Advertisement

இந்திய கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் தாது பொக்கிஷங்கள்

கோல்கட்டா : இந்தியாவை சுற்றி உள்ள கடல் பகுதியில், நீருக்கு அடியில் விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள் மில்லியன் டன் கணக்கில் கொட்டிக் கிடப்பதாக இந்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய விலை மதிப்பற்ற, அரியவகை உலோகங்களும், தாதுக்களும் மங்களூரு, சென்னை, மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்ச தீவு பகுதிகளில் ஏராளமாக இருப்பதாக 2014 ம் ஆண்டு முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுண்ணாம்பு கல், சக்திவாய்ந்த பாஸ்பேட், கிருமி நாசினிகள், ஹைட்ரோ கார்பன்கள், உலோக படிவங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் நிறைந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் 181,025 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டது. இதில் 10,000 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உலோகங்கள், தாதுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவை ஒட்டிய மன்னார் வளைகுடா, லட்சதீவு, அந்தமான் கடல் பகுதிகளிலேயே இந்த பொக்கிஷங்கள் அதிகம் நிறைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (41)

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  ஸ்ஸ் சத்தம்போடாதிங்க அங்கேயும் நெடுவாசல் மாதிரி போராட்டக்குழு போராட ஆரம்பிச்சுருவானுக

 • bairava - madurai,இந்தியா

  ஆமாம் அதற்கு தான் தமிழக கடலோர மாவட்டங்களை அழிக்க திட்டம் கொண்டுவந்தீங்க அப்புறம் அணைத்து வளங்களையும் அந்நிய கார்பொரேட் நிறுவனுங்களுக்கு எடுத்து கொடுக்கணும் ..தமிழ் நாடு நாசமா போகணும் ...போங்கடா

 • Iyyappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கட்ச தீவுல் ஆயில் இருக்கு. முதலில் அத போய் ....

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  மணல் திருடன் VV மூக்கு வேத்துருக்குமே

 • sundaram - Kuwait,குவைத்

  ஹைட்ரோ கார்பன்கள், என்பது தாது வகையை சார்ந்ததா?

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  கடல் பகுதி ஒண்ணுதான் ஒழுங்கா இருந்தது... திராவிட கட்சிகள் இப்போ எலும்புத்துண்டை பார்த்த மாதிரி ஓடுவாங்க...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அவைகளை கனிம வள கொள்ளையர்கள், ஆங்காங்கே கடலில் கனிமங்களை ஆட்டைய போடுவார்கள். ஆதற்கு சில பெரியவான்கள் ரகசிய ஆதரவு தருவார்கள். அப்படி சம்பாதித்த கருப்பு பணம் அனைத்தும், ஹவாலா வழிகளில் வெளிநாடுகளுக்கு வெளியேறும். எப்பவும் போல இதை செய்தியாக கட்டுரையாக வாசகர் கடிதங்களாக கருத்துக்களாக மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கும். சரிதானே வாசகர்களே?.

 • srisubram - Chrompet,இந்தியா

  ஐயா இதை எதுக்கு இவ்வளவு செலவு செஞ்சு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சீங்க ? அதான் நம்ம தூத்துக்குடி பிரதெரஸ்க்கு தெரியுமே ..ஐயோ ஐயோ நான் கூட என்னமோ கண்டு பிடிச்சுட்டாங்க னு .....

 • Appu - Madurai,இந்தியா

  இதை எல்லாம் வெளிப்படுத்தாம சீக்ரட்டா எடுங்க.. இல்லேன்னா சப்பை மூக்கன் சீனனும் உலக நாட்டாமை அமெரிக்கனும் இதற்கு ஏதாவது ஒரு முடிவுகட்டி இந்தியா அதை அனுபவிக்க இயலாதவாறு செய்துவிடுவார்கள்.....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உஷ்... சத்தம் போட்டு சொல்லாதீங்க... சீனா இந்திய கடலை சொந்தம் கொண்டாட போகிறது.....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  திரு வைகுண்டராஜன் அவர்களின் யோசனை வரவேற்கப்படுகிறது,. டி ஆர் பாலுவின் மண் அள்ளும் கப்பலுக்கு தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறது. அவர் இதில் பங்குதாரர் ஆனால் இனி ஈரேழு பரம்பரைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்குமே.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  சீனாவுக்கும் அமெரிக்கனுக்கும் இப்பவே மூக்கு வேர்க்குமே....

 • N.K - Hamburg,ஜெர்மனி

  இதை திரு கலாம் ஐயா அவரின் இந்தியா 2020 புத்தகத்திலேயே சொல்லி இருக்கிறார். மின் உற்பத்திக்கு யுரேனியத்தை பயன்படுத்துவதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நம் மக்கள் தான் போராடி எல்லாவற்றையும் துரத்தி விடுவார்கள் அல்லது கும்பலாக அள்ளி வெளியே விற்றுவிடுவார்கள்.

 • yaaro - chennai,இந்தியா

  " சுண்ணாம்பு கல், சக்திவாய்ந்த பாஸ்பேட், கிருமி நாசினிகள், ஹைட்ரோ கார்பன்கள், உலோக படிவங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் நிறைந்திருப்பது தெரிய வந்தது." - அது என்னாப்பா கிருமி நாசினிகள் ? என்ன ஆன்டி பயாடிக்ஸ்சா ? அது ஒரு படிவமா இருக்குமா ? யாருப்பா உங்க தமிழாக்கம் பண்ணற தமிழ் அறிஞர் ????

 • Balaji - Khaithan,குவைத்

  இதையும் குடைந்து எடுத்து சீரழிக்காமல் இருக்க வேண்டும்............

 • Prabakaran Srinivasan - Madurai,இந்தியா

  மணல் மாபியாக்களின் அடுத்த குறி....??

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  இது மன்னார்குடி க்கு தெரியுமா..?

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  இதெல்லாம் நீங்க கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாடியே.. வி வி மினரல்ஸ் க்கு தெரியும்.. போங்க சார்... நீங்க ரெம்ப லேட்டு..

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  அப்பறம் என்ன, அடுத்து தோண்ட, ஆட்டைய போட இடம், திட்டம் கிடைச்சாச்சு.

 • Pats - Coimbatore,இந்தியா

  Any treasure in Tamilnadu coast belong to Tamils only. We will hold indefinite dharma for the eviction of GSI. We did the same with Sterlite Industries, with TATA Minerals, with ONGC for Gas Pipeline, Methane Extraction and Hydro-Carbon exploration. We will fight tooth and nail with neighboring Sri Lanka for Kutch Island, with Kerala for Mullai Periyar Dam, with Karnataka for Kavery river, with Andhrapradesh for Palar river, with Delhi against Hindi and NEET. But we will always demand Delhi to give more money. After getting the money we swindle 90% of it. If the center questions, we will say don't interfere in our state affairs. If SC says don't hurt Bulls, we will cry that Bulls are like our children, we don't harm them, but still conduct Jallikkattu. When the central government regulate sale of cattle we will conduct Beef eating festival. We are Tamils. We are unique. We are irrational & illogical.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  செரியூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து அணுவுலை செயல்பட்டால் யுரேனியம் சிதைந்து பல கதிரியக்க கழிவுகள் மிஞ்சும்... ஆனால் தோரியத்தை வைத்து செய்யும் உலைகள் மிக பாதுகாப்பானவை. கடைசியில் மிஞ்சும் கழிவும் யுரேனியம் தான்.. இந்தத்தொழில் நுணுக்கத்தை மேம்படுத்தினால் இன்னும் வரும் ஆயிரம் ஆடுகளுக்கு கூட நாம் தான் கிங்... ஏனென்றால் தோரியம் உலகில் அதிகமாக இருப்பது இந்தியாவில் தான். அதுவும் இந்தியப்பெருங்கடல் பகுதியில் ஏராளம்...

 • amuthan - kanyakumari,இந்தியா

  பட்டா போட புதிய இடம் கிடைத்துள்ளது

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  உடனடியாக இதையெல்லாம் வெட்டி எடுத்து , ஏலம் முறையில் அனைத்து வளங்களையும் விற்க வேண்டும்.... கண்டிப்பாக இதை அடுத்த 5 ஆண்டுக்குள் நமது மோடி ஜி செய்ய வேண்டும்... இல்லையேனில் பின்னால் வருபபவர்கள் நற் பெயரை வாங்கி கொள்வார்கள்.. நாம் டிஜிட்டல் துறையில் முன்னேறுவதால் Make in India திடத்தால் அனைத்தையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து அனைத்து வளங்களையும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாரிக்கலாம், வரி வருவாயும் கிடைக்கும். தொழிலதிபர்களும், பல உழைப்பாளிகள் அன்றாடங்காய்ச்சிகளும் வேலை கொடுப்பார்கள்...

 • NPOOMALAI - Al ain,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த அனைத்து வகையான விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள், இருந்த நாடு நமது " குமரி கண்டம்," ancient Tamil and Sanskrit லிட்டரேட்டுல , அழகாக சொல்லியிருப்பார்கள், அப்படி இருந்த நமது தமிழ் நாட்டை, இன்று கூறுபோட்டு விக்கிறார்க்கள்,

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆகா , அமைதியாக இருக்கும் கடலும் கண்ணில் பட்டுவிட்டதா ? இனி மணல் குவாரி , கல் குவாரி கதி தான் கடலுக்கும் . மீனவர்கள் கதி அதோகதி தான் . கடல் கலங்கும் , மீனவர்கள் வாழக்கையும் சேர்த்துதான் ? உருவாக்குவது முடியாது ? இருப்பதை அழிப்பதுதான் அறிவியல் ? கடல் அன்னை தாங்குவாளா ?

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  வளங்களை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அப்படினா வடஇந்தியாவை கழட்டி விட்டுவிட்டு தான் தாது மணலை எடுக்கோணும்... இல்லைன்னா அதானி வகையறா குஜராதிங்க ஓடிவந்துருவானுங்க...

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  அப்போ இனி வேட்டை ஆரம்பம் தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement