Advertisement

காரைக்குடியில் பா.ஜ., செயற்குழு

மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கும், பா.ஜ., மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. முழு நேர கட்சி பணியாக, 15 நாட்களாக, மாநிலம் முழுவதும், பா.ஜ., நிர்வாகிகள், தீவிர உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் சாதனைகளை எடுத்து சொல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை முடித்த கையுடன், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தலை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை எதிர்கொள்ளவும் மாநில தலைமைக்கு, மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. காரைக்குடியில் வரும், 29, 30ல் நடக்கும் செயற்குழு கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement