Advertisement

தொலைநோக்கு திட்டம் - 2023 அ.தி.மு.க., தொலைத்து விட்டது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : 'தொலைநோக்கு திட்டம் - 2023ஐ, அ.தி.மு.க., தொலைத்து விட்டது; கைவிட்டு விட்டது' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியில், மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்து விட்டது. தொழில் வர்த்தக சபைகளும், உலக வங்கி அறிக்கைகளும், தமிழக தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சியை படம் பிடித்துக் காட்டினாலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

ஞானோதயம் பிறக்கவில்லை.நிடி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, 'தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது' என, மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதைக் கேட்ட பின், இந்த அரசுக்கு ஞானோதயம் பிறக்கவில்லை.
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, இது குறித்து பேசிய போதும், தொழில் துறை அமைச்சர், மின் துறை அமைச்சர் போன்றவர்கள், தமிழகதொழில் வளர்ச்சியின் பரிதாப நிலையை உணரவில்லை. இந்த அரசு தடபுடலாக அறிவித்த, தொலைநோக்கு திட்டம்- - 2023ஐ தொலைத்து விட்டது; கைவிட்டு விட்டது.

பின்தங்கி இருப்பது வேதனைகர்நாடகா, ஆந்திராவை விட அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் பின்தங்கி இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகம் என்ற மதிப்பு மிக்க நாணயம், இன்றைக்கு ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமலும், மற்றொரு புறம் பொருளாதார வளர்ச்சி இல்லாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (28)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஸ்டாலின் பற்றி செய்தி வந்தால் அங்கே வந்து ஸ்டாலினை திட்டுவதாக நினைத்துக் கொண்டு அதிமுகவுக்கு லாவணி எழுதுவார்கள். அதிமுக பத்தி எய்தி வந்தா அங்கே போய் அதிமுக வை திட்ட துணிச்சலோ த்ராணியோ கிடையாதென்பதால் அங்கேயும் திமுக வை திட்டுவார்கள். அவங்களுக்கும் வேற பொழப்பில்லே உங்களுக்கும் வேற பொழப்பில்லாம ரெண்டு சாப்பிடும் இம்சை. அடுத்த தேர்தலில் ரெட்டை இலையில் எவன் நின்னாலும் அவனுக்கு குத்தப் போறான் தமிழன். அதுக்குள்ளே கொஞ்ச நாள் அரசியல் பேசறதா ஏதானும் எழுதிக்கட்டும்

 • krishna - cbe,இந்தியா

  அதிமுக கட்சியே தொலைந்து விட்டது.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இப்போது திமுகவும் தொலைந்து விட்டது அதிமுகவும் தொலைந்து விட்டது ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • A shanmugam - VELLORE,இந்தியா

  தீ மூ கா ஆட்சி காலத்தில் தொலை நோக்கு திட்டம் என்று எதாவது வகுக்கப்பட்டதா? லஞ்சத்தை ஈட்டும் திட்டமாகத்தான் ஆறு முறை உங்க தகப்பனார் ஆட்சி காலத்தில் நிகழ்ந்து என்று தமிழ் நாட்டில் எவரேனும் மறுக்க முடியும்மா?

 • Balaji - Khaithan,குவைத்

  ////'தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது'///// இந்த வாக்கியம் சரிதானா என்று யோசித்தால் அவர் சொல்லியிருப்பது தவறாகவே பொருள் வருகிறது........ சூழல் இல்லாத மாநிலம் என்ற பட்டியலில் உண்மையில் கடைசியில் தான் இருக்க வேண்டும் முதலில் இருந்தால் தான் எதிர்மறை பொருள் வரும்...... தமிழகம் இந்த பட்டியலில் கடைசியில் இருக்க வாய்ப்பே இல்லை.... இவர் சொன்ன விதம் தவறாக இருக்கிறது.. பொறுப்பாக பேசுவது போல தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொண்டு பேசுங்கள் செயல்..........

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  உங்கப்பன் எப்போ ஆட்சியை பிடிச்சானோ அப்பவே தமிழகத்து அழிவு ஆரம்பமாகிவிட்டது. மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மட்டுமல்ல எல்லா வகையிலும் அழிவுக்கு வழிவகுத்தது உங்கப்பன். இல்லையென்று உன்னால சொல்லமுடியுமா சுடலை. அதில் உனக்கும் உன் குடும்பத்துக்கும் கட்சிக்காரர்களுக்கு தொடர்பே இல்லைன்னு உன்னால சொல்லமுடியுமா சுடலை. இலவு காத்த கிளி நீ.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  திராவிட ஆட்சியில் தமிழகம் மிக பெரும் வளர்ச்சியை அடைந்து தொழில் துறையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில உள்ளது .. இந்தியாவின் தொழிற்சாலைகளில் மொத்தம் 16 சதவீதம் தமிழகத்திலேயே உள்ளது .. அது கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதா ஆக இருந்தாலும் சரி தொழிற்துறை நன்றாகவே வளர்ந்துள்ளது .. ஆனால் இது 2013 வரை மட்டுமே நடந்தது . ஜெயலலிதா என்று சிறை சென்றாரோ அன்று முதல் இன்று அவர் இறப்பின் பின்னாடி தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .. சிறை சென்ற பிறகு ஜெயலலிதா உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தார் .. 2016 தேர்தல் பிரச்சாரமே மிகவும் வருத்திக்கொண்டு தான் செய்தார் .. தமிழகத்தின் துரதிரிஷ்டம் 2016 அதிமுக வெற்றி .. திமுக வென்று இருந்தால் ஒரு நிலையான ஆட்சியாவது கிடைச்சிருக்கும்.. இதை தான் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .. அதை புரிந்து கொள்ளாம சுடலை விடலை என்று காழ்புணர்ச்சியில் கொந்தளிக்கும் பக்தாளை என்ன சொல்வது.. நீங்க தான் போட்டிலேயே இல்லையே அப்புறம் ஏன் வண்டீல ஏறுறீங்க ??

 • sundaram - Kuwait,குவைத்

  2023 தொலை நோக்கு திட்டம் அறிமுகப்படுத்திய போதே அதை தீவிரமாக எதிர்த்தவர்களுக்கு அந்த திட்டம் செயல்படாதது சந்தோஷத்தைத்தானே கொடுத்திருக்கணும்? வருத்தப்படுவானேன்.

 • Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா

  தமிழ் நாட்டை மொத்தமும் குடும்பத்திற்கு பட்டா போடும் திட்டம் எதுவும் ..........வாரிசு தலைவர் எந்த திட்டத்தை பற்றி பேசுகிறார் என்பதை விவரமாக தெரிவிக்க வேண்டும் .

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  செயல் படாத ஆட்சி என்று தினமும் சொல்லி புலம்பும் உமக்கு ஒன்று தகவல் சொல்கிறேன். செயல் படாத ஒருவருக்கு அரசாங்க சம்பளமும் இந்த ஆட்சியில் தான் தந்து கொண்டு இருக்கிறார்கள் இப்ப சொல்லுங்க இந்த ஆட்சி செயல் படுதா இல்லையா

 • rajan - kerala,இந்தியா

  தமிழகத்தையே உங்க திராவிட கட்சிகளிடம் தொலைத்து விட்டு அவனவன் வாயாலும்- வயிற்றாலும் அடிச்சுகிறான் இப்போ போய் நம்ம சுடலை இப்படி ஜோக் பண்ணுறார். வோணாம்பா பூடு இங்கிருந்து.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியில், மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்து விட்டது. தவறு மு க காலத்தில் இருந்தே நீங்கள் கேட்க்கும் பகடியால் தொழில் முகவர்கள் யாரும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருவதில்லை... அவருடைய காலம் முதல் இன்று வரை அதுவே தொடர்கிறது... எந்த ஒரு பாமரனும் தொழில் சாலை தொடங்குவது தமிழ்நாட்டில் இயலாத காரியம்... திராவிடம் மாறினால் தான் தொழில்சாலைகள் வர வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்...

 • sankar - Nellai,இந்தியா

  தம்பி சொடலை - வெளியூருக்கு போயி பாத்துட்டு வா - தமிழ்நாடு தான் நம்பர் ஒன்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நூறு சதவீத சுயல்மிக்கவர்களாக இன்றைய அதிமுக எம் எல் ஏக்கள், எம் பிக்கள் இருப்பதால் தமிழகத்துக்கு இவ்வளவு பின்னடைவு. மக்களுக்கு இருக்கும் அசிரத்தை அப்படியே இவர்களிடமும் ஒட்டிக் கொண்டிருப்பதால் பதவியை தக்க வைத்துக்கொள்ள இதைத்தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத்தில் இதுவரை கண்டு வந்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குந்தகம் விளைவிக்கிறார்கள். கொஞ்சம் மாற்றி யோசிங்கப்பா.....நீங்களும் நல்லா இருக்கலாம், நம்ம மக்களும் நல்லா இருக்கலாம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதிமுக பார்வையற்றது... ஆனால் திமுக தொலைநோக்கு பார்வை அற்றது... ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை...

 • Manian - Chennai,இந்தியா

  யோவ், அவ்ளோ நாளு சைனாவோட சண்டை வந்தா துண்டைக்காணோம், துணியை காணோம், லஞ்சப்பணத்தை செல்லாத நோடடுன்னா, இருக்கற அமெரிக்க டாலர்,பிரிடன் பவுண்டெல்லாம் வருமானவரி கெட்டாம, யாரு மாத்தி தருவாங்கன்னு தேடிகிட்டிருக்கும்போது 2030 பத்தி நெனைக்க நேரம் ஏது தம்பி தொளபதி?நீங்கன்னா, சபரீசுகூட கள்ளத்தோணிலே சிலோன் பக்கமா சிங்கபூர் பினாமி பங்களாலே தங்கிகிடலாம் . நாங்க இப்பத்தானே அங்கிட்டு எடம் தேடி அலையுதோம்

 • SaiBaba - Chennai,இந்தியா

  நன்றாக தேடி பார்க்க சொல்லுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement