Advertisement

லாலு பிரசாத்துடன் மோதல் எதிரொலி; சோனியாவிடம் நிதிஷ் ஆலோசனை

பாட்னா: பீஹாரில், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, துணை முதல்வர் தேஜஸ்விக்கு எதிராக, ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., தலைவர் சோனியாவிடம், நிதிஷ் ஆலோசனை கேட்டுள்ளார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவின் மகன், தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

சி.பி.ஐ., வழக்கு பதிவுலாலு பிரசாத் யாதவ், 2004 - 2009ல், இந்த நிலம், ரயில்வே அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல்கள் செய்து, பாட்னாவில், 3 ஏக்கர் நிலம் வாங்கியதாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. துணை முதல்வர் தேஜஸ்வி மற்றும் அவர் குடும்பத்தினரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேஜஸ்விக்கு ஊழலில் தொடர்பு உள்ளதாகவும், சி.பி.ஐ., குற்றம் சாட்டி உள்ளது.
இந்த குற்றச்சாட்டு, பீஹாரில் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, துணை முதல்வர் பதவியை, தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என, முதல்வர் நிதிஷ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், சட்டசபையில், தங்களுக்கு கூடுதல் இடங்கள் உள்ளதால், தேஜஸ்வி, ராஜினாமா செய்யத் தேவையில்லை என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் கூறி
வருகின்றனர்.

பிரச்னைக்குகாரணம்கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரம் நீடித்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மெகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, காங்., தலைவர் சோனியாவிடம், நிதிஷ் ஆலோசனை கேட்டுள்ளதாக தெரிகிறது. நிதிஷ் தரப்பும், தேஜஸ்வி தரப்பும், தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதே, தற்போதைய பிரச்னைக்கு காரணம் என, காங்., கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, டில்லியில், காங்., தலைவர் சோனியாவை, ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ் சந்தித்து, பீஹார் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்துள்ளார்.
'ஊழல், ஒழிக்க வேண்டிய பிரச்னை; ஊழல்வாதிகள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலரை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், சரத் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ஊழலில் எந்த தேசிய கட்சியை சேர்ந்த தலைவர் எவரும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதே இல்லை என்பதை இதோ பிஜேபியின் தலைவர் நான் இங்கிருக்கிறேன் என்று தெகல்கா ஊழலில் பணம்பெற்று தண்டனை பெற்ற பிஜேபி தேசிய கட்சி தலைவர் பங்காரு.. பிஜேபி கட்சியினருக்கு மட்டும் இது தெரியாது உலகமே கண்டது.. ஆக ஊழல் என்பது எந்த கட்சிக்கும் விதிவிலக்கல்ல.. இந்த ஆட்சி இறங்கியதும் வரும் ஆட்சியாளர்கள் மோடியை கூட பிடித்து திகாரில் அடைப்பார்கள் ஊழல் விசாரணையில் பலதும் வெளிவரும் அப்போதும் பார்க்கலாம்

 • Balaji - Khaithan,குவைத்

  திருடன் என்று இவரை சொல்வதால் அதற்க்கு என்ன செய்யலாம் என்று ஏற்கனவே பலமுறை திருடன் என்று சொல்லப்பட்டவரிடம் கேட்பது மிகவும் சிரிப்பகத்தான் இருக்கிறது.............. நமது நாட்டுக்கு பிடித்த சாபக்கேடு இது...............

 • sachin - madurai,இந்தியா

  பின்புற வாசல் கட்சி என்றால் அது பா ஜ க தான். பாண்டிச்சேரி, தமிழ்நாடு , கோவா,அருணாச்சல பிரதேஷ், பல வடகிழக்கு மாநிலங்கள் லில் .இப்படி பின்புறமாக ஆட்சி செய்யலாம் என்று செய்து கொண்டு இருக்கிறது.

 • sachin - madurai,இந்தியா

  ஊழல் பத்தி பேசும் ப ஜ க ...வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் உள்ளார் என்று வருமானவரித்துறை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் சொல்லி விட்டது இன்னும் மோடி இவரை தாங்கி பிடித்து கொண்டு இருக்கிறார் ..இதில் எங்கு ஊழல் எதிர்ப்பு வருகிறது என்று மோடி தான் சொல்ல வேண்டும் .....

 • p.raj-chennai - chennai,இந்தியா

  சோனியா ஜீ சரியான தீர்ப்பு சொல்வார்கள் ஏனென்றால் அவர்கள் கட்சியில் ஊழல் செய்தவர் யாருமில்லை ................ஹி ஹி ஹி

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  சோனியா மைண்ட் வாய்ஸ்... இவனுங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணறதுக்குள்ள நாம பாடு பெரும் பாடு ஆகிடும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  'ஊழல், ஒழிக்க வேண்டிய பிரச்னை ஊழல்வாதிகள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எல்லாம் சொல்வதோடு சரி... உங்க ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் என்ன நடக்கிறது... பார்த்தீர்களா...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  குறி வைத்த்து தாக்கப்பட்டும் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் லாலு உறுதியாக இருப்பதால் தான் பீகாரில் அரசியல் மாற்றங்கள் இதுவரை நிகழவில்லை. தமிழகத்தில் பணம் கொடுத்து ஒட்டு கேட்டதான புகாரில் முதல்வர் பெயர் இருந்து ஒரு இடைத்தேர்தலே அதனால் நிறுத்தப்பட்டும் தங்கள் எடுபிடியாக இருப்பதாலேயே ஒரு சிறு சலசலப்பைக்கூட காட்டாமல் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பிஜேபி ஊழலைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழல் செய்தாலும் ஒற்றுமையாக ஊழல் செய்வோம் என்றால் CBI க்கு மொத்த கூட்டத்தாயும் சுற்றி வளைக்க வசதியாக இருக்கும்... நிதீஷ் இந்த தருதலைகளுடன் சேர்ந்து தனது பெயரை கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement