Advertisement

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயர்வு

புதுடில்லி: சிகரெட் மீதான வரி வரியை அதிகரித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயர்கிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜெட்லி கூறியது, சிகரெட்மீதான வரி 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகரெட் விலை நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்வால் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் ஜி.எஸ்.டி.ஆய்வு கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வராத்தில் கூடும் என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (30)

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  சூப்பர். அப்படியாவது திருந்தட்டும்

 • R Sanjay - Chennai,இந்தியா

  உண்மையான சரக்கு (மது) மற்றும் சேவை (மது பரிமாற்றம்) வரியை எப்போது அமல் மடுத்தப்போகிறீர்கள்? மக்கள் தலையில் மிளகாய் அல்ல ஒரு மலையையே அரைத்துவிடுங்கள்

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த ஆளுக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுத்திருக்கவேண்டும்....கொசு தொல்லை தாங்கமுடியவில்லை...

 • Tamil - Trichy,இந்தியா

  வெள்ளைக்காரர்களால் நடு ராத்திரி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இந்த கொள்ளைக்காரர்களால் நடு ராத்திரி இந்தியாவில் சாமானிய மக்கள் வாழும் சுதந்திரம் மற்றும் பொருளாதாரம் பறி போய் கொண்டிருக்கிறது. வரி இல்லாத ஊழல் இல்லாத நாட்டுக்கு அகதியாகக்கூட போய் விடலாம் போல் இருக்கிறது. எத்தனை வரிதான் தங்குவார்கள். மக்களின் நிலை பரிதாபம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மது.. மதிமயக்கும் புகை... இவற்றின் விலை எவ்வளவு ஏற்றினாலும் விற்பனை குறையாது...

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  Exploitjing and cashing on the weakness of the addicts That is all about it.Don"t tget fooled that this is done with a noble intention .for discouraging smoking.

 • Sankara Narayanan - Bangalore,இந்தியா

  எல்லாத்தையும் நடு ராத்திரியில்தான் செய்கிறார்கள். .jetley நடு நிசியில் பிறந்திருப்பாரோ.

 • mathi - Raleigh,யூ.எஸ்.ஏ

  இந்த வரி உயர்வால் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் - ஆக அரசின் நோக்கம் கூடுதல் வருவாய் ஈட்டவே .. புகை பிடிப்பவர்களை தடுக்கவோ அல்லது மக்களை நோய்களிலிருந்து காப்பதோ இல்லை :-(

 • SaiBaba - Chennai,இந்தியா

  குடியாலும் புகையாலும் அழிந்த குடும்பங்கள் எத்தனை? Active smokers-ஐ விட passive smokers - க்கு பாதிப்பு அதிகம். IT industry-யை பொறுத்த வரையில் ஆண்கள் 90% சத வீதம் பேர் குடி சிகரெட்டுக்கு அடிமையானவர்கள்தான். க்ளையண்ட்டுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும், மேலாளருக்கு கம்பெனி கொடுக்க வேண்டும். க்ளையண்ட்டுக்கு கம்பெனி கொடுப்பதால் அவர் சந்தோஷம் அடைவார், வேலையை தக்க வைத்துக் கொள்ளலாம். மேலாளருடன் குடிக்க, புகை பிடிக்க சென்றால் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வுகளை உறுதி செய்து கொள்ளலாம். இந்த பழக்கங்களில்லாதவர்கள் IT துறையில் உயர்வது என்பது கடினம் தான். எனக்கு தெரிந்து, ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் America சென்றார், அவருக்கு உடன் குடிப்பதற்கு துணை வேண்டும் என்ற காரணத்தால் தனக்கு கீழே வேலை பார்க்கும் மற்றொருவரை இந்த விசா நெருக்கடியிலும், தன்னுடைய பரிவுரைகளை செலுத்தி அமெரிக்காவிற்கு கூட்டிக்கொண்டார். என் சகோதரியின் கணவருக்கு புகை பழக்கம் பள்ளிப்பருவத்திலிருந்தே இருந்துள்ளது.மறைத்து திருமணம் செய்தார்கள். அந்த பழக்கம் பற்றி தெரிய வந்ததும் தினம் சண்டை தான் வீட்டில். அவர் ஒரு ஆண் மகன் என்றால் ஏதாவது ஒரு பழக்கம் இருந்தே ஆகவேண்டும் என்று வாதிட்டார் - அதாவது புகை,குடி, பொம்பளை etc., அந்த வாதம் முட்டாள் தனமாகவே பட்டது இதில் என் அக்கா இதைப்பற்றி வெளியில் சொல்லக்கூடாது, குடும்ப மானம் போய் விடும் என்ற கட்டுப்பாடு வேறு. அக்காவின் மாமியாரோ, அவன் அப்படிதான் புகை பிடிப்பான், உன்னால் என்ன செய்ய முடியும்,என் குடும்பத்திற்கு இதெல்லாம் சகஜம் தான் என்கிறார். தஞ்சாவூரில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, இரு நுரை ஈரலிலும் கரும் படிவம் காணப்பட்டது. மருத்துவர் இத்துடன் புகை பிடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார். ஆனாலும் என் சகோதரியின் கணவர் விடுவதாக இல்லை.நிறைய பொய்கள், மேலும் குடிப்பழக்கமும் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண் சண்டை போடுவதால் தான் அவன் மேலும் மேலும் கெட்ட பழக்கங்கள் பழகுகிறான் என்று அவருடைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களிடையில் வக்காலத்து வேறு. சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசுவார், அது தான் எனக்கு பலம் என்பார். வருங்கால சமுதாயத்தை நினைத்தால் கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது. படிக்கும் போது தோழர்கள் வலியுறுத்தினால் அதை மறுக்கும் தைரியத்தை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அதற்கு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகுறைய வேண்டும். பெற்றோர், உடன்பிறந்தோர் தான் ஒரு பிள்ளைக்கு முதல் நண்பராக இருக்க வேண்டும்.அவர்களுக்கு இல்லாத அக்கறை வெளி நண்பர்களுக்கு வரப்போவதில்லை.நம் பிள்ளைகளை நாம் நண்பர்கள் போல நடத்துவோம், நல்ல நட்பு, கூடா நட்பு என்று வள்ளுவர் வகுத்ததை நம் வருங்கால சந்ததிக்கு எடுத்து இயம்புவோம்.இன்றைய காலத்தில் எங்கள் அலுவலகத்திலேயே, ஒரு டிபன் பாக்ஸ் உணவை ஒரு ஸ்பூன் போட்டு ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அந்த எச்சி உணவை உண்பார்கள். கேட்டால் நண்பர்களாம், உண்ணவில்லை என்றால் நட்பு வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்.அந்த நெருக்கடி எத்தனையோ முறை ஏற்பட்டிருக்கிறது. அது எச்சி உணவு, பிடிக்க வில்லை அவ்வளவு தான், அதை தைரியமாக சொல்ல நம் பிள்ளைகளின் மனதை உறுதிபடுத்த வேண்டும். தினம் தினம் நாங்கள் பல்லாயிரக்கணக்கானோருடன் வேலை பார்க்கிறோம், இந்த மாதிரி சங்கடங்கள் காலம் காலமாக சந்திக்கிறோம், நல்லது எது கேட்டது எது, என்பதை எடுத்து சொல்ல நமக்கு தைரியமும் தெளிவான மன நிலையும் வேண்டும்.  நம் பிள்ளைகளுக்கு அந்த மன தைரியத்தை ஊட்டுவோம்.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இன்னும் கூட்டணும்

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  மதுவுக்கும் ஜி எஸ் டீ வரியை ஏத்துங்க சார்.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அப்படியே தங்கத்தின் மேல் உள்ள வரியையும் ஏற்றி விடுங்கள்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  If the government implement 28% GST like cigarettes and cenima tickets to all liquor ,cricket match tickets and all tobacco items we can reduce the unnecessary expiture of the people of our country and also save the people from the dreaded cancer dicease and also make the people to lead a happy and prosperous lives in coming days.

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Highly appreciable. Like this GST of 28% is also to be taxed for movie hall in addition with the existing 'Entertainment tax'.

 • Kailash - Chennai,இந்தியா

  ஆக, எந்த பொருளும் நினைத்த நேரத்தில் வரியை ஏற்றி விடலாம். இன்று சிகரெட்... நாளை... பால், பருப்பு மற்றும் உணவு பொருள்கள்....

 • INDIAN - chennai,இந்தியா

  சிகரெட் புகை பிடிப்பது விலை ஏற்றதினால் குறையும் என்று நம்புவோம்

 • M Vadivel srisamyuktha - Karur aravakurichi,இந்தியா

  தமிழகத்தில் மதுவுக்கு ஜி.எஸ்.டி தயவு செய்து மிக மிக உயர்வாக இருக்க வேண்டும்

 • Arun Pradeep - Chennai,இந்தியா

  சூப்பர்

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  ரூ. 5 ஆயிரம் கோடி வருமானம்

 • rajan - kerala,இந்தியா

  குட் இது போல சாராய விற்பனை விலையையும் கூட்டுங்க.

 • Rajasekar - trichy,இந்தியா

  அடுத்த தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பு இருக்காது.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  எதைமறைக்க இந்த "Smoke Bomb " ஓ?

 • Senthilnathan -

  cigarette causes cancer. thiis is announced by government. but they sales. what is this nonsense? please ban the cigarette and tasmac like lottery ticket

 • அப்பாவி -

  வரிதானே...போடுங்க...தம் அடிப்பவர்கள் இதையும் ஊதித் தள்ளிடுவாங்க...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சூப்பர்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement