Advertisement

விதிமுறைகளின் படியே சஞ்சய் தத் விடுதலை: மகாராஷ்டிரா அரசு

மும்பை: சஞ்சய் தத் விதி முறைகளின்படியே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என மகாராஷ்டிரா அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் , சட்டவிரோதமாக ஏ.கே. 56 துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் த்த, 57 கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட் சிறை தண்டனை விதித்தது. மும்பை ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது பரோலில் வெளிவந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையானார். இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்ய பதில் மனு,
சஞ்சய் தத்த சிறை விதிமுறைகளின்படியே விடுதலை செய்யப்பட்டார் அவர் நன்னடத்தையுடன் இருந்ததற்கான சான்றுகள் சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டன.. இதில் அவர் சிறையில் மொத்தம் 1,570 நாட்கள் இருந்துள்ளார். 256 நாட்கள் பரோலில் அவ்வப்போது வெளியேசென்றுள்ளார். இவ்வாறு அந்த பதில் மனுவில் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  பெங்களூரில் நீங்க என்ன காட்சிங்க, கூழுக்கும் பாடி, மீசைக்கும் பாடி கட்சியா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இது ஃபட்னவிஸ்ஸின் முதல் பெரிய தவறு பாஜகவே வி ஐ பி தீவிரவாதிகளுக்கு இடம்கொடுத்தால் நாட்டுக்கு விடிவுகாலமே இருக்காது

 • sundar - Hong Kong,சீனா

  AK 47 வைத்திருந்தவர் விடுதலை. Battery வைத்திருந்தவர் ஆயுள் கைதி. இது என்ன சட்டம்?

 • Shiva -

  பணம்......

 • a.thirumalai -

  no comments!

 • அப்பாவி -

  கோடம்பாக்கத்துக் கூத்தாடிகளுக்கும், அவங்க கட்சியைச் சேந்தவங்களுக்கும் இவ்ளோ வசதி செஞ்சு குடுக்கறாங்க...சிறையிலே... அது பாலிவுட்....இதுபோல 10 மடங்கு பணம் புரண்டிருக்கும்....வசதியா வச்சு விடுதலையும் செஞ்சுட்டாக...

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  மும்பையில் நடந்த தொடர்வெடிகுண்டு வெடிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகளுக்கும், சதிகாரர்களுக்கும், தனது வீட்டில் இடம் கொடுத்து ,ஏ.கே. 47 . ஏ.கே. 56 போன்ற பயங்கர ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்து பயங்கரவாதிகளுக்கு துணை நின்ற சஞ்சய் தத் 'நன்னடத்தை' காரணமாக மகாராஷ்டிரா பிஜேபி அரசு விடுதலை செய்துள்ளது. அப்பா என்ன தேசபக்தி, ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகளுக்கு உதவிய ஏழு தமிழர்கள் சாகும்வரை சிறையில் வாடவேண்டும். தமிழக நலன்களுக்கு போராடி மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தடுத்து ,மக்களுக்கு உன்னத திட்டங்களை வழங்கி, அதனால் பலவகையில் பழிவாங்கப்பட்ட ,ஜெயலலிதா போன்றோருக்கு மறைந்தாலும் புகழில் மாசு கற்பித்து அவரது திருவுருவ சிலை சட்டமன்ற வளாகத்தில் திறப்பதற்கு தடை போடும் பிஜேபியின் தேசபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   மஹாராஷ்டிரா கான்கிராஸ் அரசு சஞ்சய் தத்துக்கு விடுதலை அளித்தது வெறும் சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக ஆனால் சசிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்துள்ளது கூட்டணிக்கு அச்சாரம் ஆகமொத்தம் தவறானவர்களைத் திட்டுகிறீர்கள் ஜெயாவை உத்தமர் என்று எழுதினால் அவர் அனுதினம் வணங்கிய நரசிம்மரே பொறுத்துக்கொள்ளமாட்டார்

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

   மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர் ஜெயலலிதா .மூன்றாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கி ,வீழ்த்தி ,ஏழை நடுத்தர மக்களை விஷம் போன்ற விலைவாசியில் வாட செய்து ,குஜராத் வியாபாரிகளிடம் கமிஷன் பெற்று சேவகம் செய்யும் வேலையை ஜெயலலிதா செய்யவில்லை.

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

   கடந்த பிப்ரவரி மாதம் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையானார். சஞ்சய் தத்தை விடுதலை செய்தது மகாராஷ்டிரா பிஜேபி அரசு . 10 பேரை காரை ஒட்டிக்கொன்ற சல்மான்கானை விடுதலை செய்ததும் பிஜேபி அரசு . வங்கிக்கு கொடுக்கவேண்டிய 9000 கோடியை ஏமாற்றி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி செல்ல உதவியதும், இதுகாறும் அவரை இந்தியாவிற்கு அழைத்துவர இயலாதது போல் நடிப்பதும் பிஜேபி அரசுதான். பொய்யான வழக்கில் அரசியல் சதி காரணமாக பெங்களூரு சிறையில் வாடும் சசிகலாவிற்கு எதிராக அனைத்து துறைகளையும் ஏவிவிடும் பிஜேபி அரசு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் , லண்டனில் கேளிக்கை நிகழ்ச்சிகள் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் மல்லையாவை சட்டத்தின் முன் நிறுத்த வக்கில்லையா ? இல்லை அவர் தரும் பணம் தடுக்கின்றதா ? இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையானார். இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்ய பதில் மனு, சஞ்சய் தத்த சிறை விதிமுறைகளின்படியே விடுதலை செய்யப்பட்டார் அவர் நன்னடத்தையுடன் இருந்ததற்கான சான்றுகள் சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டன.. இதில் அவர் சிறையில் மொத்தம் 1,570 நாட்கள் இருந்துள்ளார். 256 நாட்கள் பரோலில் அவ்வப்போது வெளியேசென்றுள்ளார். இவ்வாறு அந்த பதில் மனுவில் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இவருக்கு (ஏகே 56 வைத்திருப்பவனை தீவிரவாதி என்று தான் கூற வேண்டும்) கருணை காட்டுவது தவறு.. பிரபலமானவர் என்றால் என்ன வேண்டுமானாலும்​ செய்யலாமா??

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இங்கே பிஜேபி அரசு உள்ளது அவர்கள் கண்டிப்பாக லக்ஷ்மான் ரேகா விதிப்படி தான் கண்டிப்பாக நடந்திருப்பார்கள் இதில் ஜெரோ பெர்ஸன்ட் கூட விதி மீறல் இருக்காது அஃ மார்க் கட்சி பண்டாரங்கள் கட்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement