Advertisement

முதல்வரை தகுதியிழப்பு செய்ய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை, தகுதியிழப்பு செய்ய நடவடிக்கை கோரிய வழக்கை, தீர்ப்பிற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
ஸ்ரீவில்லிபுத்துார், அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., தாமரைக்கனியின் மகன் ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், சசிகலாவை, பெங்களூரு சிறையில் சந்தித்தனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இவர்கள் பதவியேற்கும் போது, அரசியலமைப்பு சட்டத்தின்படி, ரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கின்றனர். முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களின் செயல், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது.
முதல்வர், நான்கு அமைச்சர்களை, அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யக் கோரி, சட்டசபை சபாநாயகர், செயலருக்கு மனு அனுப்பினேன். தமிழக கவர்னர் நடவடிக்கை எடுக்கும் வகையில், அவருக்கு மனுவை அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் பெஞ்ச், 'இம்மனு நிலைநிற்கத் தக்கதுதானா என்பதை முடிவு செய்யும் வகையில், தீர்ப்பிற்காக, ஆக., 1க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    ஜெயலலிதா இதே பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த போது அமைச்சர்கள், சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என பாகுபாடின்றி அனைவரும் சென்று சந்தித்தீர்களே அப்போது அரசியலமைப்பு சட்டம் மீறப்படவில்லையா? ரகசிய காப்பு பிரமாண சம்பிரதாயங்கள் மீறப்படவில்லையா? அப்போதெல்லாம் வேறு காரணங்களுக்காக அமைதி காத்து விட்டு இன்று ரோஷப்படுவது ஏன்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement