Advertisement

டீ கடை பெஞ்ச்

எம்.எல்.ஏ.,வை ஓரங்கட்டும் அமைச்சர்!


''கைது நடவடிக்கை தேவையில்லைன்னு மறுத்துட்டாருங்க...'' என, பெஞ்ச் கச்சேரியை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாரு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப, சொத்து வழக்குல, சசிகலாவும், அவங்க உறவினர்களும், பெங்களூரு கோர்ட்ல, தொடர்ந்து ஆஜராகிட்டு இருந்தாங்களே... அப்ப, 'ஜெயலலிதா சிறைக்கு போயிட்டா, முதல்வர் பதவியை நம்ம குடும்பத்தினர் கைப்பத்தணும்'னு, சதி ஆலோசனை நடத்துனாங்க...
''இது, ஜெயலலிதாவுக்கு தெரிய வந்ததும், சசிகலாவை போயஸ் தோட்டத்துல இருந்தே வெளியேத்தினாங்க... அவங்க குடும்ப உறுப்பினர்கள் மேல கைது நடவடிக்கையும்
எடுத்தாங்க...
''அதே மாதிரி, இப்ப, 'அரசுக்கு குடைச்சல் கொடுத்துட்டு இருக்கிற சசிகலா உறவினர்களை, பழைய கேஸ்களை துாசு தட்டி உள்ளே
தள்ளுங்க'ன்னு, முதல்வர் பழனிசாமிகிட்ட, ஒரு, எம்.பி., சொல்லி இருக்காருங்க...
''அவரோ, 'அதெல்லாம் வேண்டாம்... பிள்ளையார் பிடிக்க குரங்கா போயிடும்'னு மறுத்துட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''வாட்ஸ் ஆப் - குரூப் துவங்கியும், பலன் இல்லாம போயிட்டு வே...'' என, அடுத்த மேட்டருக்கு வந்தார் அண்ணாச்சி.
''என்ன விஷயம் பா...'' என்றார் அன்வர் பாய்.''விபத்து, திடீர் மாரடைப்புல இறக்குற போலீசார் குடும்பங்களுக்கு நிதியுதவி பண்றதுக்காக, ஈரோடு மாவட்ட போலீசார், ௨௦௧௫ல, 'நமக்காக நாம்'னு ஒரு, 'வாட்ஸ் ஆப்' குழுவை
ஆரம்பிச்சாவ... ௨,௩௦௦
போலீசார் வேலை பார்க்கிற மாவட்டத்துல, ௨௦௫ பேர் தான், இந்த குழுவுல சேர்ந்தாவ வே...
''போன வருஷம் இறந்த ஒரு ஏட்டு குடும்பத்துக்கு, நிதி வசூல் பண்ணி, ௧ லட்சம் ரூபாய் கொடுத்தாவ... அதுலயும், கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.ஐ., வரையான போலீசார் தான், நிதி கொடுத்தாவ...
''இன்ஸ்பெக்டருக்கு மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஆதரவு இல்லாததால, இந்த திட்டமே முடங்கிட்டு வே...'' என முடித்தார் அண்ணாச்சி.''எலியும், பூனையுமா இருக்கா ஓய்...'' என, கடைசி
விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.''யாரை சொல்றீங்க பா...'' என்றார் அன்வர் பாய்.
''அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், சாத்துார், எம்.எல்.ஏ., சுப்பிரமணியனையும் தான் சொல்றேன்... சாத்துார் தொகுதியில, எந்த டெண்டர், திட்டங்களா இருந்தாலும், அமைச்சர் தான் முடிவு பண்றார்... எம்.எல்.ஏ.,வை கண்டுக்கறதே இல்லை ஓய்...
''சத்துணவு பணியாளர் வேலைகளுக்கு கூட, எம்.எல்.ஏ., பரிந்துரை செஞ்சவாளை ஏத்துக்காம, ஒன்றிய செயலர்கள் கொடுத்த பரிந்துரைகளுக்கு தான், அமைச்சர் வேலை கொடுத்திருக்கார் ஓய்...
''அந்த கோபத்துல தான், பால்வளத் துறை மானிய கோரிக்கையில, அமைச்சரின் பதிலுரை யை புறக்கணிச்சு,
எம்.எல்.ஏ., வெளிநடப்பு செஞ்சார்... 'இவா மோதல், எங்க போய் முடியுமோ'ன்னு விருதுநகர் மாவட்ட கட்சிக்காரா புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, குப்பண்ணா முடிக்கவும், பெரியவர்கள் கிளம்பவும், சரியாக இருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement