Advertisement

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் வெங்கையா நாயுடு

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் இன்று முடிந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ. பார்லிமென்ட் போர்டு கூட்டம் பா,ஜ. தலைமையில் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக காங். தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.


வெங்கையா நாயடு தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (30)

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் போலி சிறுபான்மை ஆதரவாளர்களை ராணுவம் காஷ்மீரில் மனிதக்கேடயமாக பயனபடுத்தவேண்டும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவர்தான் வேட்பாளர் என்று இவருக்குத் தெரியுமுன்பே எடப்பாடியின் ஆதரவு கிடைத்துவிட்டது பாவத்திலிருந்து தப்பிக்க நம்ம ஆட்கள் காலில் விழுவது கட்டுமல்ல

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  ஒரு டீம்ல 11 பேரு யார் யாருன்னு விவாதம் நடத்தலாம்... ஏன் சண்டை கூட போடலாம்.... 14 ஆவது இல்லை 15 ஆவது ஆளு யாருன்னு இவ்வளவு அக்கப்போரா? தாங்க முடியலைடா சாமி

 • balaji -

  he is good person but past week also he told I not contest vice president election and I not like that post but why now only he accepted because gandhiji grand son got more votes than bjp candidates so only choose Naidu

 • suresh - chennai,இந்தியா

  அத்வானி , ஜோஷிக்கு பெப்பே

 • murugu - paris,பிரான்ஸ்

  தமிழக மக்களே கொதித்து எழுங்கள் இன்று அந்த சிறுபெண்ணுக்கு நேர்ந்த கதி நாளை நமது குடும்பத்திலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எடுபிடி அரசு அடிக்கும் கொள்ளைக்கு குண்டர் சட்டம் இல்லை இயற்கை வளத்தை காக்க சொன்ன பெண் பிள்ளைக்கு குண்டர் சட்டம் இது என்ன ஆட்சியா ?பினாமி சரண்டர் அரசு செய்யும் சர்வாதிகார செயல் மக்களை (மத்திய அரசு செய்வது போல் )முட்டாளாக்கும் செயல் இதற்க்கு நீதிமன்றம் தானாகவே தலையிட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் அடிமை அரசை மக்கள் எல்லோரும் சேர்ந்து போராடி தூக்கி ஏறிய வேண்டும்

 • அப்பாவி -

  நாயுடு, காந்தின்னுட்டு...இன்னும் ஜாதி ஒழியவில்லை...ஒழியாது கூட.

 • ஐயப்பன்கரூர் -

  தி பெஸ்ட் வெங்கையா நாடு

 • suresh - chennai,இந்தியா

  அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி பாவம்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ராஜ்ய சபாவை நல்லபடியாக நடத்த சரியான தேர்வு...அன்சாரி, குரியன் இருவரும் மேலவையை சரிவர நடத்தவே இல்ல...தடுக்கி விழுந்தால் சபையை ஒத்தி வைக்க மட்டுமே செய்தனர்...

 • M Vadivel srisamyuktha - Karur aravakurichi,இந்தியா

  சரியான தேர்வு பல எதிர்கட்சிகளிடமும் சுமூக நட்புடன் பழககூடியவர் நிச்சயம் சமமான போட்டி உருவாக்க கூடியவர் சிறந்த தேர்வு.நிச்சயம் குறைத்து மதிப்பிட முடியாது வெற்றி பெறுவாரா என்று பார்ப்போம்

 • அரபி அடிமை - Chennai,இந்தியா

  JEYAM நீ கடைசிவரைக்கும் இப்படியே வயித்தெரிச்சல் பட்டெ சாவு..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நல்லா தனே போய்க்கிட்டு இருந்தது?எதற்கு இந்த "Big Boss " வெளியேற்றம்?

 • balakrishnan - Mangaf,குவைத்

  ஆல் தி பெஸ்ட் JI

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  though tough Naidu should win - Kovind has already won

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  வெங்காய நாயுடுவை, தமிழர் ராஜாஜி பேரன் எளிதாக வெல்வார்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இனி மாநிலம் மாநிலமாக ராஜ்யசபா இடத்துக்கு அலைய வேண்டாம்..நன்றாக தானே அமைச்சர் பணி ஆற்றினார்?

 • MariappanSwamynathan -

  கொஞ்ச கூட தகுதியே இல்லாத மனிதர்... காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எதிர்த்தவர்.. தமிழ் நாட்டு எம் எல் ஏ, எம் பி கள் அனைவரும் இவருக்கு ஆதரவு தரகூடாது

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  வாழ்த்துக்கள்... காங்கிரஸ் கூஜாக்கள் பலருக்கு வயிறு எறியும்.

 • karunchilai - vallam,இந்தியா

  நினைத்தபடியே. சரியான தேர்வு.

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Good choice and he is a good parliamentarian. He will handle majority opposition parties in 'Rajya sabha.

 • yaaro - chennai,இந்தியா

  பாராளுமன்ற நடைமுறைகள் நன்கு அறிந்தவர் ..ராஜ்ய சபாவில் NDA மஜோரிட்டி இல்லை ..அந்த சிக்கலை சமாளிக்கும் வல்லமை கொண்டவராக இருப்பார் என்ற நம்பிக்கை போலும்..பார்க்கலாம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மீரா வா?... கோவிந்தா வா ?......காந்தியா ?... நாயுடுவா ?...இந்த கேள்விகளில் . எனது சாய்ஸ்...."மீராவும் காந்தியும்" தான் .....ஆனால் பாஜகவினர் "நாயுடு கோவிந்தா கோவிந்தா" தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களே?. என்ன செய்ய ?

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  கிடைத்தது யோகம் வெங்கையா அவர்களுக்கு ..

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மும்மூர்த்திகள் ஒன்னு கூடியாச்சு...., ராவோட ராவா இந்தியா ஒலகத்துல அமெரிக்காவெ பின்னாடி தள்ளிட்டு Super Power ஆ ஆயிடும் பாருங்க....

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  அப்பாடா ஒருவழியா அடுத்த தலையாட்டி பொம்மையை ரெடி பண்ணிட்டாங்க. இவரால் இனி காவேரி பிரச்சனை பத்தி கர்நாடகாவுக்கு சாதகமாக பேசமுடியாதே..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement