கொச்சி: நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். துவக்கத்தில் கேரளாவில் அவருக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. ஆனால், திடீரென அவர் அடைக்கப்பட்டுள்ள ஆலுவா சிறை முன் ஆதரவாளர்கள், ரசிகர்கள் என சிலர் கூடி, கோஷம் போட்டு வருவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கூட்டத்திற்கு நகை கடை உரிமையாளர் ஒருவரும், சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் ஏற்பாடு செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மெமரி கார்டு கிடைத்தது
நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட போது, அதை பல்சர் சுனில் வீடியோ எடுத்து இருந்தான். அந்த காட்சிகள் ஒரு மெமரி கார்டில் இருந்தது. அந்த மெமரி கார்டு தற்போது போலீசார் வசம் உள்ளது. பல்சர் சுனில் மற்றும் நடிகர் திலீப்பிற்கு உதவிய வழக்கறிஞர் பிரதீஷ் சாகோ என்பவரிடம் தான் அந்த மெமரி கார்டு இருந்தது. அவரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். பின் அவரது ஜூனியர் வழக்கறிஞர் ராஜு ஜோசப்பிடம் இருந்த மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால், அதில் எந்த வீடியோ காட்சிகள் ஏதும் இல்லை. வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டதா என்பது குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களிடம் விசாரணை
திலீப் விவகாரம் தொடர்பாக நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், மற்றொரு எம்.எல்.ஏ., அன்வர் சதாத் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகர் முகேஷிடம் கார் டிரைவராக பணியாற்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப், திரிச்சூர் மாவட்டம், சாலுகுடி என்ற இடத்தில் ஒரு மல்டிபிளக்ஸ் கட்டடம் கட்டி உள்ளார். இதற்கு சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என கேரள விவசாய துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
போலீசுக்கு பக்கவாதம்
ஆலுவா நகர் அருகே கோட்டாரகடவு என்ற இடத்தில் நடிகர் திலீப்பின் வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கூடுதல் எஸ்.ஐ., குஞ்சு முகமது,55, என்பவருக்கு நேறறு காலை திடீரென பக்தவாத பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு மனோஜ் நாரயண பணிக்கர் தலைமையிலான மருத்துவ குழு அறுவை சிகிச்சை நடத்தி உள்ளது.
பெரிய எடத்துல வேல பாக்கறதும் ஆபத்து...போட்டுத் தள்ளிடறாங்க...