Advertisement

காஷ்மீரில் மீண்டும் பாக்., தாக்குதல்

காஷ்மீர் ; 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள துருப்புகள் மீது 2 வது முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று காலையில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாக்., தாக்குதல் நடத்தியது. இன்று மாலை யூரியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளது. இந்திய படையினர் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் காயமுற்றதாக தெரிகிறது. இன்று காலை இரு நாட்டு லெப்டினட் அளவிலான பேச்சு நடந்தது. இருப்பினும் பயன் இல்லாமல் மாலை தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ஒரு வேளை பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி வந்தால் இங்கு இருக்கும் பலர் பாகிஸ்தானுக்கு பரிவாக தான் பேசுவீர்கள்.. அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும், அதற்கு தான் இந்த போர் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள்... நாம் எதிரிகளிடம் தோற்பதில்லை ஆனால் துரோகிகளிடம்...

  • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

   இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் தான் போர். பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் இல்லை. கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.. எல்லையில் உயிர் துறக்கும் 5 பேரில் ஒருவர் தமிழர்.. ஆனால் 1000 பேரில் ஒருவர் கூட குஜராத்தி கிடையாது. இதிலிந்தே தெரியும் யாருக்கு தேசப்பற்று அதிகம்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  நம்ம பக்தாஸ்களிடம் ஆளுக்கொரு தடியை கொடுத்து எல்லை பக்கம் அனுப்பி வைத்தால் பாக் ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளும் துண்டை காணோம் துணியை காணோம் என்று பலுசிஸ்தான் எல்லை வரை ஓடியே போய் விடுவார்கள்.......அதிலும் அக்னி சிவாவின் மூர்க்கனே என்ற கர்ஜனையை கேட்பவன் உயிரோடு திரும்புவது கஷ்டம்.....

  • ஓணான் - chennai,இந்தியா

   ஆமாங்க. நாம அவர் கிட்ட கம்பைக் குடுத்துப்புட்டு இங்கன சொகமா உக்காந்து அவரை கலாய்ச்சி கமெண்ட் போடலாம். அதைத்தானே செஞ்சிக்கிட்டிருக்கோம்? அதுலயும், மத்திய அரசையும், ராணுவத்தையும் தரம்தாழ்ந்து விமர்சனம் செஞ்சிட்டா நாம உடனடி ஹீரோ தான? இந்த விஷயத்துல ஜமாய்ச்சுறமாட்டோமா ஜமாய்ச்சி

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   தேவாங்கு வாயை பொத்து....ஏதோ, நம்ம ராணுவத்தை இந்த மத்திய அரசு தான் கண்டுபிடித்தது போல பேசாதே... ராணுவ அதிகாரிகள், ஜவான்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்காமல் டபாய்த்ததாக ஒரு வீடியோ வந்ததே ? அந்த அதிகாரிகள் மீது அப்போது ராணுவ அமைச்சராக இருந்த பாரிக்கர் என்ன நடவடிக்கை எடுத்தார்... இப்போது ஜெட்லீ என்ன நடவடிக்கை எடுத்துவிட்டார் ?.. முதல்ல அத சொல்லு...

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இது தானே தொடர்கதையாக நடக்கிறது..... பாக்கிஸ்தான் பாகிஸ்தான்னு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இப்போது சீனாவை சமாளிக்கவே நேரம் பத்தலை..

  • ஓணான் - chennai,இந்தியா

   //இது தானே தொடர்கதையாக நடக்கிறது..... பாக்கிஸ்தான் பாகிஸ்தான்னு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இப்போது சீனாவை சமாளிக்கவே நேரம் பத்தலை..// இதை எல்லாம் துபாயில உக்காந்துக்கிட்டு சொகமா கமெண்ட்டா போடலாம். நம்ம ராணுவத்துல ஒரு நாள் இருந்துபாருவே, தெரியும். வந்துட்டானுவ.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இதுபோன்று MMS காலத்தில் நடக்கும்போது, பாஜகவினர் " பாக்குடன் போர் நடத்துங்கள் " என்று கூப்பாடு போடுவதுண்டு... ஆனால் இப்போது மட்டும் ஏனிந்த மயான அமைதி ?

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

   அதுவா...அவனுகளை பார்த்து ரெம்ப பயமா இருக்கு...இது தானே நீ எதிர் பார்த்தே......போதுமா. ?

 • sundaram - Kuwait,குவைத்

  தக்க பதிலடி கொடுக்கப்படும் மீண்டும் பிரதமர் அறிவிப்பு

 • anand - Chennai,இந்தியா

  உலகத்தை அழிக்க பிறந்த மூடங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement