Advertisement

துணை ஜனாதிபதி தேர்தலிலும் மேட்டூர் பத்மராஜன் வேட்புமனு

மேட்டூர்: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, மேட்டூரைச் சேர்ந்த, பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, இரட்டை புளியமரத்துாரைச் சேர்ந்தவர் பத்மராஜன், 58. இவர், 1988ல், முதன்முறையாக, மேட்டூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 29 ஆண்டுகளாக உள்ளாட்சி முதல், ஜனாதிபதி தேர்தல் வரையிலும் போட்டியிட, 179 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு, ஜூன், 15ல், 180வது முறையாக பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று, டில்லியில், பத்மராஜன், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, 181வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • Gnani - Casabalanca,மொராக்கோ

    இதில் செலவு செய்யும் காசுக்கு ஒரு அன்னதானமோ அல்லது தண்ணீர் பந்தலோ அமைக்கலாம். இது போல் பெயருக்கு அலைவதை விட புண்ணியம் சேர்க்கலாம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    செய்யப் போற ரப்பர் ஸ்டாம்ப் வேலைக்கு என்ன தகுதி வெங்காயம் தேவையிருக்கு?

  • Stalin - Kovilpatti,இந்தியா

    இவருக்கு ஓட்டளியுங்கள் கூவத்தூர் கோமான்களே

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சுய விளம்பர பிரியரா...?

  • K.Sugavanam - Salem,இந்தியா

    கின்னஸ் சாதனை போல..Also ran ..

  • RENU - Redmond,யூ.எஸ்.ஏ

    அன்புமணியும் கலைஞரும் இவருக்கு ஓட்டு போடலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement