Advertisement

எம்.எல்.ஏ.,க்களுக்கு தடபுடல் விருந்து

சென்னை: ஜனாதிபதி தேர்தலில், ஓட்டளிக்க வந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க, எம்.எல்.ஏ.,க்களை முறைப்படி அழைத்து வரும் பொறுப்பு, அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் மற்றும் ஓ.எஸ்.மணியனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. இவர்கள், சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்களை, காலையிலேயே அழைத்து வந்து ஓட்டளிக்க வைத்தனர்; அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்தனர். அசைவ பிரியர்களுக்கு, பிரியாணி, 'சிக்கன் 65' என, அசைவ உணவு வழங்கப்பட்டது. சைவம் சாப்பிடுவோருக்கு, அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களும் ஆர்வமுடன், உணவருந்தி விட்டு புறப்பட்டு சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • manasakshi - chennai,இந்தியா

    எவ்ளோ இவ்வளவு பெரிய வோட்டு போட்டு இருக்காங்க நம்ம ஆளுங்க. வெறும் சாப்பாடு மட்டும் தானா. கை செலவுக்கு ஒன்னும் இல்லியா. என்ன அநியாயமா இருக்கு

  • karunchilai - vallam,இந்தியா

    சோறு கண்ட இடம் சொர்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement