக்கிறான் என்கிறீர்களா?

 • rajan - kerala,இந்தியா

  இந்த புகழேந்தி தான் சின்னத்தாயிக்கு பெரிய கூஜா-செம்பு வேலை செய்பவன். முதலில் இவனை தூக்கி அடிச்சு நொங்கு எடுங்க. லஞ்சம் எங்கெல்லாம் யார் மூலம் எல்லாம் கொடுத்தான் எனும் வண்டவாளம். வெளி வரும். எல்லாத்துக்கும் முன்னாடி வந்து இவன் ஊத்துற சங்கு இருக்கே ரொம்ப பெருசு. இவனும் இந்த லஞ்சத்தில காசு பார்த்திருப்பனல்ல.

 • manivannan - chennai,இந்தியா

  டி ஐ ஜி மேல் இவங்க வழக்கு தொடர்வாங்கலாமா, :>) தொடரட்டும், ஒரே வழியாக எல்லாவற்றிற்கும் முடிவு வரப்போகிறது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement